Wednesday 19 July 2017

மாணவ  நிருபர்களுக்கு சென்னையில் பயிற்சி -- எழுத்தாளர்  திரு.ராமகிருஷ்ணன்  அவர்களுடன் சந்திப்பு 

தொடர்ந்து  நான்கு ஆண்டுகளாக இப்பள்ளி மாணவர்கள் மாணவ நிருபராக வெற்றி பெற்றுள்ளனர் என்பது பாராட்டுக்குரியது .


 தேர்வான மாணவி ஜெனிபரின் தாய்  சித்தாள் வேலை பார்ப்பவர் , தந்தை சைக்கிளில் சென்று துணி விற்பவர் 





மாணவ நிருபர் பயிற்சிக்காக  சென்னை வரை முதன் முறையாக சென்ற மாணவி , பள்ளி ஆசிரியரின் உதவியுடன் சென்னை சென்று பயிற்சி பெற்று வந்துள்ளார் 


விகடன் சுட்டி ஸ்டார் போட்டியில் மாநில அளவில் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் தேர்வு பெற்றுள்ள ஒரே மாணவி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி ஜெனிபர்க்கு    விகடன் சார்பில் சென்னையில் பயிற்சி -- எழுத்தாளர்  திரு.ராமகிருஷ்ணன் அவர்களுடன்  சந்திப்பு 



      இது வரை தேவகோட்டையில் இருந்து மதுரை வரை செல்லாத மாணவி  இப்பள்ளியில் பயின்று வருவதால்  விகடன் போட்டியில் பங்கேற்று  வெற்றி பெற்று   விகடன் நிருபராக பயிற்சி எடுக்க
முதல் முறையாக சென்னை சென்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மாணவி மேலும் பல வெற்றிகள் பெற்று பல்வேறு நாடுகளுக்கு செல்ல வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
சுட்டி விகடன் நடத்திய பேனா பிடிக்காலம்... பின்னி எடுக்கலாம் !என்கிற தலைப்பில் தமிழகம் முழுவதும்  நடைபெற்ற சுட்டி ஸ்டார் 2017 போட்டியில் காரைக்குடி  மையத்தில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் 5 பேர் தேர்வாகி உள்ளனர்.அவர்களில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் (அரசு உதவி பெறும் பள்ளி ) பள்ளி மாணவி ஜெனிபர்  என்ற மாணவியும் தேர்வாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழக அளவில் உள்ள  அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியிலிருந்து இவர் ஒருவர் மட்டுமே தேர்வாகி உள்ளது பாராட்டுதலுக்கு உரியது.தமிழகம் முழுவதும் மொத்தம் 50க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் தேர்வாகி உள்ளனர்.இவர்களுக்கு  விகடன் சார்பாக பல கட்ட பயற்சி வழங்கப்பட உள்ளது. பரிசு பொருள்களும் வழங்கப்பட உள்ளன.ஆரம்ப நிகழ்ச்சி சென்னையில்
எழுத்தாளர்  திரு.ராமகிருஷ்ணன் அவர்களுடன்   நடைபெற்றது.இவ்வாறு தேர்வு ஆனவர்கள் வருடம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் சார்பாக கட்டுரைகள் எழுதலாம்.படத்துடன் இவர்கள் பெயர் மற்றும் பள்ளியின் பெயர் வெளியவதுடன் குறிப்பிட்ட தொகையும்  பரிசாக  கிடைக்கும்.வெற்றி பெற்ற மாணவியையும் ,பயிற்சிக்கு  அழைத்து சென்ற  ஆசிரியை முத்து  மீனாள் அவர்களையும் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். பயிற்சியில் வழங்கப்பட்ட பரிசு பொருள்களுடன் காலை வழிபாட்டு கூட்டதில் மாணவிக்கு வழங்கப்பட்டது.தொடர்ந்து இப்பள்ளிக்கு ஊக்கம் தந்து கொண்டிருக்கும்  விகடன் குழுமத்திற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
                        நானோ சாட்டலைட் விஞ்ஞானி ரிபாத்  ஷாருக் ,வேட்டையாடு விளையாடு என்கிற தலைப்பில் வேலு சரவணன் நன்றாக மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.எனக்கொரு டவுட்டு என்கிற தலைப்பில் சுட்டி எடிட்டோரியல் டீம் சந்தேகங்களை கேட்டு பதில் அளித்தனர். 

                    
மாணவ நிருபர் பயிற்சிக்காக  சென்னை வரை முதன் முறையாக சென்ற மாணவி , பள்ளி ஆசிரியரின் உதவியுடன் சென்னை சென்று பயிற்சி பெற்று வந்துள்ளார் .தேர்வான மாணவி ஜெனிபரின் தாய்  சித்தாள் வேலை பார்ப்பவர் , தந்தை சைக்கிளில் சென்று துணி விற்பவர் .பள்ளி விடுமுறை நாளில் ஆசிரியை சென்னை அழைத்து சென்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 சுட்டி விகடன் சார்பாக சென்னையில் சுட்டி ஸ்டார்சாக தேர்ந்துடுக்கபட்ட தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் (அரசு உதவி பெறும் பள்ளி )பள்ளி மாணவி ஜெனிபர்   என்ற மாணவிக்கு வழங்கப்பட்ட பரிசு மற்றும் மாணவ நிருபருக்கான அடையாள அட்டை முதலான பொருட்களை காணுங்கள்

No comments:

Post a Comment