Wednesday 31 May 2017

பாரட்டங் தீவில் சுண்ணாம்பு பாறை ,எரிமலை வெடிப்பு,போர்ட் பிளேயரில் சாமுத்திரிகா அருங்காட்சியகம் காணுங்கள்

அந்தமானில் எனது பயண அனுபவங்கள் 

 
                 அந்தமானில் இவற்றை கண்டு மகிழுங்கள்
( ஹிந்தி தெரிந்தால் மிகுந்த நல்லது )





எங்களது பயண அனுபவங்கள் 

விமானத்தின் முதல் பயண அனுபவங்கள் 

6 மாதம் முன்பாக ஏன் டிக்கெட் புக் செய்ய வேண்டும்?

                          காரைக்குடியில் இருந்து (லெ .சொக்கலிங்கம் ) நாங்கள் குடும்பத்துடன் (எனது மனைவி ,மகன் )  மே மாதம் 2017 இல் அந்தமான் (போர்ட் பிளேயர் ) செல்வதற்காக கடந்த நவம்பர் 2016 ஆம் ஆண்டு ஆன் லைன் வழியாக நானே ஏர் இந்தியா விமானத்தில் சென்னை டூ போர்ட் பிளேயர் செல்ல டிக்கெட் புக் செய்தேன்.அப்போது ஒரு டிக்கெட்டின் விலை (போக, வர ) ரூபாய் 7,800 மதிப்பில் புக் செய்தேன்.குறைந்தது 6 மாதத்திற்கு முன்பு புக் செய்தால் தான் விமானம் டிக்கெட்டின் விலை குறைவாக உள்ளது.மே மாதம் டிக்கெட் புக் செய்ய நினைத்தால் ஒரு டிக்கெட்டின் விலை சென்னையில் இருந்து போர்ட் பிளேயர் செல்ல மட்டும்  சுமார் 8,000 ஆகும்.எனவே அந்தமான்  டூர் செல்பவர்கள் 6 மாதம் முன்பே திட்டமிடுவது நல்லது.

விமான நிலையத்தில் எங்கு மிக குறைவான விலையில் சாப்பிடலாம்? விமானம் தாமதம் என்றால் என்ன செய்ய வேண்டும்? 

