Tuesday 10 April 2018

மத்திய அரசின் சான்றிதழ் வழங்கும் விழா 

கல் போன்ற மனித மூளையை ஆற்றல் மிக்கதாக மாற்றுபவர்கள் ஆசிரியர்களே 



மரம் வாழ்ந்தால்தான்  மனித வாழ்க்கை சிறக்கும் 

வேளாண் அறிவியல் நிலைய தலைவர் பேச்சு

மத்திய நீர் வாரியத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி: சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு! 

தேவகோட்டை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  பள்ளியில் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் சார்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது. இதில் ஏரளாமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
                                தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைநிலை பள்ளியில்  மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் ஆசிரியை செல்வமீனாள் வரவேற்புரை வழங்கினார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் விழாவிற்கு தலைமை தாங்கினார்.
 விழாவில் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவரும்,பேராசிரியருமான செந்தூர் குமரன் ஓவிய போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினர். மத்திய நீர்வாரியம் சார்பில் நீரை சேமிப்போம், வருங்காலம் காப்போம் என்ற தலைப்பில் நீர் வண்ண பூச்சு ஓவிய போட்டிகள் நடைபெற்றது.6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட இந்த போட்டியில் பள்ளி அளவில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இப்போட்டிகளில் பள்ளி அளவில் முதல் பரிசினைரஞ்சித்தும்  இரண்டாம் பரிசினை நந்தகுமாரும் , மூன்றாம் பரிசினை அபிநயாவும் பெற்றனர். விழாவின் நிறைவாக ஆசிரியை முத்துமீனாள்  நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் நிலத்தடி நீர் வாரியம் சார்பாக நடைபெற்ற ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் செந்தூர் குமரன் சான்றிதழ்களை வழங்கினார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உள்ளார்.

 மேலும் விரிவாக : 
                                     மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் சான்றிதழ்களை வழங்கி குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவரும் ,பேராசிரியருமான செந்தூர் குமரன் மாணவர்களிடம் கல் போன்ற மனித மூளையை ஆற்றல் மிக்கதாக மாற்றுபவர்கள் ஆசிரியர்களே என்றும், மரம் வாழ்ந்தால்தான்  மனித வாழ்க்கை சிறக்கும் என்றும் பேசினார்.அவர் மேலும் கூறுகையில் ,
                       
ஆசிரியர்களே சிற்பிகள் :

 கல் போன்ற மனித மூளையை ஆற்றல் மிக்கதாக மாற்றுபவர்கள் ஆசிரியர்களே
                                               பிறந்த குழந்தையின் மூளை எந்த ஆர்வமும் இல்லாமல் இருக்கும்.ஒரு கல்லை எப்படி சிற்பி செதுக்கி அழகான சிற்பமாக மாற்றுகின்றாரோ அது போன்றுதான் சிறிய வயதில் இருக்கும் குழந்தையின் மூளையை ஆசிரியர்கள் அறிவு என்னும் உளி கொண்டு செதுக்கி ஆற்றல் மிக்க மூளையாக வளர்ச்சி பெற செய்கிறார்கள்.தொடக்க நிலையில் உள்ள ஆசிரியர்கள் கற்று கொடுத்ததை வைத்துதான் மிகப் பெரிய அறிஞர்கள் உருவாகி உள்ளார்கள்.எனவே சிறிய வயதில் உள்ளபோதே ஆசிரியர்கள் சொல்வதை கேட்டு உங்கள் மூளையின் ஆற்றலை வளர்த்து கொள்ளுங்கள் .


நீரை சேமியுங்கள் :
                                    நீர் இல்லாமல் உலகம் இல்லை.இப்போதே நீங்கள் அனைவரும் நீரை சேமிக்க கற்றுக்கொள்ளுங்கள்.உங்கள் வருங்கால சந்ததி தண்ணீருடன் வாழ்க்கை நடத்த உங்களின் இன்றைய நீர் சேமிப்பு முக்கியம்.தெருவில் நீங்கள் நடந்து செல்லும்போது ஏதேனும் குழாயில் தண்ணீர் வடிந்தால் அதனை நிறுத்தி விட்டு செல்லுங்கள்.உங்கள் அப்பாவோ,அம்மாவோ பல் துலக்கும்போது பைப்பை திறந்து விட்டு ,அதனை மறந்த வாகில் பல் தேய்த்து கொண்டு இருந்தால் நீங்கள் சென்று தண்ணீரை அடைத்து விடுங்கள்.குளிக்கும்போதும், அன்றாட வாழ்க்கையில் மற்ற தேவைகளுக்கும் தேவையான தண்ணீரை பார்த்து செலவு செய்யுங்கள்.நீரை சேமியுங்கள்.

