Wednesday 6 December 2017

தமிழக அரசின் கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு 

தொடக்க நிலைப்பிரிவில் 18 போட்டிகளில் பங்கேற்பு 

உயர் தொடக்க நிலைப் பிரிவில் 10 போட்டிகளில் பங்கேற்பு

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கலைத்திருவிழாவில் பங்குகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது .



         நிகழ்விற்கு வந்தவர்களை பள்ளி மாணவர் நந்தகுமார்   வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.கலைத்திருவிழாவில் பங்குகொண்டு தனிநபர் போட்டிகளில் வெற்றி பெற்ற கிருத்திகா ,பிரஜித்,பாலமுருகன்ஆகியோருக்கும்,நாட்டுபுற நடனத்தில் குழுவாக வெற்றி பெற்ற சந்தோஷ்குமார்,ராஜேஸ்வரி,அம்முஸ்ரீ,
தேவதர்ஷினி,திவ்யதர்ஷினி,ஆகாஷ்,பாலமுருகன்,புகழேந்தி ஆகியோருக்கும் பள்ளியின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது.தொடக்க நிலைபிரிவு  போட்டிகளில் பேச்சுப்போட்டி,கட்டுரைப்போட்டி,ஒப்புவித்தல் போட்டி,நாட்டுபுறநடனம்,கதைகூறுதல்,பழமொழிகூறுதல்,ஆத்திசூடி ஒப்புவித்தல்,திருக்குறள் ஒப்புவித்தல்,வண்ணம் தீட்டுதல்,வரைந்து வண்ணம் தீட்டுதல்,மெல்லிசை- தனிப்பாடல், ஒரு நபர் நாடகம்,களிமண் பொம்மைகள் செய்தல் ,மாறுவேடப்போட்டி,அழகு கையெழுத்து,தேசபக்தி பாடல்கள்,Recitation Rhymes,Good Handwriting உட்பட பதினெட்டு போட்டிகளில்   பங்கேற்ற மாணவர்களுக்கும் ,  உயர் தொடக்கநிலை பிரிவில் தேவராட்டம்,ஒயிலாட்டம்,பரதநாட்டியம்,கிராமியநடனம் ,குழுநடனம் (ஆண்கள் ),கதைச்சொல்லுதல் ,களிமண் சுதை வேலைப்பாடு,ஓவியம்,பேச்சுப்போட்டி,நாடகம் என பத்துபோட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கும் ,பயிற்சி அளித்த ஆசிரியைகள் முத்துமீனாள் ,முத்து லெட்சுமி,செல்வமீனாள் ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.நிறைவாக மாணவர் விக்னேஷ் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கலைத்திருவிழாவில் பங்குகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டி பரிசு வழங்கும் நிகழ்வு நடை
                                      

No comments:

Post a Comment