                           டிக்கெட் புக் செய்து விட்டு 6 மாதம் காலமாக பலரிடம் எங்கு செல்லலாம்,எப்படி செல்லலாம்,என்ன செலவு ஆகும் என்று விசாரித்தேன்.அதில் பல பேர் பல தொகைகளை எங்களுக்கு சொன்னார்கள்.அதில் ஒருவரை தேர்வு செய்து ( ஏப்ரல்  2017 மாதத்தில் சென்று வந்தவர் நன்றாக செய்ததாக முகநூலில் சொல்லியதை அடுத்து அவரை தேர்வு செய்தேன் ) காரைக்குடியில் இருந்து ட்ரெயின் வழியாக சென்னை அடைந்தோம்.அங்கு விமான நிலையத்தில் காலை 10.30க்கு எங்கள் விமானம் .எனவே 8.30க்கெல்லாம் சென்று விட்டோம்.செல்லும்போது இது முதல் முதல் விமான பயணம் எங்களுக்கு என்பதால் சுமார் 330 ரூபாய் கொடுத்து டாக்ஸி எடுத்து விமான நிலையம் அடைந்தோம்.ஆனால் நாங்கள் செல்ல வேண்டிய விமானம் அன்று பார்த்து லேட்.மதியம் 1.30 மணிக்குத்தான் கிளம்பும் என்று சொல்லி விட்டார்கள்.இது வரை அந்த விமானம் லேட் இல்லையாம்.நாங்கள் இது தெரியாமல் போர்டிங் பாஸ் வாங்கி விட்டோம்.பிறகு அங்கு இருந்த ஏர் இந்தியா அலுவலர்களிடம் மதிய உணவு குறித்து விசாரித்தேன்.அப்போது அவர்கள் என்னை டூட்டி ஆபீசர் அவர்களை சென்று பார்க்க சொன்னார்கள்.அவரோ மதியம் 12 மணி அளவில் நீங்கள் செக் இன் செய்து விட்டு கவுண்டர் எண் 7க்கு எதிர்த்தாற்போல் உள்ள சென்னை புட் எக்ஸ்பிரஸ் என்கிற உணவகத்தில் போர்டிங் பாசை காண்பித்தால் உணவு கிடைக்கும் என்று சொன்னார்கள்.நாங்கள் டீ சாப்பிட வெளியில் உள்ள தனியார்  உணவகத்துக்கு சென்றோம்.அங்கு ஒரு சாம்பார் வடையின் ஜோடியின்  விலை ரூபாய் 150.நாங்கள் விலையை கேட்டு விட்டு அப்படியே அருகில் உள்ள விமான நிலைய கேன்டீனுக்கு சென்றோம்.அங்கு விலை மிக குறைவு.ஒரு வடை ரூபாய் 30 மட்டுமே.எங்களுக்கு பிடித்ததை வாங்கி சாப்பிட்டோம்.
                             விமான நிலையத்தின் உள்ளே செல்லும்போது உங்கள் டிக்கெட்டுடன் உங்கள் ஐடி கார்டையும் கண்டிப்பாக வைத்து கொள்ளுங்கள்.அங்கு செக் செய்து விட்டுத்தான் உள்ளே விடுவார்கள்.போர்டிங்பாஸ்  வாங்கும்போது உங்கள் உடைமைகளை கொடுத்து விட்டு ,நீங்கள் கையில் வைத்து கொள்ளும் உடைமைகளுக்கு டேக்  கொடுப்பார்கள் கண்டிப்பாக வைத்து கொள்ளுங்கள்.அது எத்துணை பை வைத்து உள்ளீர்களோ அத்துணை கேட்டு  வாங்கி கொள்ளுங்கள்.இல்லை எனில் செக் இந்த செய்யும்போது அதனை வாங்கி வர சொல்லுவார்கள்.எனவே திட்டமிட்டு வாங்கி கொள்வது நல்லது.நாங்கள் முதன் முதலாக விமான பயணம் செய்ததால் இதனை சொல்கிறேன்.
                                          செக் இந்த செய்து உள்ளே சென்ற பிறகு அங்கு அனைத்து விதமான சோதனைகளும் முடிந்த பின்பு உள்ளே இருந்து விமானம் வருவதை,போவதை எளிதாக காணலாம்.நாங்கள் உணவினை விமான அதிகாரி சொன்ன இடத்தில் சென்று சாப்பிட்டோம்.பிறகு 12.50 க்கு எங்கள் விமானம் உள்ள கேட் எண்ணுக்கு சென்றோம்.அங்கு பல பேர் சாப்பிடாமலும்,உணவினை காசு கொடுத்து வாங்கியும் சாப்பிட்டதை அறிந்தோம்.ஏனெனில் விமான நிலையத்தில் அவர்களுக்கு விமானம் தாமதமாக வருவதால் சாப்பாடு கொடுக்கப்படும் என்கிற தகவல் சரியான முறையில் போய் சேரவில்லை என்பதை பின்பு தெரிந்து கொண்டோம்.போர்டிங் பாசில் சீட் எண் கொடுத்து உள்ளார்கள்.ஆனால் எனோ தெரியவில்லை மிக பெரிய வரிசை ஒரு 20 நிமிடம் மேலாக நின்று கொண்டே இருந்தது.நாங்கள் பொறுமையாக அமர்ந்து இருந்தோம்.அனைவரும் உள்ளே சென்ற பிறகு நாங்கள் உள்ளே சென்றோம்.எங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து கொண்டோம்.முதலில் மோர் கொடுத்தனர்.பிறகு சிறிது நேரம் கழித்து சைவ,அசைவ உணவு எது வேண்டுமோ அதனை அன்புடன் கொடுத்தனர்.
                                       விமானத்தில் முதல் முறையாக  செல்வதால் முதலில் விமானம் தரையில் இருந்து வானத்திற்கு செல்லும்போது ஒரு மாதிரியாக காதெல்லாம் அடைத்து விடுவது போன்று இருந்தது.அதன் பிறகு பஸ்சில் செல்வது போன்று இருந்தது.மீண்டும் விமானம் தரை இறங்கும்போது ஒரு மாதிரியாக இருந்தது.முதலில் விமானம் கிளம்பும்போது தரையில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் பெரியதில் இருந்து சிறயதாக மாறியது.அதுவே எங்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது.சிறிது நேரம் கழித்து விமானம் மேக கூட்டங்களின் வழியே சென்றது.நல்ல பயணம்.
                        அந்தமானில் அனுபவங்கள்
                          நாங்கள் மதியம் 1.50 மணிக்கு சென்னையில் கிளம்பி 3.50 மணிக்கு போர்ட் பிளேயர்யில் உள்ள விமான நிலையத்தை அடையும்போது அபோதுதான் மழை பெய்து நின்று இருந்தது.எங்கள் உடைமைகளை எடுத்து கொண்டு எங்கள் சுற்றுலா ஏஜென்ட் உடன் காரில் சென்றோம்.முதலில் எங்கள் ரூம் போர்ட் பிளேயர் பஜாரில்  இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தாண்டி டௌலி கஞ்சு என்கிற இடத்தில் இருந்தது.அது ரூம் இல்லை.ஒருவர் வேட்டை கட்டி அதனை சுற்றுலா வாசிகளுக்காக 4 ரூமாக அமைத்து உள்ள இடம்.இங்கு இருந்து நீங்கள் சிட்டிக்குள் செல்ல வேண்டுமானால் 4 கிலோமீட்டர் செல்ல வேண்டும்.ஏஜெண்டின் உதவி இல்லாமல் எங்கும் செல்ல இயலாது.
  கரீபியன் கடற்கரை மற்றும் செல்லுலார் சிறை ஒளி -ஒலி காட்சிகள்

                                                  முதலில் எங்களை கரீபியன் கடற்கரைக்கு அழைத்து சென்றனர்.பிறகு மழை பெய்தால் செல்லுலார் சிறையில் ஒளி - ஒலி காட்சி காண்பிக்க மாட்டார்கள் என்று சொல்லலை கொண்டே அந்த இடத்திற்கு எங்கள் ஏஜென்ட் எங்களை அழைத்து சென்றார்.ஆனால் அங்கு காட்சி ஒளி பரப்பானது.ஆனால் ஒன்றும் விளங்கவில்லை.ஏனெனில் எங்களுக்கு ஹிந்தி தெரியாது.அங்கு முழுவதுமே ஹிந்தியில் தான் நடக்கிறது.சொல்ல படுகிறது.ஹிந்தி தெரியாததை,அதன் கஷ்டத்தை நாங்கள் அன்று தான் உணர்தோம்.பிறகு எங்கள் ரூமுக்கு சென்றோம்.வழியில் பிரபாஸ் என்கிற ஹோட்டலில் சாப்பிட்டோம்.அந்த ஹோட்டலில் தோசையில் மைதா மாவு கலந்துள்ளதை அறிந்து கொண்டு பிறகு நாங்கள் அந்த ஹோட்டலில் தோசை வாங்கி சாப்பிடவில்லை.வேறு ஹோட்டல் செல்லலாம் என்றால் எங்கள் ஏஜென்ட் அந்த ஹோட்டலுக்குத்தான் (அவருக்கு கமிஷன் கிடைக்கும் என்பதால் ) அழைத்து செல்வேன் என்று சொல்லிவிட்டார்.

