Sunday 26 November 2017

 வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் - தி இந்து தமிழ் நடத்திய மகளிர் திருவிழாவில் பங்கேற்ற மாணவியின் பெற்றோர் 



                              மதுரையில் தி இந்து தமிழ் நடத்திய மகளிர் திருவிழாவில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவிகள் காவியா,கிருத்திகா ,தனுதர்ஷினி,சின்னம்மாள் ஆகியோர் கலந்துகொண்டு இறைவணக்க பாடல் பாடி,பரிசு பெற்றனர்.நிகழ்ச்சியில் பங்கேற்க  தேவகோட்டையிலிருந்து அதிகாலை கிளம்பி மதுரை சென்று கலந்துகொண்ட மாணவிகளுக்கு பள்ளியின் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் பங்கேற்றது தொடர்பாக மாணவிகளின் பெற்றோர் சார்பாக அங்காளஈஸ்வரி பேசும்போது : பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மதுரையில் நடைபெறும் மகளிர் திருவிழா தொடர்பாக பள்ளியில் தெரிவித்து ,எங்களை மகளிர் விழாவில் பங்கேற்க ஊக்கப்படுத்திய பிறகுதான் நாங்கள் கலந்துகொண்டோம்.மிகபெரிய மேடையில் எனது மகள் பங்கேற்று பாடியது எனக்கு மகிச்சியாக இருந்தது.மேலும் நானும் போட்டிகளில் பங்கேற்றது ,பரிசு பெற்றது எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.மிகப்பெரிய பதவிகளில் உள்ள பெண்கள் பேசுவதை பார்க்கும்போது எனக்கு வியப்பாக,ஆச்சிரியமாக இருந்தது.இவ்வளவு பெரிய மகளிர் கூட்டத்தை நான் இதுவரை பார்த்தது இல்லை.இப்போதுதான் பார்த்து பிரமித்து போனேன். பல்வேறு புதிய தகவல்களை விழாவின் வழியாக தெரிந்து கொண்டேன்.வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவத்தை ஏற்படுத்தி கொடுத்த தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கும், தி இந்து தமிழ் நாளிதலுக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு பேசினார்.தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இப்பள்ளி மாணவிகள் தேவகோட்டையில் கிளம்பி மதுரை சென்று மகளிர் திருவிழாவில் பங்குபெற்று பாடி,பரிசுகள் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment