Sunday 5 November 2017

புகைப் படம் -  ஒரு அறிமுகம்

புகைப்படம் எடுப்பது எவ்வாறு? பயிற்சி முகாம்

காலத்திற்கும் அழியாமல் கதை சொல்பவை புகைப்படங்கள்

கற்பனை புகைப்பட கலைஞர் பேச்சு 



தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான  புகைப்படம் எடுப்பது எவ்வாறு என்பது தொடர்பான ஒரு நாள் பயிற்சி முகாம்  நடைபெற்றது.
                                   புதிய முயற்சியாக நடைபெறும் இந்த முகாமிற்கு வந்தவர்களை ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.திரைப்பட துறை உதவி இயக்குனர் கரு.அண்ணாமலை மற்றும் பெங்களூருவை சார்ந்த கற்பனை புகைப்பட கலைஞர் ஜெயக்குமார் வெங்கடசேன் ஆகியோர் மாணவர்களுக்கு புகைப்படம் எடுப்பது எப்படி என்பதை நேரடி செயல் விளக்கம் வழியாக விளக்கி,மாணவர்களையே புகைப்படமும் எடுக்க வைத்து பேசுகையில், கண் போன்றது கேமரா.புகைப்படம் எடுக்க வெளிச்சம் மிகவும் அவசியம்.புகைப்படம் எடுக்க கேமரா,லென்ஸ்,துளை,ஷட்டர்,சென்சார்,இயற்கை ,செயற்கை விளக்குகள் போன்றவை முக்கியம்.கேமராவில் கருப்பு ,வெள்ளை இரண்டு கலர் தான் உள்ளன.காலத்திற்கும் அழியாமல் கதை சொல்பவை புகைப்படங்கள் .புகைப்பட துறையில் அதிகமான வேலை வாய்ப்புகள் உள்ளன.அவற்றை பயன்படுத்தி கொள்ளுங்கள் .இவ்வாறு பேசினார்கள்.தேவகோட்டை அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார மேற்பார்வையாளர் (பொறுப்பு ) ராஜசேகர்,பெங்களூரு ஐ.டி .நிறுவன அதிகாரி சுப்ரமணியன் ஆகியோர் உட்பட பெற்றோர்கள் பலர் பங்குகொண்டனர் .மாணவர்கள்  காயத்ரி,ஜெனிபர் , சத்தியா ,ஜெயஸ்ரீ,கீர்த்திகா,அஜய்பிரகாஷ் உட்பட பல மாணவர்கள் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.புகைப்படம் எடுக்க கற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் அனைத்து மாணவர்களும் வீடு நோக்கி சென்றனர்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புகைப்படம் எடுப்பது எவ்வாறு? பயிற்சி முகாமில் மாணவர்கள் அவர்களே புகைப்படம் எடுக்க கற்றுக்கொண்டனர்.



மேலும் விரிவாக :

 புகைப்படம் எடுப்பது எப்படி ? அறிமுகம் 

             புகைப்பட கலைஞர் ஜெயா  வெங்கட் மற்றும் கரு.அண்ணாமலை ஆகியோர் புகைப்படம் எடுப்பது எப்படி? அதன் பயன்பாடு பற்றி எளிய கேள்விகள் கேட்டு ஆர்வத்துடன் முகாம் நிகழ்வுகளை துவக்கினார்கள்.
                                            முதலில் மிதிவண்டி ஒட்டகற்றுக்கொள்ளும் முன்பு அதனுடைய பாகங்களைத் தெரிந்து கொள்வது போல புகைப்படம் எடுக்க முதலில் புகைப்படக்கருவியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.மிதிவண்டி ஒட்டகற்றுக்கொள்ளும்போது விழுந்து எழுந்து பேலன்ஸ் பண்ண கற்றுக்கொள்கிறோம்.அதுபோல புகைப்படம் எடுக்க கருவியை பயன்படுத்தி எடுக்க கற்பனை செய்ய வேண்டும்.

கேமரா தொடர்பாக விளக்கங்கள் :

                                                      கண்போன்றது கேமரா.புகைப்படம் எடுக்க வெளிச்சம் மிகவும் அவசியம்.புகைப்படம் என்பது நிலையானது.சினிமா,கல்யாணம்,கலைநிகழ்ச்சி இவற்றை வீடியோ எடுப்பது போன்றவை நகரும் தன்மை உடையது.ஒரு செயலை கற்றுக்கொள்ளும்போது தஹ்வாறுகள் நேரிடலாம்.தவறுகளில் இருந்துதான் நாம் அவற்றை திருத்தி கற்று கொள்ள வாய்ப்பு அமைகிறது.
                                 புகைப்படம் எடுக்க குறிக்கோள்,கேமராக்கள்,லென்ஸ்,துளை,ஷட்டர்,சென்சார் ,இயற்கை,செயற்கை விளக்குகள் போன்றவை தேவை.கேமராவில் கருப்பு- வெள்ளை இரண்டு கலர்தான் .கலர் கேமரா கிடையாது.கண் இமைக்கும் நேரத்தை விட வேகமாக செயல்படுவது கேமரா.கேமராவால் இயற்கை ,சூரிய வெளிச்சம் ஆகியவற்றை கட்டுப்படுத்த முடியாது.செயற்கை வெளிச்சத்தை புகைப்படம் எடுக்க தகுந்தவாறு பயன்படுத்திக்கொள்ளலாம்.

புகைப்படதிற்கு வெளிச்சம் அவசியம் :

                                       புகைப்படங்களை அருகில்,வெகுதொலைவில் எடுக்க என்று ஒன்று,ஒன்றுக்கும் ஒவ்வொரு லென்ஸ் உள்ளது.கேமரா  அறிவியல் கோட்பாட்டில்தான்.வெட்ட வெளியில்,இயற்கை வெளிச்சத்தில் கேமராவை கையில் எடுக்கலாம்.செயற்கை வெளிச்சத்தில்,வெளிச்சம் குறைந்த இடத்திலோ எடுக்கும்போது அசைவு இல்லாமல் பட எடுக்க ஸ்டாண்ட் உள்ளன.
                          புகைப்படம் அழகாக,வெள்ளையாக அமைய வேண்டுமானால் வெளிச்சத்திற்கு நேரே வெள்ளை வேஷ்டி பயன்படுத்தலாம்.சூரியன் நேரடியாக பின்னல் இருக்க வேண்டும்.புகைப்படம் எடுப்பவர்க்கு பின்னால் வெளிச்சம் இருக்க வேண்டும்.காலத்திற்கும் அழியாத கதை சொல்லும் புகைப்படங்கள் அருமையானது.அதை பார்க்கும்போது உணர்ச்சி பூர்வமான மகிழ்ச்சி ஏற்படும் . புகைப்படங்கள் எடுக்கும் கலையானது பல்வேறு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் துறையாகும்.

மாற்றி யோசியுங்கள் :

                       நாம் அன்றாடம் பயன்படுத்தும் எளிய பொருள்களை கொண்டு புகைப்படம் எடுத்து சமூக நன்மை கருதி நல்ல விஷயங்களை புகைப்படமாக எடுத்து அனைவைரையும் திசை திருப்பும் வகையில் பலர் செயல்படுத்தி வருகின்றனர்.இதற்கெல்லாம் முழுக்க,முழுக்க காரணம் கற்பனை வளம் மட்டுமே.புகைப்படத்தைப் பற்றி தெரிந்து கொள்ள,தெரிந்து கொள்ளத்தான் கற்பனை வளம் .பெருகும்.
                            புகைப்படத்துறையில் மற்றும் ஒரு முக்கியமான நிகழ்வு மாற்றி யோசிப்பது ஆகும்.உதடு போன்று ஒரு படத்தை புத்தகம் ஒன்றை கண்ணாடியில் விரித்து வைத்து எடுத்த படத்தையும்,கடைகளில் கொடுக்கும் பிள்ளை கொண்டு அழகான பிள்ளையார் ஓவியமும் ,முகம் பார்க்கும் கண்ணாடி முன்பு சிப்பாய் ஒருவர் தன்னை பார்க்கும்போது கண்ணாடி உள்ளே பிம்பம் ராஜா போன்று தெரிவதை காண்பித்து அதனை போன்று நாமும் நம்மை தன்னம்பிக்கை உடையவர்களாக பார்க்க வேண்டும் என்று விளக்கினார்.மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பத்தி அளித்தனர் .இந்த நிகழ்வு முதன்முறையாக நடுநிலைப் பள்ளி அளவில் உள்ள மாணவர்களுக்கு கிடைக்கப்பெற்றதை எண்ணி கொண்டு ,புகைப்படம் தங்களை எடுத்ததை எண்ணி மகிழ்ந்து கொண்டே பள்ளியில் இருந்து சென்றனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் கருத்து :

