Saturday 9 September 2017

அறிவியல் மீது நம்பிக்கை வையுங்கள்

மூட நம்பிக்கைகளை விட்டொழியுங்கள்

அமெரிக்க வாழ் இந்தியர் பேச்சு


கேம்பிரிட்ச் பல்கலைகழகத்தால் தயாரிக்கப்பட்ட 

அறிவியல் குறுந்தகடு ஒளிபரப்புதல் நிறைவு வார  விழா 


அறிவியலில் மேற்படிப்பு படிக்க தூண்டும் பெருந்தொடர்  குறுந்தகடு




தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் கேம்பிரிட்ச் பல்கலைகழகத்தால் தயாரிக்கப்பட்ட அறிவியல் குறுந்தகடு ஒளிபரப்புதல் தொடர்ந்து 52 வாரங்கள் நடைபெற்று நிறைவு வார விழா கொண்டாடப்பட்டது.
                            விழாவின் தொடக்கமாக ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.ஆரம்ப நிகழ்வாக மாணவர்களின் அபிராமி அந்தாதி ,திருக்குறள் நடனம் நடைபெற்றது.விழாவிற்கு  பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.அமெரிக்கா வாழ் இந்தியர் மீனாட்சி ஆச்சி  முன்னிலை வகித்தார். உலக தமிழ் மொழி அறக்கட்டளை இயக்குனரும் ,அமெரிக்க வாழ் இந்தியருமான அழகப்பா ராம் மோகன்  பேசும்போது,மாணவர்களாகிய நீங்கள் இளம் வயது முதலே அறிவியல் மீது நம்பிக்கை வையுங்கள்.மூட நம்பிக்கைகளை விட்டொழியுங்கள்.உங்கள் வாழ்க்கையை இப்போதே நன்றாக திட்டமிடுங்கள்.உழைப்பின் அருமையை பாறையின் கதையை சொல்லி விளக்கினார்.மனவெளி உள்நோக்கு தியானம் தொடர்பாக விளக்கினார்.அறிவியல் குறுந்தகடு பயன் என்ன ,எவ்வாறு அதனை பயன்படுத்தலாம் என்றெல்லாம் விளக்கினார்.52 வாரங்கள் தொடர்ந்து ஒளிபரப்பி ,அதனை செயல் வடிவமாக மாற்றி காட்டிய ,அது தொடர்பாக பேசிய மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள் கூறினார்.காட்சிகளை தொடர்ந்து பார்த்து தங்கள் கருத்துக்களை எடுத்து கூறிய ஜெனிபர் ,தனலெட்சுமி,ராஜேஸ்வரி,அஜய் பிரகாஷ்,காயத்ரி,நித்யகல்யாணி ,சின்னம்மாள் ,சக்தி,உமாமகேஸ்வரி,சஞ்சீவ், காவியா ,சந்தியா ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.நிறைவாக அனைத்து மாணவர்களுக்கும் பென்சில்,ரப்பர்,ஸ்கேல் ,இனிப்புகள் வழங்கப்பட்டது.நிறைவாக ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் கேம்பிரிட்ச் பல்கலைகழகத்தால் தயாரிக்கப்பட்ட அறிவியல் குறுந்தகடு ஒளிபரப்புதல் தொடர்ந்து 52 வாரங்கள் நடைபெற்று நிறைவு வார விழா கொண்டாடப்பட்டது.அறிவியல் குறுந்தகடு தொடர்பாக பேசிய மாணவர்களுக்கு பரிசுகளை உலக தமிழ் மொழி அறக்கட்டளை இயக்குனரும் ,அமெரிக்க வாழ் இந்தியருமான அழகப்பா ராம் மோகன் வழங்கினார்.உடன் மீனாட்சி ஆச்சி ,பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உள்ளனர்.



விரிவாக :  
மாணவர்களிடம் அறிவியல் தொடர்பாக என்ன மாதிரியான மாற்றத்தை இந்த குறுந்தகடு ஏற்படுத்தி உள்ளது? மாணவர்கள் சொவ்லதை கேளுங்கள் : 


இப்பள்ளியில் கடந்த ஆண்டு எட்டாம் வகுப்பு படித்த மாணவி ராஜேஸ்வரி அறிவியல் குறுந்தகடு குறித்து பேசுகையில் : நான் கடந்த ஆண்டு இந்த குறுந்தகடில் பார்த்த அறிவியல் காட்சிகள் இப்போது 9ம் வகுப்பு படிக்கும்போது பாடத்தில் எழுத்து வடிவில் வருகிறது.அதனை நான் முன்பே காட்சியாக பார்த்தது எனக்கு இப்போதும் பசுமரத்து ஆணிபோல மனதில் பதிவாகி உள்ளது.படிப்பதற்கும் நன்றாக உள்ளது.என்று பேசினார்.


எட்டாம்  வகுப்பு மாணவி ஜெனிபர் : இந்த குறுந்தகடு வாயிலாக நாங்கள் அறிவியல் தொடர்பான கருத்துக்களை நன்றாக தெரிந்து கொண்டுள்ளோம்.நாங்களும் எதிர்காலத்தில் இவர்களை போல வரவேண்டும்,உலகத்திற்கு ஏதாவது புதிய கண்டுபிடிப்பை கொடுக்க வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கும் வகையில் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏழாம்  வகுப்பு காயத்ரி : இந்த அறிவியல் நிகழ்வு வழியாக எங்கள் மனதில் பல்வேறு ஆக்கபூர்வமான சிந்தனைகளை எங்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.எந்த ஆண்டு அறிஞர்கள் பிறந்தார்கள்,என்ன கண்டுபிடித்தார்கள் போன்ற தகவல்கள் இதன் மூலமாக தெரிகிறது.அறிவியல் அறிஞர்களை பார்க்கும்போது எங்களுக்கும் புதிய எண்ணங்கள் ஏற்படுகிறது.

எட்டாம் வகுப்பு உமா மகேஸ்வரி : எடிசன் போன்ற அறிஞர்களை நாங்கள் இது வரை புத்தகத்தில் ஓவிய வடிவில் மட்டுமே பார்த்துள்ளோம்.ஆனால் இந்த அறிவியல் குறுந்தகடு வழியாக எடிசன் அவர்களை நேரில் பார்ப்பது போல் உள்ளது.எனக்கும் அவரை போல் ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கி நிற்கிறது.குறுந்தகடு வழங்கியவர்களுக்கு நன்றி.

எட்டாம் வகுப்பு காவியா ; விஞ்ஞானிகள் தொடர்பாக நேரில் பார்ப்பது போல் பல்வேறு தகவல்களை அவர்கள் வாயால் கேட்பது போல் கேட்டு தெரிந்து கொள்கிறோம்.சூத்திரங்கள் தொடர்பாகவும் பல்வேறு தகவல்களை தெறிந்து கொள்கிறோம் .நல்ல பயனுள்ளதாக உள்ளன .

எட்டாம் வகுப்பு சக்தி : விஞ்ஞானிகள் பெயர்,அவர்களது கண்டுபிடிப்பு,எந்த ஆண்டு கண்டுபிடித்தனர்,அதன் பயன் என்ன என்பதை நேரடியாக காட்சியாக பார்த்ததை பெரும் பாக்கியமாக எண்ணுகிறேன்.இது எதிர்கால எனது படிப்புக்கு மிகுந்த உதவியாக இருக்கும்.

எட்டாம் வகுப்பு ராஜேஷ் : இந்த அறிவியல் குறுந்தகடு  7 மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும்போது எனக்கு பார்க்கும்,படிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.குறுந்தகடு பார்க்கும்போது வரும்காலத்தில் நானும் இது போன்று வரவேண்டும் என்கிற எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்தி உள்ளது.கண்டிப்பாக மேல் படிப்பு படித்து அறிவியலில் நானும் ஏதாவது கண்டிப்பாக கண்டுபிடிப்பேன்.
              இவ்வாறு மாணவர்கள் கூறினார்கள்.