சுற்றுலா ஏஜென்டிடம் எப்படி பேச வேண்டும்?
 
                              இங்கு குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம் நாங்கள் எங்கள் ஏஜென்டிடம்A.C.CAR ,A.C.ROOM,உடன் சாப்பாடும் சேர்த்துதான் பேசி இருந்தோம்.ஆனால் அவரோ இரண்டு இடம் காட்டி விட்டு எங்களிடம் சாப்பாடு என்னுடையது இல்லை என்று சொல்லி விட்டார்.ஏஜென்ட் அவர்களிடம் நான் முன்பு பேசியதை போனில் ரெகார்ட் செய்ததை போட்டு காண்பித்தேன்.அவர் மூஞ்சியில் ஏக கடுப்பு.ஒரு வழியாக ஒத்து கொண்டார்.
நாங்கள் நல்ல ஹோட்டலில் சாப்பிடலாம் என்று நினைத்தால் கூட அதற்கு வண்டியை அனுப்ப வேண்டும்.கூடுதல் கிலோமீட்டர் செல்ல வேண்டும்.அதற்கு தனியாக பணம் கொடுங்கள் என்று சொல்கிறார்.வாயை மூடிக்கொண்டு அவர் சொல்லும் ஹோட்டலில் சாப்பிட்ட ஆக வேண்டிய சூழ்நிலை.இதனால்தான் ஏஜெண்டுகள் சிட்டியில் ரூம் போடுவது கிடையாது.அந்தமானில் புகழ் பெற்ற செல்லுலார் சிறை போன்று இவர்கள் ஒரு ஒதுக்குபுறமான ஏரியாவில் ரூம் எடுத்து நம்மை சிறை வைத்து விடுகின்றனர்.கமிஷன் இருக்கும் இடங்களுக்கும் மட்டுமே அழைத்து செல்கின்றார்கள்.
                                      அந்தமானில் எவ்வளவோ அழகான இடங்கள் உள்ளன.அங்கு வசிக்கும் மக்களும் நல்லவர்கள்.ஆனால் நம்மை சுற்றுலா அழைத்து செல்கிறேன் என்று சொல்லும் ஏஜெண்டுகள் மிகவும் சுமார்.நல்ல இடங்கள் பல உள்ள நிலையில் அவர்களுக்கு கமிஷன் கொடுக்கும் இடங்களுக்கு மட்டுமே அழைத்து செல்கின்றனர்.இதுதான் கொடுமை.மிடில் கிளாசில் இருக்கும் நாமே வாயை கட்டி,வயிற்றை கட்டி பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து போனால் ஏஜெண்ட்களோ நம்மை பல நிலைகளில் மன உளைச்சல்களுக்கு உள்ளாக்குகின்றனர்.

பாராட்டங் தீவிற்கு சுற்று பயணம் : (சுண்ணாம்பு பாறை ,ஆதிவாசிகள் பார்ப்பது,எரிமலை குழம்பு )
                                      பயணத்துக்கு வருவோம்.இரண்டாம் நாள் காலையில் நாங்கள் குடும்பத்துடன் காலை 3.40 மணிக்கெல்லாம் கிளம்பி கடல்,காடு,கடல்,காடு இருக்கும் பகுதியில் வாகன பயணத்தில் ஜராவா எனப்படும் ஆதிவாசிகளும் ,சுண்ணாம்பு பாறை மற்றும் சிறிது அளவில் வெடித்து வெளி வரும் எரிமலை பார்க்க அருமையான வாய்ப்பு.3.40 மணிக்கெல்லாம் கிளம்பி கடல் பகுதி தாண்டி கான்வாய் கிளம்பும்  இடத்திற்கு காலை 4.40 கெல்லாம் சென்று விட்டோம்.அங்கு ஒரு டீ சாப்பிட்டு விட்டு ,டாய்லெட் சென்று விட்டு ரெடியாக இருந்தோம்.இங்கு டாய்லெட் சென்று விட வேண்டும்.ஏனெனில் நாம் அடுத்து இரண்டு மணி நேரம் போலீஸ் பாதுகாப்புடன் வாகனத்தில் ஆதிவாசிகள் வசிக்கும் காட்டு பகுதி வழியாக செல்ல வேண்டும்.வழியில் வாகனங்களை நிறுத்த கூடாது.எனவே இங்கையே அனைத்தையும் சரி செய்து கொள்ள வேண்டும்.ஆதிவாசிகளை பார்க்கலாம்.ஆனால் புகைப்படம் எடுப்பதோ,இடையில் வண்டியை நிறுத்தவோ கூடாது.6 மணிக்கு கிளம்பி சுமார் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஒரே சீரான வேகத்துடன் அனைத்து வண்டிகளும் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து சென்றன.வழியில் ஆதிவாசிகளின் நலம் விரும்பிகள் என நம்மை போன்ற மனிதர்கள் (ஆதி வாசிகளின் மொழி தெரிந்தவர்கள் ) வழியில் நிற்கின்றனர்.அவர்கள் ஆதிவாசிகளை வெளியில் வரவிடாமல் தடுத்து விடுகின்றனர்.ஆனால் அதனையும் மீறி சில இடங்களில் ஆதிவாசிகள் அங்கே.அங்கே நிற்கின்றனர்.அவர்கள் நம்மை ஒன்றும் செய்வதில்லை.நாங்கள் பார்த்த ஆதிவாசிகள் சிலர் அழகாக சட்டை,பாண்ட் அணிந்து இருந்தனர்.சிலர் ஆதிவாசிகளாகவே  இருந்தனர்.
                               இந்த இடத்திற்கு செல்பவர்கள் உணவை கட்டி கொண்டுதான் செல்ல வேண்டும்.ஒன்று செய்யலாம் என்னவெனில் பாரடங்கில் அனுமதிக்கு காத்திருக்கும் நேரத்தில் சாப்பிடலாம்.ஆனால் எங்களுக்கு அப்போது  அந்த எண்ணம் தோன்றவில்லை .டிபன்  ஜகர்தா என்கிற இடத்தில் நமது வாகனம் கான்வாய் வழியாக செல்லும் இடத்தில் காலை 6 மணிவரை காத்திருக்கும் நேரத்தில் காலை 5.30 மணிக்கெல்லாம் நன்றாக கிடைக்கிறது.அப்போதே வாங்கி கொள்ள வேண்டும்.மேலும் இந்த இடத்தில் நாம் டாய்லெட்டையும் முடித்து கொள்ள வேண்டும்.
                       
                        எங்கள் வண்டியின் டிரைவர்  திரு.கண்ணன் எங்களிடம் சொல்லுகையில் ,ஆதி வாசிகளுக்கு என்று தனியாக அரசாங்கமே தற்போது பள்ளிகள் ஆரம்பித்து உள்ளதாகவும்,அவர்களுக்கு உணவு சமைப்பதற்கு ஏதுவாக அரிசி மற்றும் பாத்திரங்கள் வழங்கி உள்ளதாகவும்,அவர்கள் பெண்கள் கர்ப்பமானால் குழந்தை பிரசவம் பார்க்க அரசாங்கம் சார்பாக ஆம்புலன்ஸில் சென்று வைத்தியம் பார்ப்பதற்கும்,தடுப்பூசி போடுவதற்கும் ஆவண செய்து உள்ளதாக தெரிவித்தார்.இவை அனைத்துமே ட்ரைபல் வெல்பேர் எனப்படும் அரசு அமைப்பு மூலம் ஆதிவாசிகளின் மொழி தெரிந்தவர்களை வைத்து அவர்களிடம் பேசி அவர்களை வழிக்கு கொண்டு வந்ததாக தெரிவித்தார்.மேலும் வழியில் சமீபத்தில் அவரது வாகனம் பழுதாகி நின்று விட்டதாகவும்,வாகனம் நின்ற இடத்தில ஆதிவாசியின் குடில் இருந்ததால் அவருடன் வந்த வன அதிகாரி இரவு நேரம் ஆகிவிட்டதால் நாளை வந்து வாகனம் எடுத்து கொள்ளலாம் என சொல்லி சென்று விட்டாராம்.அப்போது அவர் வாகனத்தின் கதவுகளை திறந்து வைக்க சொன்னாராம்.ஏனெனில் ஆதிவாசிகள் இது போன்று கார் எதுவும் நின்றால் உணவு ஏதேனும் கிடைக்கிறதா என்று கார் கதவை திறந்து பார்ப்பார்களாம்.அப்படி கார் கதவை திறக்க முடியவில்லை என்றால் கார் கதவை உடைத்து விடுவார்களாம்.அதனால் தான் கார் கதவை திறந்து வைத்து சென்று விட்டதாகவும்,மறு நாள் வேறு வாகனத்தின் உதவியுடன் வந்து பார்த்தபோது கார் டேப்ரி கார்டர் மட்டும் காணாமல் பொய் விட்டதாகவும் வேறு ஒன்றும் வண்டியில் ஆகவில்லை என்றும் சொன்னார்.சரியான மலை பெய்ததால் மிகவும் பல முயற்சி எடுத்து கான்வாய் செல்லும் நேரங்களில் மட்டுமே சென்று பல ஆயிரங்கள் செலவு செய்து வண்டியை மீண்டும் எடுத்து வந்ததாக தெரிவித்தார்.
                                               இந்த வழியாக நாம் செல்லும்போது அனைத்து வண்டிக்கும் முன்பு ஒரு போலீஸ் வாகனம்,இடையில் ஒரு போலீஸ் வாகனம்,கடைசியில் ஒரு வாகனம் என்று செல்கின்றன.போலீஸ் வாகனம் பாதுகாப்பு இல்லமல் இந்த வழியில் செல்ல இயலாது.ஆம்புலன்ஸ் மட்டுமே அவசரத்திற்கு ஒரு போலீஸ் வாகனத்துடன் எப்போதுவதாவது செல்வதற்கு அனுமதிக்கப்படுகிறது.மாலை 2.30 மணிக்கு கடைசி கான்வாய் பாரடங்கில் இருந்து கிளம்புகிறது.அதனை தவறவிட்டால் நாம் பாரடங்கில் தான் தங்க வேண்டும்.மீண்டும் மறுநாள் காலையில் தான் வர இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.
                                            பாரடங்கில் நம்மை சுமார் காலை 7.50 மணிக்கு இறக்கி விட்டு அனைத்து வாகனத்தையும் ஒரு இடத்தில் பார்க் செய்து விட்டு கடலின் ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு கப்பல் வழியாக ஏற்றி செல்கின்றனர்.இதனில் தான் டெஹிலிபூர் வரை செல்லும் கார்கள்,மக்கள் பயணிக்கும் பேருந்துகள் (பேருந்தில் இருந்து ஆட்களை இறக்கி கப்பலில் ஏற்றி விட்டு) ,பைக்குள் என அனைத்தையும்,மக்களையும் ஏற்றி கொண்டு காலை 8.20 மணிக்கு அந்த கப்பல் நேராக அடுத்த கரைக்கு காலை 8.35 மணிக்கு செல்கிறது.அங்கு நாம் சுண்ணாம்பு பாறை  செல்வதற்கு வனத்துறையிடம் சுமார் 20 நிமிடம் காத்திருந்து அனுமதி பெற வேண்டும்.அனுமதி பெற்ற பின்பு 5 நபர்கள்,10 நபர்கள் அமர்ந்து செல்லும் ஸ்பீடு போட் பணம் கட்டி எடுத்து செல்ல வேண்டும்.
                          நாங்கள் சுமார் 9.10 மணி அளவில் சென்ற ஸ்பீட் போட் சுமார் 40 கிலோமீட்டரில் சென்றது.நல்ல வேகம்.இரண்டு பக்கமும் அலையாத்தி காடுகள் கண்ணுக்கு இனிமை தரும் விஷயம்.ஸ்பீட் போட் பெயருக்கு ஏற்றார் போல் மிகுந்த வேகத்துடன் நீரை கிழித்து கொண்டு பறந்தது.சுமார் 30 நிமிட பயணத்திற்கு பின்பு நாங்கள் 9.50 மணியை போல் சுண்ணாம்பு பாறை இருக்கும் இடத்தை சென்று அடைந்தோம்.நாங்கள் இன்னும்  காலை உணவு சாப்பிடவில்லை.அதற்கான நேரம் இல்லை.
                                            எங்களை போட்டில் வைத்து சாப்பிட்டு கொள்ளுங்கள் என்று எங்கள் டிரைவர் சொன்னார்.ஆனால் போட் சென்ற ஸ்பீடில் எங்களால் சாப்பிட இயலவில்லை.எங்களுக்கு போட் ஒட்டிய நபருக்கோ தமிழ் தெரியவில்லை.ஹிந்தி மட்டுமே பேசினார்.எங்களால் எந்த தகவலையும் பேச இயலவில்லை.ஸ்பீட் போட்டில் இருந்து இறங்கி சுமார் 1.2 கிலோமீட்டர் தூரம் காடு,மலை,குகை,விவசாய நில பகுதிகளை கடந்து சுண்ணாம்பு பாறையை காண நடந்து செல்ல வேண்டும்.இங்கு முக்கிய குறிப்பு நாம் ஸ்பீட் போட்டை விட்டு இறங்கியதும் வனத்துறையினர் நமது பையை நன்றாக அலசிவிடுகிறார்கள்.சாப்பாட்டை எடுத்து செல்ல மறுத்து விடுகிறார்கள்.போட்டில் அதனை வைத்து விட்டு செல்ல வேண்டும். சாப்பிடவும் இல்லாமல் சுமார் 1.2 கிலோமீட்டர் நடந்து சென்று நாம் சுண்ணாம்பு பாறையை பார்க்கவேண்டும்.இங்கு இன்னொரு முக்கியமான விஷயம் சுண்ணாம்பு பறை பார்க்க செல்லும்போது டார்ச் லைட் எடுத்து செ ல்ல வேண்டும்.அப்போதுதான் பல வகையில் இருக்கும்,மிகவும் இருட்டாக இருக்கும் பாறையை பார்க்க இயலும்.வியர்வை கொட்டொ ,கொட்டு என்று கொட்டுகிறது.ஆனால் பார்க்க வேண்டிய இடம்.
                            இங்கும் நாங்கள் ஏமாற்றப்பட்டோம்.எப்படி என்றால் ஸ்பீட் போட்டில் அழைத்து வருபவர்கள் அவர்களே டார்ச் ;லைட் எடுத்து வந்து சொல்கின்றனர்.நன்றாக விளக்கி செல்கின்றனர்.அதாவது சுண்ணாம்பு பாறை எப்படி ஏற்பட்டது,அதற்கும் கடலுக்கும் உள்ள தொடர்பு என்ன,விநாயகர் போன்று,ஆக்டோபஸ் போன்று பல்வேறு வடிவங்களில் உருவாகி உள்ள பாறைகள் பற்றியும்,உள்ளே படங்கள் எடுத்து கொள்வது தொடர்பாகவும் மிக அழகாக விளக்கினார்கள்.எங்கள் போட்டில் அழைத்து சென்றவர் எங்களுடன் வரவில்லை.ஆளையே காணவும் இல்லை.நாங்கள் வேறு ஒரு குழுவினருடன் சென்று இதனை தெரிந்து கொண்டோம்.மீண்டும் வந்து எங்கள் போட் ஓட்டுனரை ஏன் வரவில்லை என்று கேட்டால் அவரிடம் பதில் இல்லை.எனவே நீங்கள் செல்லும்போது அவர் டார்ச் வைத்துள்ளாரா,வந்த நமக்கு தகவல் சொல்வாரா என்பதை விசாரித்து கொண்டு செல்லுங்கள்.நாங்கள் வேறு சிலரை கெஞ்சி டார்ச் வெளிச்சம் பெற்று படங்கள் எடுத்து கொண்டோம்.இந்த நிலைமை உங்களுக்கு வரக்கூடாது.ஏனெனில் நாம் கெய்டு செய்வதற்கும் சேர்த்து தான் காசு கொடுத்து செல்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.
                                                    மீண்டும் நாங்கள் 10.45 மணிக்கெல்லாம் பாராட்டங் திரும்பி விட்டோம்.இப்போது எரிமலை வெடிப்பு பார்ப்பதற்கு சென்றோம்.இதற்கு அங்குள்ள வாகனத்தில் சுமார் 9 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும்.இன்னும் நாங்கள் சாப்பிட வில்லை.எங்களை அழைத்து வந்த டிரைவர் கண்ணன் அவர்களோ சார் சீக்கிரம் சென்று எரிமலை வெடிப்பை பார்த்து வந்து விடுங்கள்.நாம் 12.30 கான்வாய் ட்ரிப்பில் மீடனும் செல்ல வேண்டும் என்கிறார்.எனவே உடன் 11 மணிக்கெல்லாம் 500 ரூபாய் எங்கள் பணத்தில் கொடுத்து எரிமலை வெடிப்பு பார்க்க சென்றோம்.அங்கு சுமார் 500 மீட்டர் தூரத்தில் நாங்கள் சென்ற வாகனம் நிறுத்தப்பட்டது.அங்கிருந்து நடந்துதான் செல்ல வேண்டும்.பிறகு நடந்து சென்று அங்கு அமர்ந்து சாப்பிட்டோம்.நாங்கள் காலையில் 5 மணிக்கெல்லாம் உணவு பார்ஸல் வாங்கியதால் அதில் வடை,சட்னி ஆகியவை கேட்டு பொய் விட்டது.எனவே உணவு வாங்குவார்கள் வடை மற்றும் சட்னியை தவிர்ப்பது நல்லது.காலை சுமார் 11.20 மணிக்கு.பிறகு அங்கிருந்து மலை ஏற்றம் போல் சுமார் 160 அடி தூரம் ஏறி சென்று சிறியதாக வெடிப்பு வருவதை பார்த்தோம்.அந்த இடம் செல்ல ,செல்ல மிக பயங்கரமான அனல் அடிக்கிறது.அங்கிருந்து மீண்டும் நாங்கள் சரியாக மதியம் 12.15க்கு பாராட்டங் திரும்பினோம்.அங்கிருந்து வேகமாக எங்கள் நேரத்துக்கு ரெடியாக நின்ற கப்பலில் ஏறி இந்த கரையில் ஏறி 12.28க்கு அடுத்த கரையை அடைந்தோம்.வேகமாக எங்கள் டிரைவர் கண்ணன் செயல்பட்டு கான்வாய் சென்று வண்டி செல்ல அனுமதி பெற்று 12.35 மணிக்கு எங்கள் வண்டி பாரடங்கில் இருந்து கிளம்பி மதியம் 2.05 மணிக்கு ஜகர்தா என்கிற இடத்தை அடைந்தது.வரும் வழியில் அதிகமான ஆதிவாசிகளை பார்த்தோம். (இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் டூர் அழைத்து செல்லும் ஏஜென்ட் இந்த எரிமலை வெடிப்பை பார்க்க செல்லும் ரூபாய் 500  குறித்தோ அல்லது இந்த இடம் தொடர்பாகவோ நமக்கு சொல்வது இல்லை.நாங்களே விசாரித்து தெரிந்து கொண்டோம் என்பது குறிப்பிடத்தக்கது.விஷயம் தெரிந்து கேட்டால் உங்கள் செலவில் செல்லுங்கள்  என்று சொல்கிறார்கள் )
                      மதியம் 2.05 க்கு ஜகர்தாவில் காளியம்மாள் உணவகத்தில்  சாப்பிட்டோம்.நல்ல  மதிய உணவு. இவர்கள் மதுரை மாவட்டம் கருங்காலக்குடியை சேர்ந்தவர்கள்.நன்றாக எங்களிடம் பேசினார்கள்.உணவும் சுவையாக இருந்தது.மீண்டும் அங்கிருந்து வாகனத்தில் பயணம் செய்தோம்.சுமார் 4.30 மணி அளவில் எங்களது ரூமை அடைந்தோம்.வரும் வழியில் எனது மகனுக்கு நீண்ட பயணத்தில் உடல் சரியில்லாமல் ஆகி விட்டது.வாந்தி தொடர்ந்து எடுத்து கொண்டே இருந்தார்.பிறகு மாத்திரை கையில் வைத்து இருந்ததால் அதனை கொடுத்து சரி செய்தோம்.