மனிதனின் ஒரு நாளைய தண்ணீரின் தேவை எவ்வளவு?
                                   பொதுவாக மனிதனின் ஒரு நாளைய தண்ணீரின் தேவை என்று சொல்லப்படுவது சுமார் 35 லிட்டர் மட்டுமே.ஆனால் நாம் தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒவ்வொரு மனிதரும் சராசரியாக 78 லிட்டர் தண்ணீர் பயன்படுத்துகிறோம்.நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் ஒரு நாளைய மொத்த தண்ணீரின் தேவை என சொல்லப்படுவது வெறும் 150 லிட்டர் மட்டுமே.ஆனால் நாம் ஒரு நாளைக்கு சுமார் 300 லிட்டர் தண்ணீரை ஒரு குடும்பத்துக்கு பயன் படுத்துகிறோம்.இது போன்று நிலை நீடிக்குமானால் தண்ணீர் தட்டுப்பாடு விரைவில் அதிகமாகும்.எனவே நாம் தண்ணீரை சிக்கனமாக அனைவரும் பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.ஒரு நாளைக்கு 35 லிட்டர் பயன்படுத்தும் வகையில் நமது தேவையை நாம் மாற்றி கொள்ள வேண்டும்.

மாணவ பருவத்தில் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
                                                ஒவ்வொரு மாணவரும் 6 முதல் 12 வயது வரை பெண்கள் சுமார் ஒன்றரை லிட்டரும் ,ஆண்கள் இரண்டு லிட்டரும் ,பெரியவர்கள் சுமார் மூன்று லிட்டர் தண்ணீரும் குடிக்க வேண்டும்.அப்போதுதான் உங்களது உடல் நல்ல நிலையில் இருக்கும்.தண்ணீர் போதிய அளவில் குடிப்பவர்கள் மருத்துவரிடம் செல்ல வேண்டிய தேவை இருக்காது.

தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் ;
                       தண்ணீரை நன்றாக குடித்தால் உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.நம் உடம்பில் இயல்பான நிலை தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால் தண்ணீர் நன்றாக குடிப்பவர்களாக இருக்க வேண்டும்.தண்ணீர் போதிய அளவுக்கு நமது உடம்பில் இருந்தால் மலச்சிக்கல்,சிறுநீரக எரிச்சல் போன்றவை இருக்காது.உடலின் அனைத்து உறுப்புகளும் நன்றாக செயல்பட தண்ணீர் மிக,மிக அவசியம் ஆகும்.

நிலத்தடி நீரை அதிகப்படுத்துவது எவ்வாறு ?
                                     தற்போது தமிழ்நாட்டில் நிலத்தடி நீரின் அளவு அதிகமாகி கொண்டு செல்கிறது.6000 கன அடி தண்ணீர் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 600 கன அடி  தண்ணீர்தான் உள்ளது.இது மிகவும் குறைவு ஆகும்,மழைநீர் சேகரிப்பு திட்டத்தை ஒவ்வொருவரும் வீடுகளில் சென்று தீவீரமாக செயல்படுத்த வேண்டும்.அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.சென்னையில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தினால் ஐந்து முதல் ஆறு அடி  நீர் மட்டம் அதிகமாகி உள்ளது.எனவே நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க தீவீர முயற்சிகள் எடுக்க வேண்டும்.

மரம் இருந்தால் மட்டுமே மனிதன் வாழ முடியும் ;
                               மரங்கள் அதிகமாக வளர்த்தால் தான் மழை அதிகம் பெய்யும்.மரங்களுக்கு மட்டுமே அந்த சக்தி உள்ளது.மரங்களை சுற்றி ஒரு ஈரப்பதமான சூழ்நிலை உண்டாகும்.அது மேல் நோக்கி செல்லும்.அதன் வழியாக வானம் வெண்ணிறத்தில் இருந்து கரு மேகமாக மாறும்.அங்கு மேகங்கள் இணைந்து மழையாக மாறும்.எனவே மரங்கள் அதிகமாக வளர்த்தால் மட்டுமே மனிதன் வாழ முடியும்.
                          நீரை சேமித்து,சுற்று சூழலை பாதுகாத்து பூமி தாயை காப்பாற்ற நாம் அனைவரும் இணைந்து முயற்சி எடுப்போம்.இவ்வாறு பேசினார்.


                                                                    

 

No comments:

Post a Comment