இந்த நிகழ்வு குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறியதாவது : 
                              6,7,8 படிக்கும் இளம் வயது மாணவர்களுக்கு அறிவியல் தொடர்பான விழிப்புணர்வை மிக எளிதாக ஆர்வமூட்டுவதாக இந்த குறுந்தகடு அமைந்து உள்ளது.உலக தரம் வாய்ந்த இந்த அறிவியல் காட்சிகள் வழியாக கல்லூரிகளில் உள்ள சூத்திரங்கள் கூட மாணவர்களுக்கு எளிதாக புரிந்து விடுகிறது.வெறும் புத்தகத்தில் மட்டும் படிக்காமல் அதனை காட்சி படுத்தி பார்க்கும்போது அதன் உண்மையான பொருள் விளங்கி மாணவர்கள் ஆர்வமுடன் படிக்கின்றனர்.காதால் கேட்பதை விட அதனை காட்சியாக பார்க்கும்போது இன்னும் ஆழமாக மனதுக்குள் பதியும்.இளம் வயது மாணவர்கள் இதனை பார்க்கும்போது இன்னும் அதிகம் தூண்டப்படுவார்கள்.அறிவியல் அறிஞர்களை வெறும் புத்தகத்தில் மட்டும் பார்த்தவர்கள் இன்று அவர்களை நேரில் பார்ப்பது போல் பார்ப்பதால் மிக எளிதாக அறிவியல் மனதில் பதிவதுடன் அது இன்னும் அவர்களை மேல் படிப்பு படிப்பதிலும்,புதிய விஷயங்களை கண்டு பிடிக்க செய்வதிலும் ஊக்கப்படுத்தும்.இந்த குறுந்தகடை வழங்கிய அமெரிக்க வாழ் இந்தியரும் ,உலக தமிழ் மொழி அறக்கட்டளையின் இயக்குனருமான அழகப்ப ராம் மோகன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

                    
  உலக புகழ்பெற்ற கேம்பிரிட்ச் பல்கலைக்கழகத்தால் எழுதி தயாரிக்கப்பட்ட இயற்பியல் தொடர்பான 26 மணி நேர அதாவது 52 வார பெருந்தொடர்
குறுந்தகடில் உள்ள அறிவியல் தொடர்பான விஷயங்கள் என்ன? என்ன ? அமெரிக்க வாழ் இந்தியர் கூறுவதை கேளுங்கள் :

                                      அமெரிக்காவில் உள்ள உலக தமிழ் மொழி அறக்கட்டளையின் இயக்குனர் அழகப்பா ராம் மோகன் 52 பெருந்தொடர் குறுந்தகடுகளையும் , இயந்திர அண்டத்துக்கு அப்பால் என்கிற 3 புத்தகங்களையும் வழங்கி குறுந்தகடு தொடர்பாக விளக்கமாக சொல்கையில்  , அறிவியல் இயற்பியல் மிகவும் முக்கியமானது.அதன் மொழி கணிதம்.இவை வலி வந்தவைகளே வேதியல் மற்றும் ஏனைய அறிவியல் துறைகள்.நாமும்,நம்முடைய உலகமும் ,  வகிக்கும் சூரிய குடும்பமும்,அக் குடும்பம் இயங்கும் இந்த அண்ட வெளியும் அதன் விண்மீன் தொகுதிகளும் கொண்டதே இப் பிரபஞ்சம்.ஆண்ட இயந்திரம் என்ற இப் பிரபஞ்சத்தின் இயந்திரமயமான இயக்கத்தையும் அதற்கு அப்பாலும் உள்ள அறிவியல் உண்மைகள் ,உங்கள் கைகளில் தவழும் இந்த நூல் மூன்று பகுதிகளாக வழங்குகிறது.இதை முதல் நூலாக அமெரிக்காவில் உள்ள ஆனேன்பெர்க் அறக்கட்டளையும்,கேம்பிரிட்ச் பல்கலைகழகமும் வெளியிட்டதை தொடர்ந்து இவைகள்  பரிசுகளையும்,பல்வேறு நாட்டு அங்கிகாரத்தையும்  உலகளாவிய முறையில் பெற்றுள்ளது.உலக அளவில் பல மொழிகளில் மொழி ஆக்கம் செய்யப்பட்டு பள்ளிகளிலும் , கல்லூரிகளிலும் பல நாடுகளில் இயற்பியல் துறையில் சாதனை படித்து கற்பிக்கபடுகிறது.அதன் தமிழ் வடிவமே நீங்கள் பார்க்கும் இந்த நூல்.இயற்பியலை 26 மணியளவில் 52 அரை மணி நேரக் காட்சிகளாகவும், ஒவ்வொரு காட்சிக்கும் துணைப் பாடமாக இரு பகுதிகளாக கேம்பிரிட்ச் பல்கலைகழகத்தால் எழுதி தயாரிக்கப்பட்டது.இந்த நூல்கள் .அதோடு இந்த நூல்களில் வரும் கேள்விகளுக்கு விடையும் மூன்றாவது பகுதியாக தரப்பட்டுள்ளது.


            ' ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்' என்று நமது சூரிய குடும்பத் தலைவனைப் போற்றி தனது சிலம்பு காவியத்தை இளங்கோ அடிகள் தொடங்குகிறார்.இந்த கதிரவன் வரலாறு தான் நம் வரலாறு.அந்த வரலாறு தான் இயற்பியல்.அதனை இரு தொகுதிகளாக இப் புத்தகம் விளக்குகிறது.முதல் தொகுதி வன்னில் இயங்கும் பெரிய உருக்களைப் பற்றி காட்சி வடிவிலும் எழுத்து வடிவிலும்  செல்கிறது.அதனை 'இயந்திர அண்டம்'என்ற தலைப்பில் விளக்குகிறது.அதனை அடுத்து இரண்டாம் தொகுதி 'இயந்திர அண்டமும் அதற்கு  அப்பாலும்'என்று பிரபஞ்சத்தில் இயங்கும் மிக சிறிய உருக்களை பற்றி காட்சி வடிவிலும் எழுத்து வடிவிலும் சொல்லி செல்கிறது.இதனை இளம் வயது மாணவர்களாகிய நீங்கள் நன்றாக பார்த்து எதிர்காலத்தில் அறவியல் விஞ்ஞானிகழாக வர வேண்டும் என்று பேசினார். திருக்குறள்தான் தமிழர்களின் அடையாளம் என்றும் பேசினார்.குறுந்தகடு  பெரிய திரையில்  வெளியிடப்பட்டது.மாணவர்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.அறிவியல் தொடர்பாக காட்சி வழி ஆர்வமூட்டுவதாக இருந்ததாக தெரிவித்தனர்.




                 





தேவகோட்டைசேர்மன்  மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் 52வது வாரமாக ஒளிபரப்பப்பட்டு வரும்   காட்சி வழி  இயற்பியலும்,கணிதமும் குறுந்தகடு  இளம் வயது மாணவர்களை அறிவியலில் மேற்படிப்பு படிக்க தூண்டும் வகையில் ஊக்கப்படுத்தி வருகிறது

                          "இயந்திர அண்டமும் அதற்கு அப்பாலும் " என்கிற தலைப்பில் காட்சி வழியாக தமிழில் இயற்பியல் கணிதம் பாடங்களை   பெருந்தொடர் குறுந்தகடாக  2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல்   வாரம்தோறும் வியாழக்கிழமை அன்று கடைசி பாட வேளையில் ஆறு முதல் எட்டு வகுப்புகள் வரை உள்ள மாணவர்களுக்கு ஒலிபரப்பு செய்யப்படுகிறது.ஒளிபரப்பு செய்யப்பட்டு அதனில் மாணவர்களிடம் கேள்விகள் கேட்டு வினாடி-வினா போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படுவதாக பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்தார்.மேலும் தொடர்ந்து குறுந்தகடுகளை ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ஸ்ரீதர் செய்து இருந்தார்.

                      
          6,7,8 வகுப்பு படிக்கும்   மாணவர்களுக்கு இந்த குறுந்தகடு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.அறிவியல் தொடர்பான தகவல்களை நேரடியாக நடிகர்கள் அந்த அறிவியல் அறிஞர்களின் கதாபாத்திரங்களாக தொடர்ந்து நடித்து ,அதன் முழு விவரத்தையும் விரிவாக விளக்கும் காட்சி அமைப்பு பாராட்டக்கூடியது .ஒரு செய்தியினை  காதல் கேட்பதை விட பட காட்சியாக காண்பிக்கும்போது விளக்கமாக தெரிந்து கொள்ளுவதால் அந்த தகவல் மிகவும் ஆழமாக மனதில் பதியும்.





            

பதிவுகள் :
                           ஒவ்வொரு வாரமும் ஒலிபரப்பு செய்யப்படும் அறிவியல் குறுந்தகடு பற்றிய தலைப்பு,பகுதி,பிரிவு போன்ற தகவல்கள் பதிவு செய்யப்பட்டு,மூன்று ஆசிரியர்களின் மேற்பார்வையில் ,ஆசிரியர்கள் மாணவர்கள் கையெழுத்திட்டு நோட்டில்  ஒரு பதிவாக  (Record ) செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

அறிஞர்களை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு : 
                     6,7,8 வகுப்பு படிக்கும்   மாணவர்களுக்கு இந்த குறுந்தகடு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.அறிவியல் தொடர்பான தகவல்களை நேரடியாக நடிகர்கள் அந்த அறிவியல் அறிஞர்களின் கதாபாத்திரங்களாக தொடர்ந்து நடித்து ,அதன் முழு விவரத்தையும் விரிவாக விளக்கும் காட்சி அமைப்பு பாராட்டக்கூடியது .ஒரு செய்தியினை  காதல் கேட்பதை விட பட விளக்கமாக தெரிந்து கொள்ளுதல் மிகவும் ஆழமாக மனதில் பதியும்.

 மாணவர்களே இயக்கும் ஆளுமை :

            இந்த குறுந்தகடுகள் வாரம் தோறும் தொடர்ந்து மாணவர்களுக்கு காட்டப்படுவதால் மாணவர்களும் வியாழக்கிழமை அன்று எப்போது வரும் என்று ஆர்வத்துடன் அதனை தொடர்ந்து அவர்களாகவே கேட்டு ,மாணவர் தலைவர் ஒருவர் அதனை இயக்கி ,கண்டு மகிழ்ந்து அறிவியலை ஆர்வமுடன் படித்து வருகின்றனர்.

குறுந்தகடு பார்த்து விட்டு விளக்குதல் :

                           மாணவர்கள் பார்த்த அறிவியல் குறுந்தகடு பற்றிய கருத்துக்களை மறுநாள் காலை வழிபாட்டு கூட்டத்தில் மற்ற மாணவர்களின் முன்பாக தெளிவாக எடுத்துரைக்கின்றனர்.அறிவியல் நிகழ்ச்சியினை பற்றிய கருத்து தொகுப்பு (Project ) அனைத்து மாணவர்களும் எழுதி வருகின்றனர்.சிறந்த கருத்து தொகுப்பை சேகரித்து பராமரித்து வருவதுடன் ,அவற்றிற்கு பரிசுகளும் வழங்கி வருகிறோம்.

வினாடி- வினா போட்டி வைத்து பரிசு வழங்குதல் ; 

                             மாணவர்கள் கூறிய அறிவியல் குறுந்தகடு தொடர்பான கருத்துக்களை கொண்டு 6,7,8 மாணவர்களிடம் அறிவியல் வினாடி-வினா நிகழ்ச்சி நடத்தி ,அதில் வெற்றி பெறும்  மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வருகிறோம்.இதனால் மாணவர்கள் அறிவியலில் நல்ல பல தகவல்களை சிறு வயதில் அறிந்து கொள்ள ஒரு மிகப் பெரிய வாய்ப்பாக உள்ளது.

 அறிவியலில் மேற்படிப்பு படிக்க தூண்டுதல் :
                              மாணவர்கள் தாங்கள் மேற்படிப்புகளுக்கு செல்லும்போது அவர்கள் இப்பொழுது கண்டுகளித்த அறிவியல் குறுந்தகடு தகவல்கள் மிகவும் பயனுள்ள வகையில் அமையும் என்று கூறுவதில் ஐயமில்லை.இதனால் அறிவியல் படிப்பு படிக்க ஆர்வம் தூண்டப்பட்டு,மேற்படிப்பு படிக்க ஆவல் அதிகரிக்கிறது.
       " புண்ணியம் ஆயிரம் கோடி 
          ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் "
             என்பார் பாரதி.
                  "கற்றலில் கேட்டல் நன்று 
                    கேட்டலில் பார்த்தல் அதனினும் நன்று "
                          அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பொருளாதாரத்தில் சுமாரான நிலையில் உள்ள மாணவர்களுக்கு அறிவியல் தொடர்பான தகவல்களை பார்த்து அறிந்து கொள்ள உதவியாக உள்ள குறுந்தகடு தொடர்ந்து இப்பள்ளியில் 52வது வாரமாக ஒளிபரப்பட்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.

                      


               
                                                            


No comments:

Post a Comment