Monday 28 August 2017

பரபரப்பான நேரத்தில் விறு,விறுப்பான வாக்கு எண்ணிக்கை 


                      பள்ளியில் தலைவர்களை தேர்ந்தெடுக்க கடந்த 24/08/2017 அன்று  நடந்த தேர்தல்  வாக்கு பதிவின் தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு பின்பு வாக்கு பெட்டிகள் பாதுகாப்பக வைக்கப்பட்டு , இன்று  அவை  பாதுகாப்புடன் பெட்டி திறக்கப்பட்டு ஆசிரியர்களால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன.இதன் முடிவுகள் நாளை அறிவிக்கப்படவுள்ளது.







பள்ளியில் ஏன் தேர்தல் வழியாக வாக்கு சாவடி அமைத்து மாணவர்களை ஒட்டு போட செய்ய வேண்டும்?


                      

ஒட்டு போட்டது தொடர்பாக மாணவர்களின் கருத்துக்கள் :

எட்டாம் வகுப்பு ஜெனிபர் : அனைவரும் 18 வயதில்தான் ஒட்டு போடுவார்கள்.நாங்கள் இந்த வயதில் ஒட்டு போட்டது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.பிற்காலத்தில் நாங்கள் தேர்தலில் நிற்கும் காலங்களில் இது எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.எங்கள் பதவியில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெளிவாக தெரிந்து வைத்து உள்ளோம்.இவ்வாறு கூறினார்.

ஏழாம் வகுப்பு  காயத்ரி : நான் ஒட்டு போட போகிறேன் என்று சொன்னதும் எங்கள் வீட்டில் நம்ப வில்லை.இன்று ஒட்டு போட்டபிறகு எனது விரலில் மை வைத்து உள்ளது எனக்கு புதிய அனுபவமாக உள்ளது.ஒட்டு சீட்டில் பெயர் எழுதி அதனை வாக்கு பெட்டியில் போடும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.கண்டிப்பாக நான் பிற்காலத்தில் தேர்தலில் நின்று வெற்றி பெறுவேன்.இங்கும் நான் வெற்றி பெறுவேன் என்கிற நம்பிக்கை உள்ளது.என்று பேசினார். 


இளம் வயதில் தன்னம்பிக்கை ஏற்படுத்துதல் : 

                      இது போன்று நாம் இந்த இளம் வயதில் ஜனநாயக முறைப்படி தேர்தல் வைத்து ,ஒட்டு போட செய்து ,அவர்களின் இலக்குகளை அவர்கள் வாயிலாக செயல்படுத்த செய்து அதனை வெற்றிகரமானதாக மாற்றும்போது நமது சமுதாயத்தில் வரும்காலங்களில் அரசியலில் நல்ல செயல்பாடுகளை உண்டு பண்ணும் எண்ணங்களை இளம் வயதில் மாணவர்களின் எண்ணங்களில் உருவாகும்போது அவை பசுமரத்து ஆணி போல அவர்கள் மனதில் பதிந்து விடும்.இதனை கருத்தில் கொண்டும் இன்றைய நிலையில் அவர்களின் பொறுப்புகளை அவர்களே செய்யம்போது அவர்களுக்கு வாழ்க்கையில் பொறுப்புணர்ச்சியும் ,தன்னம்பிக்கையும் வளரும்.இதனை ஏற்படுத்துவதே கல்வியின் வெற்றி ஆகும்.



ஜனநாயகத்தில் புதிய முயற்சி

ஜனநாயக முறைப்படி வாக்குச்சாவடி அமைத்து,கையில் மை வைத்து,வாக்குப் பெட்டி வைத்து ,ஒட்டு போட்டு தேர்தல் நடத்தி மாணவ தலைவர்களை தேர்ந்தெடுத்தல்


 பள்ளியில்   தேர்தல் மூலம் மாணவ முதல்வரை  தேர்ந்தெடுத்தல்


 ஜனநாயக முறைப்படி வாக்கு சீட்டு பெட்டி ,வாக்கு சாவடி சென்று ஒட்டு போட்டு மாணவ தலைவர்களை  தேர்ந்தெடுப்பது எப்படி?  நேரடி செயல் முறையில் மாணவ தலைவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல்  .


தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஜனநாயகத்தில் புதிய முயற்சியாக வாக்கு சாவடி அமைத்து பள்ளி மாணவ முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.
                            நிகழ்வின் தொடக்கமாக ஆசிரியை முத்து லெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தேர்தல் தொடர்பான விதிமுறைகளை மாணவர்களிடம் விளக்கினார்.ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் முனைவர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கான தேர்தலின் சிறப்பு பார்வையாளராக தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி வாக்குச்சாவடி மற்றும் மாணவர்கள் ஒட்டு போடும் முறையினை   பார்வையிட்டு மாணவர்களிடம் பேசும்போது ,மாண்வர்களாகிய நீங்கள் மருத்துவர்,பொறியாளர் ஆவதற்கு இலக்கு அமைத்தல் போன்று பிரதம மந்திரி,முதமைச்சர் ஆவதற்கு இலக்கு அமைத்து கனவு காண வேண்டும்.இங்கு  நீங்கள் பொறுப்புகளை பெறுவதற்கு போட்டியிடுவதற்கு உங்களது தொலை நோக்கு திட்டத்தை எழுதி கொடுத்ததையும் ,நீங்கள் இங்கு பேசியதையும் கண்டு மகிழ்ச்சியடைகின்றேன்.ஜனநாயக முறைப்படி வாக்கு சாவடி அமைத்து மாணவ தேர்தல் நடைபெறுவது பாராட்ட படவேண்டியது.உங்கள் கனவுகளை பெரிதாக்கி அதனை அடைய எனது வாழ்த்துக்கள் என்று பேசினார்.தேர்தலில் மாணவ முதலமைச்சர்,
, துணை முதல்வர்,  கல்வி அமைச்சர், வேளாண் அமைச்சர், சுகாதார  அமைச்சர், மக்கள் தொடர்பு அமைச்சர், சத்துணவு அமைச்சர் ஆகிய துறைகளுக்கு போட்டி நடைபெற்றது.மாணவர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு வாக்களித்தனர்.வாக்கு எண்ணிக்கை விரைவில் நடைபெற்று பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும்.தேர்தலுக்கு வேண்டிய வாக்கு பெட்டிகள்,ஒட்டு சீட்டுகள்,வேட்பாளர் பெயர் பட்டியல் ,கையில் வைக்கும் மை போன்ற ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர்,முத்துமீனாள்,சோமசுந்தரம் ,செல்வம் ஆகியோர் செய்து இருந்தனர்.வாக்கு சாவடி அலுவலர்களாகவும் ஆசிரியர்கள் செயல்பட்டனர்.ஆசிரியர்களும் இந்த தேர்தலில் ஒட்டு போட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பட விளக்கம் ;  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஜனநாயகத்தில் புதிய முயற்சியாக வாக்கு சாவடி அமைத்து பள்ளி மாணவ முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.
                      




விரிவாக :






நடுநிலைப் பள்ளியில்  மாணவர் பேரவை தேர்தல்

                          

வாக்கு என்னும் நாள் : 28/08/2017

பதவி ஏற்கும் நாள் : பின்னர் அறிவிக்கப்டும் .

போட்டியில் உள்ள மாணவ அமைச்சர்களின் துறைகள் :

1) மாணவ முதலமைச்சர் 

2) மாணவ துணை முதல்வர் 

3) மாணவ கல்வி அமைச்சர் 

4) மாணவ வேளாண் அமைச்சர் 

5) மாணவ சுகாதார  அமைச்சர் 

6) மாணவ மக்கள் தொடர்பு அமைச்சர் 

7) மாணவ சத்துணவு அமைச்சர் 

   நடுநிலைப் பள்ளி அளவில்  மாணவர் பேரவை தேர்தல் ஏன் ? இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறியதாவது:


பொறுப்பு மூலம் பயிற்சி :