சுற்றுலா ஒரு திருப்பு முனை
                                                 பிறகு எங்கள் ரூமில் இருந்து நாங்கள் மேலைசிவல்புரி ஊரை சார்ந்த திரு.அண்ணாமலை செட்டியாரை சந்திக்க சென்றோம்.அந்த சந்திப்பு எங்களுக்கு ஒரு திருப்பு முனையாக இருந்தது.ஏனெனில் அவரது மகன் திரு.சண்முகம் எங்களுக்கு, எங்கள் ஏஜென்ட் சொல்லி இருந்த இடங்களை தவிர்த்து மிக அருமையான இடங்களை சொன்னார்கள்.இவை அனைத்துமே பெரும்பாலான ஏஜெண்டுகள் சொல்லாத இடங்கள் .ஏனெனில் இங்கு ஏஜெண்டுகளுக்கு அதிகமான கமிஷன் கிடைக்காது.பின் வரும் விஷயங்களில் அவற்றை நான் குறிப்பிடுகிறேன்.திரு.அண்ணாமலை செட்டியார் அவர்கள் சுமார் 35 வருடமாக அந்தமானில் வாழ்ந்து வருகிறார்.அவரது வீட்டில் இரவு உணவு அருந்தி விட்டு எங்களை எங்கள் ரூமுக்கு அவரது காரில் கொண்டு போய் சேர்த்தார்.நன்றாக பேசிக்கொண்டார்.எந்த உதவியாக இருந்தாலும் என்னை அழையுங்கள் என்று சொல்லி சென்றார்.எங்களுக்கு ஒரு புதிய உற்சாகம் வந்தது.

போர்ட் பிளியேரில் உள்ள மரங்கள் அறுவை மில்
                            மீண்டும் மறு நாள் அதாவது மூன்றாவது நாள் எங்கள் ஏஜென்டிடம் புதிய சுற்றுலா திட்டத்தை சொன்னேன்.முதலில் மறுத்தார்.அது நன்றாக இருக்காது,இது நன்றாக இருக்காது என்று சொன்னார்.நானும் விடவில்லை.மீண்டும்,மீண்டும் கேட்டேன்.பிறகு அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் அதிகமாக பணம் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்.நானும் சரி என்று சொன்னேன்.அதன் தொடர்ச்சியாக நாங்கள் மூன்றாவது நாள் அன்று காலையில் முதலில் மர அறுவை மில் பார்க்க சென்றோம்.அங்கு எங்களது ஏஜென்ட் டிக்கெட் எடுத்து கொடுத்து உள்ளே அனுப்பி விட்டார்.(ஒருவருக்கு ரூபாய் 10 மட்டுமே ) .முதலில் அங்குள்ள மியூசியம் பார்த்தோம்.பிறகு இரண்டாம் உலக போரின் போது குண்டு போடப்பட்ட இடத்தை சென்று பார்த்தோம்.
                               பிறகு காலை 10.35 மணி அளவில் மரங்கள் அறுக்கும் இடத்தை நேரில் சென்று பார்க்க சென்றோம்.அங்கு 10.30 முதல் 11 மணி வரை சாப்பாட்டு நேரம் எங்களால் தொடர்ந்து அதனை பார்க்க இயலவில்லை.இந்த தகவலை எங்கள் ஏஜென்ட் சொல்லவில்லை.மேலும் இங்கு உள்ளே நேரடியாக கடலில் இருந்து மரம் உள்ளே கொண்டு வரப்படுவதையும்,மேலும் பெரிய அளவில் படாக் மரங்கள் அங்கே அறுத்து சரி செய்து அடுக்கி வைக்கப்பட்டுள்ளது கண்ணுக்கு அழகாக இருக்கிறது.நாங்கள் மரங்கள் அறுப்பதை பார்க்க இயலாமல் ஏக்கத்துடன் மீண்டும் அடைத்த இடமான செல்லுலர் சிறைக்கு 11 மணிக்கு சென்று சேர்ந்தோம்.இங்கு குறிப்பிட வேண்டிய செய்தி,எங்களுடன் வந்த சில ஏஜெண்டுகள் மரங்கள் அறுவை மில்லின் உள்ளே வந்து அனைத்தையும் விளக்கி சொன்னார்கள்.ஆனால் எங்கள் ஏஜெண்டு உள்ளேயும் வரவில்லை.சொல்லவும் இல்லை.நாங்கள் வெளியே வந்து ஏன் சார் உள்ளே வரவில்லை என்றும்,10.30 மணி முதல் 11 மணி வரை சாப்பாடு நேரம் என்று ஏன் சொல்லவில்லை என்றும் கேட்டோம்.அதற்கு அவர் எனக்கும் தெரியாது என்று சொன்னார்.நீங்கள் சொல்லி தான் தெரியும் என்றார்.விளங்கி போகும் எங்களது சுற்றுலா என்று எங்கள் நிலைமையை எண்ணி கொண்டே நாங்கள் மீண்டும் செல்லுலார் சிறை பார்க்க சென்றோம்.

