Sunday 18 February 2018

அறநூல் ஒப்புவித்தல் போட்டி

தேவகோட்டை பள்ளி சாதனை

தமிழ்நாடு அரசு தனி  பேருந்து மூலம் தேவகோட்டையில் இருந்து காரைக்குடிக்கு சென்று போட்டியில் பங்கேற்று அதிக பரிசுகளை குவித்து மாணவர்கள் சாதனை

 தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக போட்டி போட்டு வெற்றி பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி மாணவ,மாணவியர்

 

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளியில் அறநூல் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக இப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை செய்வது குறிப்பிடத்தக்கது.

            பாராட்டு விழாவிற்கு வந்தவர்களை ஆசிரியை முத்து மீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர்  லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.  காரைக்குடி தமிழ்ச் சங்கம் சார்பாக காரைக்குடியில் நடைபெற்ற அறநூல் ஒப்புவித்தல் பள்ளிப் பரிசு போட்டிகளில் ஆத்திசூடி,கொன்றைவேந்தன்,வெற்றி வேற்கை ,மூதுரை,நல்வழி,நன்னெறி,நீதி நெறி விளக்கம்  ஆகியவற்றை மனனம் செய்து கருத்துடன் தெரிவித்து பரிசு பெற்ற மாணவ,மாணவியர் பதினெட்டு பேருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.நிறைவாக ஆசிரியை செல்வமீனாள்   நன்றி கூறினார்.
                 தமிழகத்தில் மாணவர்கள் மறந்து போன தமிழ் அறநூல்களை இளம் பிள்ளை பருவத்திலே பள்ளிகளில்  படிக்க செய்து அதனை போட்டியாக வைத்து பரிசுகள் மற்றும் சான்றிதல்கள் வழங்கி  தொடர்ந்து நடத்தி வரும் காரைக்குடி தமிழ் சங்க தலைவரும், அழகப்பா பல்கலை கழகத்தின் தொலை தூர கல்வி மையத்தின் இயக்குனருமான (பொறுப்பு ) பேராசிரியருமான  ராசாராம் மற்றும் அவரது குழுவினர்க்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பட விளக்கம் : அறநூல் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி மாணவ,மாணவியர் சான்றிதழ் மற்றும் பரிசு பொருள்களுடன் உள்ளனர்.


மேலும் விரிவாக :  
அறநூல் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  பாராட்டு விழா 

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வெற்றி பெற்று சாதனை

தமிழ்நாடு அரசு தனி  பேருந்து மூலம் தேவகோட்டையில் இருந்து காரைக்குடிக்கு சென்று போட்டியில் பங்கேற்று அதிக பரிசுகளை குவித்து மாணவர்கள் சாதனை

 பள்ளி விடுமுறை நாளன்று மாணவர்களை ஆசிரியர்கள் காரைக்குடிக்கு அழைத்து சென்று போட்டிகளில் பங்கேற்க செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
 
அறநூல் ஒப்புவித்தலில் உள்ள பாடல் பகுதிகளும்,வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்களும் :
 தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக போட்டி போட்டு வெற்றி பெற்ற தேவகோட்டை அரசு உதவி பெறும் பள்ளி மாணவ,மாணவியர்
அறநூல் ஒப்புவித்தல் போட்டியில் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆத்திச்சூடி சொல்லியதில் முத்தையன் ,மூன்றாம் வகுப்பு கொன்றைவேந்தன் சொல்லியதில் ஜெயஸ்ரீ,ஆகாஷ்,திவ்யஸ்ரீ,அனுசியா ,நான்காம் வகுப்பு வெற்றி வேற்கை சொல்லியதில் வெங்கட்ராமன் ,ஐந்தாம் வகுப்பு மூதுரை சொல்லியதில் ஈஸ்வரன்,கீர்த்திகா,மகாலெட்சுமி ,ஜனஸ்ரீ ,கிஷோர்குமார்,ஆறாம் வகுப்பு நல்வழி சொல்லிய ஐயப்பன்,அஜய்பிரகாஷ்,சபரி,ஏழாம் வகுப்பு நன்னெறி சொல்லியதில் கார்த்திகேயன்,காயத்ரி ,எட்டாம் வகுப்பு நீதிநெறி விளக்கம் சொல்லியதில் உமாமகேஸ்வரி,ராஜேஷ் உட்பட 18 பேர் பரிசுகள் பெற்று வெற்றி பெற்றனர்.இந்த ஆண்டு இப்பள்ளியிலிருந்து மொத்தம் 28 மாணவர்கள் பங்குபெற்றனர்.பெற்றோர்கள் 16 பேர் கலந்துகொண்டனர்.

