Thursday 28 December 2017

  கதை வண்டிக்கு கதை அனுப்பிய மாணவர்களுக்கு பாராட்டு 



சமீபத்தில் சிறுவர்களே கதை எழுதும் பயணம் என்கிற தலைப்பில் வெளியான திட்டத்தினை அறிந்து தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களை கதை எழுத ஊக்கப்படுத்தி நடுநிலைப் பள்ளி அளவிலான இளம் மாணவர்களை ஊக்கப்படுத்தி கதை எழுத சொல்லி அதனை பள்ளியின் சார்பாகவே முயற்சி எடுத்து திட்ட இயக்குனர்களுக்கு அனுப்பி உள்ளோம்.கதை எழுதிய மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.கதை எழுதி பாராட்டு பெறுபவர்கள் ஐந்தாம் வகுப்பு கிருத்தியா ,கிஷோர்குமார்,ஆறாம் வகுப்பு சிரேகா ,ஏழாம் வகுப்பு காயத்ரி,நித்யகல்யாணி 


கதை எழுதும் ஆர்வத்தை மாணவர்களிடம் தூண்டிய கதையை அறிந்து கொள்ள - படியுங்கள்



தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தொடர்ந்து கடந்த ஓராண்டாக அனைவருக்கும் கல்வி இயக்கம் வழங்கிய புத்தகங்கள்,( புத்தக பூங்கொத்து ) மற்றும் பல்வேறு இதழ்களை படிக்க சொல்லி அதனை கிழமைக்கு ஒரு வகுப்பு என்று முறைப்படுத்தி காலை வழிபாட்டு கூட்டத்தில் இரண்டு மாணவர்கள் தாங்கள் படித்ததை தொடர்ந்து சொல்லி வருகின்றனர்.இதில் குறிப்பிட தக்க விஷயம் இந்த வாரம் சொன்ன மாணவர்களே மீண்டும் அடுத்த வாரம் சொல்லக்கூடாது.அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதே எங்களின் எண்ணம்.அதனை தொடர்ந்து ஓராண்டாக வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம் .மாணவர்களும் தைரியமாக,தன்னம்பிக்கையுடன் பல்வேறு தகவல்களை படித்து,கதைகளை படித்து சொல்லி வருகின்றனர்.நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் முதல் எட்டாம் வகுப்பு வரை தொடர்ந்து பல்வேறு புதிய தகவல்களை அறிந்து கொள்வதற்கும்,மேடை பேச்சு எளிதாக வருவதற்கும் இது உதவியாக உள்ளது.அதன் தொடர்ச்சியாகத்தான் கதை வண்டி பகுதிக்கு ஐந்து மாணவர்கள் தங்கள் சொந்த கற்பனையில் கதை எழுப்பி அனுப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment