Tuesday 19 September 2017

 நிலவேம்பு குடிநீர் கசாயம் வழங்குதல் 

பள்ளியில் தொடர்ந்து 5 நாட்கள் நிலவேம்பு குடிநீர்கசாயம்   வழங்குதல் துவக்க விழா 

டெங்கு தடுப்பு விழிப்புணர்வு விளக்க முகாம் 





தேவகோட்டை-தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நகராட்சி சார்பில் தொடர்ந்து 5 நாட்கள் நிலவேம்புகுடிநீர் வழங்கும் விழாவின் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.


                          நிகழ்ச்சியில்  பள்ளி மாணவ தலைவர் அஜய் பிரகாஷ்  வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ . சொக்கலிங்கம் மாணவர்களுக்கு  நிலவேம்புகுடிநீர் கசாயத்தை மாணவர்களுக்கு  வழங்கினார் . பள்ளி  மாணவர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் தேவகோட்டை நகராட்சி சார்பில் நிலவேம்புகுடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளது.டெங்கு தடுப்பு முறைகள் தொடர்பாகவும் விளக்கப்பட்டது.பள்ளி மாணவர்கள் இளம் வயதிலேயே வரும் முன் காக்கும் வகையில் இந்த நிலவேம்பு குடிநீர்கசாயத்தை தொடர்ந்து சாப்பிட்டால் பல்வேறு முக்கிய நோய் பதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம்.மருந்து குடிப்பதற்கு கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் இதன் பலன்கள் அதிகம்.பள்ளி மாணவர்கள் சுமார் 15 மி.லி .குடித்தால் போதுமானது. மாணவர்கள் அனைவருக்கும்,ஆசிரியர்களுக்கும் நிலவேம்புகுடிநீர் வழங்கப்பட்டது.நிறைவாக பள்ளி மாணவ துணை முதல்வர் காயத்ரி  நன்றி கூறினார்.

 பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மாணவ,மாணவியர்க்குநிலவேம்பு குடிநீர் கசாயம் வழங்கினார்.

No comments:

Post a Comment