Friday 16 February 2018

 அப்பா இனிமேல் குடித்து விட்டு வண்டி ஓட்டாதீர்கள் அப்பா- நீங்கள் எங்களுக்கு உயிரோடு வேண்டும் - பள்ளி மாணவர்  அப்பாவுக்கு அறிவுரை

சாலை பாதுகாப்பு தூதுவர்களாக மாறிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவரின் அறிவுரையை கேட்டு உடனே ஹெல்மட்  வாங்கிய கொத்தனார்


அப்பா அண்ணனுக்கு வயசு 15தான் - வண்டி ஓட்ட கொடுக்காதீங்க அப்பா-இனிமேல் நீங்களும் ஹெல்மட் போட்டுக்கிட்டு வண்டி ஓட்டுங்க அப்பா-பள்ளி மாணவியின்  வேண்டுதல்


தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
                                  அதன் வாயிலாக பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பாக மாணவர்கள் பலர் வீடுகளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.

 பள்ளி மாணவரின் அறிவுரையை கேட்டு உடனே ஹெல்மட்  வாங்கிய கொத்தனார்

எட்டாம் வகுப்பு மாணவர் ரஞ்சித் : எங்க பள்ளியில் தேவகோட்டை போக்குவரத்து காவல் அதிகாரிகள் முருகேசன்,கலா,ராஜ்குமார் ஆகியோர் வந்து போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பாக பேசினார்கள்.அதனை எங்கள் வீட்டில் அருகில் இருக்கும் எனக்கு தெரிந்த அண்ணனிடம் சென்று சொன்னேன்.அதனுடன் அவர்கள் மனைவியிடமும் சொன்னேன்.நீங்கள் வண்டி ஓட்டும்போது ஹெல்மட் அணிந்து ஓட்டுங்கள்.அப்போதுதான் உங்கள் உயிர் பாதுகாப்பாக இருக்கும்.எங்கள் பள்ளியில் இன்று இதனை வலியுறுத்தி சொன்னர்கள் என்று சொன்னேன்.உடனே அவர் சென்று ஒரு புது ஹெல்மட் வாங்கி கொண்டு வந்து என்னிடம் காட்டிவிட்டு ,இனிமேல் ஹெல்மட் அணிந்துதான் செல்வேன் என்று சொன்னார்.எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.எனக்கு தெரிந்த வரை இதுபோன்று சாலை பாதுகாப்பு தொடர்பாக தகவல்களை அனைவரிடமும் சொல்வேன்.இந்த மாணவர் பாதுகாப்பு தூதுவராக மாறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பா இனிமேல் குடித்து விட்டு வண்டி ஓட்டாதீர்கள் அப்பா- நீங்கள் எங்களுக்கு உயிரோடு வேண்டும் - பள்ளி மாணவர்  அப்பாவுக்கு அறிவுரை

எட்டாம்  வகுப்பு மாணவர்  திவான்  : எனது அப்பா எப்போதாவது குடிப்பார்.அப்படி குடிக்கும்போது வண்டி ஓட்டக்கூடாது என்று எங்கள் பள்ளியில் வந்து பேசிய போக்குவரத்து காவல் அதிகாரிகள் பேசினார்கள்.அதனை போய் எனது அப்பாவிடம் சொன்னேன்.உங்கள் உயிர் இருந்தால்தான் எங்களுக்கு நல்லது.எனவே நீங்கள் குடித்து விட்டு வண்டி ஓட்டவேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன்.மேலும் எனது அப்பாவை ஹெல்மட் வாங்கி மாட்ட சொன்னேன்.சாலை விபத்தில் கடந்த ஆண்டு சுமார் நாலரை லட்சம் பேர் இறந்து விட்டதாக காவலர் சொன்னார்.அதனை எனது அப்பாவிடம் சொன்னேன்.அவரும் ஹெல்மட் வாங்குவதாகவும்,இனிமேல் குடித்து விட்டு வண்டி ஓட்டமாட்டேன் என்றும் சொன்னார்.இது போன்று பல்வேறு சாலை பாதுகாப்பு தகவலை இன்னும் எங்களை சுற்றி உள்ள அனைவரிடமும் சென்று சொல்வேன் என்று பேசினார்.

 அப்பா அண்ணனுக்கு வயசு 15தான் - வண்டி ஓட்ட கொடுக்காதீங்க அப்பா-இனிமேல் நீங்களும் ஹெல்மட் போட்டுக்கிட்டு வண்டி ஓட்டுங்க அப்பா-பள்ளி மாணவியின்  வேண்டுதல்


ஐந்தாம்  வகுப்பு மாணவி  சந்தியா  :எனது பக்கத்து வீட்டில் உள்ள அண்ணனுக்கு வயது 15 தான்.எப்போது பார்த்தாலும் அவர்கள் அப்பா அந்த அண்ணனிடம் வண்டியை கொடுத்து ஓட்ட சொல்வார் .நான் அவரிடம் சென்று உங்களது மகனுக்கு 18 வயதாகி  லைசென்ஸ் பெற்ற பிறகு வண்டி ஓட்டலாம் .இப்போது ஓட்ட சொல்லாதீர்கள் என்று சொன்னேன்.அவரும் சரி என்று சொன்னார்.எனது பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் ஹெல்மட் இல்லாமல் வண்டி ஓட்டுவார்கள் .அவர்களிடமும் சென்று ஹெல்மட் அணிந்து வண்டி ஓட்ட சொன்னேன்.இவ்வாறு மாணவ,மாணவியர் தாங்கள் முதல் நாள் பெற்ற அனுபவத்தை அனைவருக்கும் எடுத்து சொல்லி தூதுவர்களாக மாறினார்கள்.


இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறியதாவது ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் போக்குவரத்து சார்பு  காவல் ஆய்வாளர்   சாலை பாதுகாப்பு தொடர்பாக தெளிவாக விளக்கினார்.மாணவர்களின் மனதில் எளிதாக பதியுமாறு பசுமரத்து ஆணிபோல் சாலை விதிகளை பதியவைத்தார்.அதன் வெளிப்பாடுதான் பள்ளி மாணவர்கள் சாலை பாதுகாப்பு துதவர்களாக மாறியது.ரஞ்சித் என்கிற மாணவர் உடனடியாக தனது வீட்டின் அருகே உள்ள அவரது மாமா ரமேஷ் என்பவரிடம் சொல்லி ஹெல்மட் வாங்க வைத்துள்ளது பாராட்டத்தக்கது.மாணவர் திவான் அவரது அப்பாவிடம் சென்று குடித்து விட்டு வண்டி ஓட்ட வேண்டாம் என்று சொல்லி உள்ளார்.இதுவும் இந்த விழிப்புணர்வு முகாம் மூலம் ஏற்பட்டதுதான்.இதனையே வாழ்க்கைக்கு உதவும் கல்வியாக எண்ணுகிறேன்.இவ்வாறு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறினார்.













No comments:

Post a Comment