                            சில நாட்களுக்கு முன்பு ஆசிரியர்களிடம் கூறி வியாழன் தோறும் மாத்திரை கொடுக்கும் நிகழ்வு,புதன்கிழமை தோறும் குறுந்தகடு காட்டும் நிகழ்விற்கு மாணவர்களை பொறுப்பாக சொல்லி அதனை செயல்படுத்த சொன்னேன். அவர்கள் மிக அருமையாக அந்த பணிகளை பொறுப்புடன் கவனித்து கொண்டனர்.சரியான நேரத்தில் குறிப்பிட்ட ஆசிரியர்கள் விடுமுறையில் இருந்தாலும் அவர்கள் அதனை ஞாபகப்படுத்தி செயல்படுத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக எங்கள் பள்ளி ஆசிரியர்களுடன் மாணவ பேரவை தேர்தல் நிகழ்த்துவது தொடர்பாக கலந்துரையாடினேன்.அப்போது நாங்கள் மிகவும் யோசனையோடு மாணவர்கள் போட்டியிட ஆர்வமாக இருப்பார்களா  என்கிற சந்தேகத்தை ஆசிரியர்கள் சொன்னார்கள்.மாணவர்களிடம் சொல்லி பார்ப்போம் , அவர்கள் ஆர்வம் குறைவாக இருந்தால் நாம் வேறு யோசனை செய்து கொள்வோம் என்று முடிவு செய்தோம்.மாலை வழிபாட்டு கூட்டத்தில் இது போன்று தேர்தல் நடத்தி அதன் வாயிலாக மாணவ தலைவர்,துணை தலைவர்,பிற துறை அமைச்சர்கள் தேர்ந்தெடுக்க உள்ளோம் என்றுதான் சொன்னேன்.ஆச்சரியம் பாருங்கள் .30க்கும் மேற்பட்ட மாணவர்கள் களத்தில் போட்டியிட போவதாக சொன்னார்கள்.

தேர்தலில் போட்டியிட தொலைநோக்கு திட்டம் :
                                          உடனே ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன் துறைகளை முடிவு செய்து அதனை மாணவர்களிடம் அறிவித்தோம்.அத்துடன் போட்டியில் களம் இறங்கும் வேட்பாளர்கள் தங்கள் போட்டியிட விரும்பும் துறை தொடர்பான தங்களின் திட்டத்தையும்,அதனை பள்ளியில் மாணவர்கள் ஒத்துழைப்புடன் எவ்வாறு செயல்படுத்த உள்ளீர்கள் என்பதனையும் இரண்டு நாள் அவகாசம் கொடுத்து எழுதி எடுத்து வர சொன்னேன்.இரண்டு நாட்கள் சனிக்கிழமை,ஞாயிற்றுக்கிழமை கழித்து திங்கள் கிழமை பள்ளிக்கு வந்த மாணவர்களில் சுமார் 20 பேர் மட்டுமே எழுதி கொண்டு வந்தனர்.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாகிய தாங்கள் எவ்வாறு தங்கள் பள்ளியினை பார்த்து கொள்வார்கள் ,எதிர்கால திட்டம் என்ன போன்றவற்றை தொலைநோக்கு சிந்தனையுடன் எழுதி எடுத்து வந்தனர்.அதனை படித்து பார்த்து அவர்கள் ஆர்வத்தை பாராட்டி நாங்களே அவர்களின் கருத்துக்களுக்கு ஏற்ற துறையை மாலை வழிபாட்டு கூட்டத்தில் அறிவித்தோம்.

தனக்கு வேண்டிய துறையை தானே தேர்ந்தெடுத்தல் :
                                 அப்போது மாணவி சந்தியா தனக்கு சுகாதார துறைதான் வேண்டும் என்று தைரியமாக கேட்டார்.அப்படி எனில் அந்த துறையில் தாங்கள் செய்ய நினைக்கும் மாற்றங்கள் என்ன என்று கேட்டோம்.உடனே அவர் பள்ளியில் சுகாதாரம் தொடர்பாக தான் செய்ய நினைக்கும் தகவல்களை வழிபாட்டு கூட்டத்தில் மாணவர்கள்,ஆசிரியர்கள் முன்பாக தைரியமாக தனது இலக்கை  எடுத்துரைத்தார்.
              அதே போன்று மாணவி பாக்கியலட்சுமி தனக்கு வேளாண் துறை வேண்டும் என்றும் ,தனது தொலை நோக்கு திட்டம் தொடர்பாகவும் விரிவாக மாணவர்களிடம் பேசினார்.அவருக்கும் அவர் விரும்பிய துறையே கொடுத்து உள்ளோம்.
                     மக்கள் தொடர்பு துறையில் போட்டியிடும் பல மாணவர்களில் ஒரு மாணவர் பெயர் கோட்டையன் .இவர் இறகுசேரி பகுதியில் உள்ள தொட்டிய நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர் .( இவர்கள் வீடுகளில் பெற்றோர்கள் வேலைக்கு சுமார் மூன்று மாதங்கள் வெளியூருக்கு இவர்களை சொந்தக்கார்கள் பொறுப்பில் விட்டுவிட்டு சென்று விடுவார்கள் ) .இவர் தானாகவே ஆர்வமுடன் வந்து மாணவர்கள் முன்பு பேச சொன்ன உடன் பேசி எங்களை வியப்பில் ஆழ்த்தினார்.போட்டியிடுவதற்கு ஆர்வத்துடன் வந்து என்னிடம் பேசினார்.

