Wednesday 27 December 2017

 இன்று  விடுமுறையில் பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியரின் குமுறல்.

 

போராட்டத்தில் பங்கு பெற்ற ஆசிரியர்கள் செய்த பாவம் என்ன ?

இன்று பயிற்சிக்கு செல்லும் ஆசிரியர்களின் மன நிலை என்ன ?

 விருப்பமிருந்தால் பயிற்சிக்கு செல்லுங்கள் என்கிற முடிவால் ஆசிரியர்கள் மத்தியில்  அதிருப்தி

போராட்டத்தின் முடிவு- ஆசிரியர்களுக்கான மன உளைச்சல்

போராட்டமா - அலறி ஓடும் ஆசிரியர்கள் - ஏன்?

இனிமேல் போராட்டம் என்று யார் அழைத்தாலும்  செல்ல போவதில்லை - இன்று பயிற்சிக்கு செல்லும் ஆசிரியரின் மனநிலை

    நண்பர்களே போராட்டம் நன்றுதான்.ஆனால் cpsயை வென்று எடுப்போம் என்று சொல்லி விட்டு அதுவும் இன்னும் பாதியில் தான் உள்ளது.இந்த நிலையில் போராட்டத்தில் பங்கு பெற்றதற்கான தண்டனையாக இன்று பயிற்சிக்கு செல்லும் ஆசிரியர்கள் கேள்வி இதுதான் ?

1) போராட்டத்தில் பங்கு கொண்டுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும்  பயிற்சி அறிவித்து இருக்க வேண்டும்.ஆனால் பிரித்தாளும் கொள்கையை பயன்படுத்தி போராட்டத்தில் பங்கு கொண்ட ஒரு பிரிவு ஆசிரியர்களுக்கு மட்டும் விடுமுறையில் பயிற்சி.ஏன் இந்த கொடுமை ? அனைவருக்கும் பயிற்சி என்றால் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள்.பயிற்சி நடக்காது என்றுதான் அவர்கள் பிரித்து பயிற்சி கொடுத்துள்ளனர்.இதனை தலைவர்கள்தான் தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும்.தொடக்க கல்வி துறைக்கு மட்டும் பயிற்சி கொடுத்தால் பலருக்கு பதில் சொல்ல வேண்டும் என்று சொல்லும் தலைவர்கள் ஏன் மற்றவர்களுக்கு பயிற்சி  கொடுக்கும்போது எங்களுக்கும் கொடுங்கள்.அனைவரும் போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள்தான்.என்று ஒற்றுமையுடன் கேட்டிருக்கலாமே .ஏன் கேட்கவில்லை?

2) எத்துணை நாள் போராட்டம் நடந்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை சந்தித்து கொள்கிறோம் என்று சொல்லி தான் போராட்டத்திற்கு ஆசிரியர்கள் வந்தார்கள்.ஆனால் நடைபெற்றுக்கொண்டு கொண்டு இருக்கும்போதே முடிவு தெரியாமல் பாதியில் போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்று சொன்னீர்கள்.அதனையும் ஏற்று கொண்டோம்.அதற்கு இன்று வரை முடிவு என்னவென்று தெரியாமல் சென்று கொண்டு உள்ளது.இந்த நிலையில் மீண்டும் ஏப்பா , போராட்டத்துக்கு போனீயா ? பயிற்சிக்கு வா என்று சொல்வதையும் கேட்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.என்ன கொடுமைங்க இது ?

3) விருப்பமிருந்தால் செல்லுங்கள் இல்லை என்றால் வேண்டாம்.என்னங்க முடிவு இது? ஒன்று செல்லுங்கள் அல்லது வேண்டாம் என்றல்லாவா சொல்ல வேண்டும்.

4) நடைமுறை சிக்கல் என்ன? எட்டு பேர் பணியாற்றும் பள்ளியில் இரண்டு பேர் போராட்டத்தில் இருந்துள்ளார்கள்.அவர்கள் இருவரும் சனிக்கிழமைகளில் பயிற்சிக்கு செல்ல வேண்டுமா? அல்லது பள்ளியை நடத்த வேண்டுமா? என்று எங்குமே சொல்லப்படவில்லை.பள்ளிக்கு செல்வதென்றால் பட்டதாரி ஆசிரியர் 6,7,8 வகுப்புகளுக்கு ஆங்கிலம் எடுக்கும் நிலையில் அவர் மூன்று வகுப்பினையும் பார்த்துக்கொள்ளவேண்டும்.ஏற்கனவே தலைமை ஆசிரியர்கள் பல பேர் AEEO அவர்கள் சொவ்லதற்கு முன்பாகவே பயிற்சிக்கு வரவேண்டும் என்றும், அடுத்த மாதம் எப்போது பள்ளி சனிக்கிழமைகளில் நடத்துகிறீர்கள் என்றும் கேட்கின்றனர்.இப்படி சூழ்நிலையில் பள்ளிக்கூடத்தை இரண்டு ஆசிரியர்கள் சென்று எப்படி நடத்த இயலும்? அல்லது ஜாக்டோ - ஜியோ முடிவாக சனிக்கிழமைகளில் பயிற்சிதான் நடக்கும் என்று முடிவாக சொல்லி இருக்க வேண்டும்.அதுவும் இல்லை.அப்படி என்றால் இன்று பயிற்சிக்கு சென்று உள்ள ஆசிரியர்கள் இனி வரும் காலங்களில் போராட்டங்களில் கலந்து கொள்வதை வெறுத்துவிடுவார்கள்.ஆசிரியர்கள் பயிற்சிக்கு செல்வது  பயத்தால் அல்ல.   எந்த முடிவையும் திடமாக எடுக்க தெரியாத நபர்களால் நாம் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டி உள்ளதே என்கிற ஒரே காரணத்தினால்தான் .


