Monday 12 February 2018

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 


தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.



        விழிப்புணர்வு நிகழ்விற்கு வந்தவர்களை ஆசிரியர் கருப்பையா வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை போக்குவரத்து  காவல் சார்பு  ஆய்வாளர் முருகேசன்  மாணவர்களிடம் பேசுகையில்,  நீங்கள் சிறுவயது முதலே சாலை விதி முறைகளை தெரிந்து கொண்டு அதனை மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள்.மனித உயிர் விலை மதிக்க முடியாதது.நாம் நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று பேசினார்.காவலர்கள் கலா மற்றும் ராஜ்குமார் மாணவர்களுக்கு பத்து வகையான முக்கிய சிக்னல் தொடர்பாக நேரடி செயல் விளக்கம் அளித்தனர். மாணவர்கள் கோட்டையன்,ரஞ்சித்,காயத்ரி,கார்த்திகேயன்,உமாமகேஸ்வரி,ராஜேஷ்,உட்பட பல மாணவ,மாணவியர் தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.



பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் முருகேசன் ,காவலர்கள்  கலா மற்றும் ராஜ்குமார் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வில்  நேரடி செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.










மேலும் விரிவாக :

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு  விழிப்புணர்வு நிகழ்வு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

 
       தேவகோட்டை போக்குவரத்து  காவல் சார்பு  ஆய்வாளர் முருகேசன்  மாணவர்களிடம் பேசுகையில், 

                      சாலை பாதுகாப்பு ஒரு வாக்கியம் அல்ல ! வாழ்க்கையின் வழி ! என்கிற ஸ்லோகத்தை மனதில் நிறுத்தி கொள்ளுங்கள்.வீட்டை நினைத்து கொண்டு சாலையில் பயணம் செய்யாதீர்.அறிவியல் தொழில் நுட்பம் வளர,வளர மனித உயிர்கள் வேக,வேகமாக பலியாகி கொண்டிருக்கிறது.காரணம் தவறான முறையில் வாகனம் ஓட்டுவது ஆகும்.எனவே நீங்கள் சிறுவயது முதலே சாலை விதி முறைகளை தெரிந்து கொண்டு அதனை மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள்.மனித உயிர் விலை மதிக்க முடியாதது.நாம் நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும்.சாலை போக்குவரத்தில் எச்சரிக்கை சின்னங்கள் 37 ம், உத்தரவு சின்னங்கள் 38 ம் ,தகவல் சின்னங்கள் 16 என மொத்தம் 91 சின்னங்கள் உள்ளன. சைக்கிளில் செல்லும்போது ஒருவர் பின் ஒருவராக செல்ல வேண்டும்.குறுகலான தெருக்களில் இருந்து நெடுஞ்சாலைக்கு வரும்போது நாம்தான் பார்த்து மிக கவனமாக வரவேண்டும்.வாகனம் ஓட்டுவதற்காக எடுக்கும்போதே வாகனத்தில் ப்ரேக் இருக்கிறதா,டயர்களில் காற்று இருக்கிறதா என செக் செய்து கொள்ள வேண்டும்.என்று பேசினார்.

                      காவலர்கள் கலா மற்றும் ராஜ்குமார் பத்து வகையான முக்கிய சிக்னல் தொடர்பாக குறிப்பக இடது கை சாலையை கடத்தல்,முன்னால் செல்லும்  வாகனம் வருவதை கையை தூக்கி நிறுத்துதல், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் வரும்போது இரண்டு கைகளையும் தூக்கி அனைத்து வாகனங்களையும் நிறுத்தி குறிப்பிட்ட வாகனத்துக்கு வழி விடுதல் போன்ற தகவல்களை  நேரடி விளக்கம் அளித்தார்.இரவில் மிளிரும் கையுறைகள் , பகலில் பயன்படுத்தும் கையுறைகள், இரவில் மிளிரும் சிக்னல் தொடர்பான விளக்குகள், பாதிப்பு ஏற்பட்ட வாகனத்தை அறிந்து கொள்ளும் வகையில் உள்ள கூம்பு வடிவங்கள் என அனைத்து தகவல்களையும் நேரடியாக விளக்கி கூறினார்கள்.

No comments:

Post a Comment