இந்த நிகழ்வு குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறியதாவது :கடந்த ஒன்றரை வருடமாக முயற்சி செய்து தற்போது நடைபெற உள்ள இந்த நிகழ்வு குறித்து : பயிற்சி அளிக்கும் திரு.ஜெயா வெங்கட் அவர்கள் புகைப்படம் எடுக்கும் துறையில் பல ஆண்டுகளாக ஆர்வத்துடன் கற்பனை கலந்த புகைப்படங்களை எடுத்து வருகிறார்.தற்போது விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் புகைப்படங்களை ஓய்வு நேரத்தில் ஆர்வத்துடன் படம் பிடித்து வருகிறார்.FOOD AND PRODUCT PHOTOS எடுப்பதில் கை தேர்ந்தவர்.பள்ளி மாணவர்களுக்காக புகைப்படம் எடுக்க கற்று தருவதற்கு சேவை மனப்பான்மையுடன் ஆர்வத்துடன் பெங்களூருவில் இருந்து தோழர் கரு.அண்ணாமலை ஏற்பாட்டில் கிளம்பி வந்தனர்.சேவை மனப்பான்மையுடன் பல லட்சம் மதிப்புள்ள கேமராவை கொண்டு வந்து அதனை மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் தெளிவாக விளக்கி சொல்லி கொடுத்தனர்.இதன் மூலம் மாணவர்களுக்கு நேர்மறை  மாற்று சிந்தனை உருவாக ஆர்வத்தை உண்டு செய்து உள்ளனர்.பொதுவாக நாம் அனைவருமே போட்டோ எடுத்தால் மகிழ்ச்சி அடைவோம்.அதனையே இளம் வயதில் மாணவர்களின் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி இவர்கள் வழங்கிய பயிற்சி முகாம் மாணவர்களுக்கு மிக பெரிய அளவில் நண்மைகளை பின்னாளில் ஏற்படுத்தும் என்பது உண்மை.இவ்வாறு தலைமை ஆசிரியர் கூறினார்.


மாணவி காயத்ரி : இது எங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள் என்று சொல்லலாம் .புகைப்படம் எப்படி எடுக்க வேண்டும் , எடுக்கும்போது எவ்வாறெல்லாம் கேமராவை சரி செய்ய வேண்டும்,கற்பனை கலந்து புகைப்படம் எடுத்தால் நமது சிந்தனை எப்படி இருக்கும் என்று அழகாக நேரில் சொல்லி கொடுத்ததுடன் அன்பாகவும் சொல்லி கொடுத்தனர்.வரும் காலத்தில் நானும் நல்ல புகைப்பட கலைஞராக வருவேன் என்று நம்பிக்கை உள்ளது என்று பேசினார்.


மாணவர் : அஜய்பிரகாஷ் : என்னிடம் பெரியகேமராவை  கொடுத்து புகைப்படம்  எடுக்க சொல்லி கொடுத்தார்கள் .எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த கூடிய புகைப்படங்களை எடுத்து பெரிய மாற்றத்தை உண்டு பண்ண முயற்சி செய்வேன்.புகைப்படம் எடுப்பது குறித்து மிக எளிதாக விளக்கங்கள் கொடுத்து அன்புடன் சொல்லி கொடுத்த புகைப்பட ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.















                            

















No comments:

Post a Comment