மாணவ வேட்பாளர்கள் வாக்கு சேகரித்தல்  : 
                       போட்டியில் உள்ள அனைத்து மாணவ வேட்பாளர்களையும் அனைத்து மாணவர்களின் முன்பாகவும் அவர்களது தொலைநோக்கு திட்டத்தையும் ,அவர்கள் பள்ளிக்கு செய்ய உள்ள பணிகளையும் குறித்து பேச சொல்லி வாக்கு கேட்க சொன்னோம்.மாணவ வேட்பாளர்களும் அருமையாக சொல்லி வாக்கு சேகரித்து உள்ளனர்.

மாணர்வகளின் கேள்விகளுக்கு வேட்பாளர்கள் பதில் அளித்தல் :  

                           மாணவ வேட்பாளர்கள் பள்ளியில் தாங்கள் செயல்படுத்த உள்ள  செயல்பாடுகளை  ,தொலை நோக்கு திட்டத்தினை  அனைத்து மாணவர்கள் முன்பாகவும் எடுத்துரைத்த பின்பு வாக்களிக்க உள்ள மாணவர்களை கேள்விகள் கேட்க செய்து அது தொடர்பான பதில்களை பெற்ற பின்பு யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பாக முடிவு எடுக்க சொன்னோம்.இதனால் மாணவர்களுக்கும் தாங்கள் தேர்ந்தெடுக்கவுள்ள நபர் செயல்பாடு உடையவரா என்கிற உண்மையையும்,தொலைநோக்கு திட்டம் உடையவரா என்கிற எண்ணத்தையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இளம் வயதில் தன்னம்பிக்கை ஏற்படுத்துதல் : 

                      இது போன்று நாம் இந்த இளம் வயதில் ஜனநாயக முறைப்படி தேர்தல் வைத்து ,ஒட்டு போட செய்து ,அவர்களின் இலக்குகளை அவர்கள் வாயிலாக செயல்படுத்த செய்து அதனை வெற்றிகரமானதாக மாற்றும்போது நமது சமுதாயத்தில் வரும்காலங்களில் அரசியலில் நல்ல செயல்பாடுகளை உண்டு பண்ணும் எண்ணங்களை இளம் வயதில் மாணவர்களின் எண்ணங்களில் உருவாகும்போது அவை பசுமரத்து ஆணி போல அவர்கள் மனதில் பதிந்து விடும்.இதனை கருத்தில் கொண்டும் இன்றைய நிலையில் அவர்களின் பொறுப்புகளை அவர்களே செய்யம்போது அவர்களுக்கு வாழ்க்கையில் பொறுப்புணர்ச்சியும் ,தன்னம்பிக்கையும் வளரும்.இதனை ஏற்படுத்துவதே கல்வியின் வெற்றி ஆகும்.

                               ஆசிரியர்களும் வாக்கு அளித்து  உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்கு எண்ணிக்கைக்கு தயார் செய்தல் : 

                                    மாணவர் பேரவை தேர்தலை  ஜனநாயக முறைப்படி வாக்கு சீட்டு தயார் செய்து ,வாக்கு பெட்டிகளும் தயார் செய்து அதனை தேர்தல் பார்வையாளர்கள் மூலம் பார்வையிட்டு வாக்கு எண்ணிக்கை நடத்தி பதவி ஏற்பு நிகழ்வும் நடத்த உள்ளோம் என்பது குறிப்பிடக்கத்து.

    

No comments:

Post a Comment