Saturday 5 August 2017


இராக் , கொரியா நாட்டு விஞ்ஞானிகள் மாணவர்களுடன் கலந்துரையாடல் 

திறன்களை வளர்க்க நன்றாக படியுங்கள் 

இராக் , கொரியா நாட்டு விஞ்ஞானிகள்   பேச்சு  



தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் இராக் ,கொரியா நாட்டு விஞ்ஞானிகள் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.




                                           நிகழ்ச்சிக்கு வந்தவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வரவேற்றார்.தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சந்திரமோகன் தலைமை தாங்கினார்.இராக் நாட்டு பல்கலைக்கழக பேராசிரியர் ராமலிங்கம் மற்றும் கொரியா நாட்டு டோங்குக் பல்கலைக்கழக விஞ்ஞானி காத்தலிங்கம் ஆகியோர் மாணவர்களிடம் பேசும்போது , நாங்கள் தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய கிராமத்தில் படித்து இன்று வெளிநாடுகளில் ஆராய்ச்சி செய்து கொண்டு பல நாட்டு மாணவர்களுக்கு கற்று கொடுத்து வருகிறோம்.
நமது திறன்களை வளர்த்து  கொள்ள வேண்டும்.அதற்கு நன்றாக .படிக்க வேண்டும்.படித்ததை ஆராய்ச்சி செய்தால் புதுமையை வெளிப்படுத்துவீர்கள் .விரிந்து கொண்டே செல்கிறது உலகம்.நாம் நம் ஈடுபாட்டை உலகெங்கும் பரவி விரிவடைய செய்ய வேண்டும்.இவ்வாறு பேசினார்கள்.மாணவர்கள் கோட்டையன் ,ஜெனிபர் ,ரஞ்சித்,நந்தகுமார்,வெங்கட்ராமன்,சுந்தரேசன் ,காயத்ரி உட்பட பலர் கேள்விகள்  கேட்டு பதில்கள் .பெற்றனர் . நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.

 பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் இராக் நாட்டு பல்கலைக்கழக பேராசிரியர் ராமலிங்கம் மற்றும் கொரியா நாட்டு டோங்குக் பல்கலைக்கழக விஞ்ஞானி காத்தலிங்கம் ஆகியோர் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது



No comments:

Post a Comment