பள்ளியின் சார்பில் டீ மற்றும் மதிய உணவு வழங்குதல் ;
பள்ளியின் சார்பாக கலந்து கொண்ட 44 மாணவர்களுக்கும்,பெற்றோர்களுக்கும் காலை 11 மணியளவில் தேநீரும்,அனைவருக்கும் பள்ளியின் செலவிலேயே மதிய உணவும்  வழங்கப்பட்டது.காலை உணவு அருந்தாமல் வந்த மாணவர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது.2017ம் ஆண்டும் பள்ளியின் சார்பில் பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இப்போட்டிகளில் பெருவாரியான பெற்றோர்களும் பங்கேற்றனர். 

 தனியாக அரசு பேருந்து :
தமிழ்நாடு அரசு தனி  பேருந்து மூலம் தேவகோட்டையில் பள்ளியில் இருந்து  காரைக்குடியில் போட்டி நடைபெறும் பள்ளியின் முன்பாக மாணவர்களையும்,பெற்றோர்களையும் இறக்கி விட்டு மீண்டும் உரிய நேரத்தில் காரைக்குடி பள்ளி வளாகத்தில் இருந்து தேவகோட்டை எங்கள் பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வந்தோம். 2017ம் ஆண்டும் தமிழ்நாடு அரசு தனி  பேருந்து மூலம் தேவகோட்டையில் இருந்து காரைக்குடிக்கு பெற்றோர்களையும்,மாணவர்களையும் பள்ளியின் சார்பாக அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது.

       
 தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக அதிக பரிசுகளை பெற்று சாதனை :
2018ம் ஆண்டு அதிக பரிசுகளை குவித்து மாணவர்கள் சாதனை படைத்தனர்.கடந்த 2016ம் ஆண்டு இதே போட்டிகளில் 11 மாணவர்களும் , 2017ம் ஆண்டு 15 மாணவர்களும் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசு பேருந்து இயக்கத்தின் அன்பான வழிநடுத்துதல் ;

2017ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பேருந்து இயக்கத்தின் தேவகோட்டை கிளை மேலாளர் திரு.நாகராஜன் அவர்களிடம் பேருந்து கேட்டதும் கொடுத்து உதவி செய்தார்.அப்போது டிக்கெட் பரிசோதகர் திரு.கணேசன் ,ஓட்டுநர்களாக வந்த திரு.அன்பழகன் மற்றும் மும்மூர்த்தி ஆகியோர் அருமையான முறையில் எங்களுடன் நடந்து கொண்டனர்.
                இந்த ஆண்டு 2018இல் இப்போது உள்ள கிளை மேலாளர் திரு.முத்துராமன் அவர்களும்,டிக்கெட் பரிசோதகர் திரு.துரைசிங்கம் ,ஓட்டுநர் திரு.அன்பழகன்,திரு.மும்மூர்த்தி ஆகியோர் நல்ல முறையில் வாகனத்தை கொடுத்து எங்களுக்கு சரியான நேரத்தில் செல்வதற்கும்,மீண்டும் பள்ளிக்கு பாதுகாப்பாக வருவதற்கும் உதவி செய்தார்கள்.அவர்களுக்கும் நன்றிகள் பல.

தமிழ்சங்கத்துக்கு  பாராட்டு ;
                             காரைக்குடி தமிழ்ச்சங்கத்தின் வழியாக நடைபெறும் இப்போட்டிகளில் எங்கள் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பங்கேற்கின்றனர்.தலைவர் ராஜாராம் மற்றும் பொருளாளர் செந்தமிழ்ப்பாவை ஆகியோர் அடங்கிய குழு ஞாயிற்று கிழமை என்றும் பாராமல் அவர்களது முழு ஈடுபாட்டுடன் போட்டிகளை நேர்மையான வழியில் நல்ல முறையில் நடத்தி பரிசுகளையும் ,சான்றிதழ்களையும் வழங்குவது பாராட்டுக்குரியது.குறிப்பாக முதல் பரிசு,இரண்டாம் பரிசு என்று இல்லாமல் போட்டிகளில் பங்கேற்கும் நால்வரில் ஒருவருக்கு பரிசு என்ற அடிப்படையில் பங்கேற்பவர்களில் நன்றாக சொல்லக்கூடிய அனைவருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்குவது மிகப்பெரிய பாராட்டுதலுக்கு உரியது.தொடர்ந்து 47 ஆண்டுகளாக இவர்கள் இதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.போட்டிகளில் பெரும்பாலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பங்கேற்றது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

தன்னலமற்ற சேவை :
                             எங்கள் பள்ளி ஆசிரியர்கள் முத்து மீனாள்,செல்வமீனாள் ,செல்வம் ஆகியோர் ஞாயிற்று கிழமையன்றும் மாணவர்களை போட்டிக்கு அழைத்து வந்து பங்கேற்க செய்ததுடன் , நன்றாக பயிற்சி அளித்த பள்ளியின்  மற்ற ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள் .
 

 

No comments:

Post a Comment