4)  கோரிக்கை பாதியில் நிற்கிறது.மன உளைச்சல் வேறு.இப்போது பயிற்சிக்கு செல்வபவர்கள் செல்லுங்கள் . சனிக்கிழமை பற்றி பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றால் இது சரியான பதிலா? போராடியவர்கள் அனைவரும் பணியாற்ற தயாரக உள்ளோம்.அக்டோபர் மாதம் கோர்ட் சொன்னபோதே ஏன் ஜாக்டோ - ஜியோ கல்வித்துறையை அணுகி விரைவாக வேலை நிறுத்த நாட்களை பணியாற்ற நாள் சொல்லுங்கள் என்று கேட்டிருக்கலாமே ? அதனை ஏன் செய்யவில்லை ? இது யார் செய்ய வேண்டும் ? திட்டமிடல் வேண்டும்.ஏன் அதனை ஜாக்டோ-ஜியோ செய்யவில்லை.இப்போது தீடிரென விடுமுறை நாளில் பயிற்சிக்கு செல்லுங்கள் என்றால் மனவெறுப்புக்கு ஆளாகி உள்ளனர் ஆசிரியர்கள்,இது மிக பெரிய அதிருப்தியை ஆசிரியர்களிடம் ஏற்படுத்தி உள்ளது.

5) இப்போதும் என்ன சொல்கிறார்கள் .சனிக்கிழமைகளில் உள்ள பயிற்சியை பிறகு பார்த்து கொள்ளலாம்.எப்போது ? கோடை விடுமுறையில் மீண்டும் பயிற்சிக்கு செல்லுங்கள் என்று சொல்வார்கள்.நாமும் அடிமையாக ( எனது உரிமையை கூட பேச முடியாத நான் அடிமைதானே ) சரி என்று சொல்லி விட்டு செல்லவேண்டும்.இதற்கு எதற்காக போராட்டத்தில் பங்குபெறவேண்டும் ? போராட்டம் வெற்றி பெற்றுள்ளதா இல்லையா என்பதும் தெரியவில்லை.அதிகாரி சொல்வதை கேட்க சொல்லித்தான் ஜாக்டோ-ஜியோவும் சொல்கிறது.அப்படி என்றால் ........?


6) நண்பர்களே நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்றுகூட தெரியாத நிலையில் இருக்கின்றோம்.இந்த விடுமுறையில் முக்கியமான சுற்றலா தலத்திற்கு ,தேர்வுக்கு செல்வதற்காக பல ஆசிரியர்கள் முடிவு எடுத்து வைத்து இருந்தார்கள்.இதனால் பண இழப்பு.மன வேறுபாடுகள்.விருப்பமிருந்தால் செல்லுங்கள் என்று சொல்வதற்கே ஐந்து நாட்கள்.இந்த முடிவை வெற்றி என்றெல்லாம் சொல்ல முடியாது.அய்யா அடிக்கிறோம்,வலிக்கிறமாதிரி நடியுங்கள் என்று சொலகிறார்கள் .ஆனால் மனதில் அடிப்பது என்னவோ உண்மைதான் ?


7) போராட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்று ,இனிமேல் போராட்டமே வேண்டாம் என்று தள்ளப்பட்ட நிலையில் மன உளைச்சலுடன் இன்று பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியரின் குமுறல்.


8) நாங்கள் எதையும் சந்திக்க தயார் என்றுதான் போராட்டத்துக்கு வந்தோம்.ஆனால் அடிமைகளாக யார் என்ன சொன்னாலும் அதனை  ஏற்று கொள்வேன் என்ற கருத்தை சொல்லி,சொல்லி கேட்பதற்காக நான் போராட்ட களத்துக்கு வரவில்லை.போராட்டம் என்றால் வெற்றி பெறும் வரை போராடுவது.அதிகாரத்தில் இருப்பவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டு தலையாட்டுவது இல்லை.உங்களின் திட்டமிடல்,போராட்டக்குணம்  இல்லாத காரணத்தினால் இன்று விடுமுறையில் பயிற்சியில் இருக்க  வேண்டிய நிலையில் உள்ள போராட்ட ஆசிரியர்.நன்றி தங்களின் அருமையான வழிகாட்டுதலுக்கு










































No comments:

Post a Comment