செல்லுலார் சிறை முழுவதும் சுற்றி பார்த்தல்
                          செல்லுலார் சிறைக்கு காலை 11 மணி அளவில் சென்றோம்.நல்ல வெய்யில்.இந்த நேரத்தில் இங்கு செல்ல கூடாது.அதனை லேட்டாக தான் உணர்ந்தோம்.இங்கு டிக்கெட் விலை ஒரு நபருக்கு ரூபாய் 30 மட்டுமே.இங்கு கைடு தேடினோம்.தமிழ் அல்லது ஆங்கிலம் யாராவது இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினோம்.ஆனால் கைடு அவர்களோ ஹிந்தி மட்டுமே தெரியும் என்று சொல்லி விட்டார்.ஆனால் எங்கள் ஏஜெண்ட்டோ தமிழ் தெரிந்த கைடு உள்ளே உள்ளார் என்று சொல்லி விட்டு ,ஏமாற்றி விட்டு வெளியே சென்று விட்டார்.பிறகு நாங்களே ஒவ்வொரு இடமாக பார்த்தோம்.

1) செல்லுலார் சிறை தொடர்பான பல்வேறு தகவல்களை விளக்கும் படங்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் உள்ளன.அதில் ஒரு படத்தில் நானே செல்லுலார் சிறையின் கடவுள் என்று சொல்லும் டேவிட் பேரி என்பவரின் கொடூர தலைமையினை எதிர்த்து கைதிகள் உண்ணாவிரதம் இருந்ததை முறியடிக்கும் வகையில் சுமார் 6 நாட்களுக்கு பிறகு மருத்துவரின் உதவியுடன் கைதிகளின் வாயிலும்,பின் பக்கத்தில் ஆசன வாயிலும் பைப்பை சொருகி உள்ளே திரவ வடிவிலான உணவை உள்ளே தள்ளியதாக தெரிவித்துள்ளனர்.

2) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் போர்ட் பிளேயிர்  வருகை,செல்லுலார் சிறை வருகை,வைப்பர் தீவில் அவரது வருகை,ரோஸ் தீவில் அவர் இருந்த இடங்கள்,அவரது முழு வாழ்க்கை வரலாறும் அங்கே கேலரியாக தொகுக்க பட்டுள்ளது.அருமையான தகவல் அடங்கியது.

3) பிறகு நீங்கள் உள்ளே எவ்வாறு சிறை கைதிகளை கொடுமை படுத்தினார்கள்,டேவிட் அமர்ந்திருந்த சேர் ,சிறையை சுற்றிலும் பார்க்கும் வாய்ப்பு,தூக்கு மேடை,அதன் கீழ் பகுதி,சிறைகளில் உள்ளே சென்றும் பார்க்க இயலும்.சிறையின் வெளியே எட்டி பார்த்தால் கடல் தான் தெரியும்.சிறைகள் நீண்ட வரிசையில் பல நூறு உள்ளன.அதன் முதல் தளம்,இரண்டாம் தளம் என அனைத்தும் சென்று பார்த்தோம்.சிறையின் மேல் தளம் (இரண்டாவது மாடிக்கு மேல் ) மொட்டை மாடி மிகப்பெரியது.அங்கு இருந்து நாம் கடலை ரசிக்க இயலும்.அனைத்தையும் பார்த்து விட்டு நாங்கள் மீண்டும் சிறையின் முன் பகுதிக்கு வந்தோம்.அங்கு சிறைகள் எங்கு உள்ளன ,அவற்றின் வரலாறு என்ன,சிறையில் என்ன மாதிரியான பொருள்கள் பயன்படுத்தினார்கள்,காவலர்கள்  மற்றும் கைதிகளின் பயன்பாட்டில் உள்ள தனி,தனி பொருள்களை காட்சிக்கு வைத்து உள்ளனர்.

ஹவெலக் தீவிற்கு கப்பல் பயணம் செல்வதற்கு ஜெட்டி ( துறைமுகம்தான் ஜெட்டி எனப்படும் ) செல்லுதல்
                                             மதியம்   சுமார் 12 மணி அளவில் பார்த்து விட்டு மீண்டும் நாங்கள் ஹவெலக் தீவு செல்ல போட் இருக்கும் இடத்திற்கு சுமார் 1 மணிக்குள் செல்ல வேண்டும் என்று எங்கள் ஏஜென்ட் சொன்னார்.நான் உடனே போட் இருக்கும் இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மரங்கள் அறுவை மில்லை மீணடும் சென்று பார்த்து விடலாம் என்று முடிவு செய்து எங்கள் ஏஜென்டிடம் பேசினால் அவரோ அந்த ஒரு கிலோமீட்டற்கு அதிகமாக காசு கொடுங்கள் என்கிறார்.நான் அவரிடம் ஏன் சார் இப்படி எல்லாம் காசு கேட்டால் என்ன அநியாயம் ? ஏன் என்று கேட்டேன்.அவர் பாட்டுக்கும் வாயில் வந்ததை சொல்லி கத்தி கொண்டு இருந்தார்..பிறகும் அவர் கத்திகொண்டே இருந்தார்.நான் டிரைவரிடம் நேராக வண்டியை மரங்கள் அறுவை மில்லுக்கு விட சொன்னேன்.
                                 மரங்கள் அறுவை மில்லுக்கு மீண்டும் மதியம் 12.20 போல் வந்தோம்.அங்கு தமிழ் நன்றாக பேச கூடியவர்கள் அதிகம் உள்ளனர்.அவர்ளிடம் பேசி ஒரு லாரிக்கு பாடி கட்ட கூடிய மரம் எவ்வாறு அறுக்கப்படுகிறது என்பதை மிக தெளிவாக அனைத்து சந்தேகங்களையும் கேட்டு தெளிவாக்கி கொண்டு 12.45 போல் அங்கிருந்து துறைமுக பகுதிக்கு சென்றோம்.

ஏஜெண்டின் தொழில் அனுபவம்
                               இங்கு நான் ஒன்றை குறிப்பிட வேண்டும்.துறைமுகத்தில் எங்கள் ஏஜென்ட் சிறிது நேரத்திற்கு முன்பு கத்திய தகவல் எதுவமே நடக்காதது போல் எங்களுக்கு உண்டான மதிய உணவு பொட்டலத்தை எங்கள் கையில் கொடுத்து ,தனியார் போட்டிற்கான ( ஒரு ஆளுக்கு ஒரு டிக்கெட் ரூபாய் 1,100 ஆகும்.) டிக்கெட்டையும் கொடுத்து அனுப்பினார்.இதுதான் பிசினஸ் தந்திரம்.

தனியார் கப்பலில் சென்ற அனுபவம்
                              தனியார் மேக் குருஸ் போட் என்பது மிகவும் அருமையாக இருந்தது.இதனில் ரூபாய் 1,100,    1,500,     2,500 ரூபாய்களுக்கு டிக்கெட் உள்ளது.நாங்கள் ரூபாய் 1,100 இல் சென்றோம்.இரண்டு மணி நேர பயணம் .போர்ட் பிளேயர் டூ ஹவேலோக் தீவு செல்வதற்கு ஆகும் நேரம் ஆகும்.கப்பல் போய் நிற்கும் இடத்தை ஜெட்டி என்று அழைக்கின்றனர்.அங்கு எங்களது ஏஜெண்டின் பெயர் எழுதிய தட்டியுடன் ஒருவர் நின்றார்.அவரை சென்று சந்தித்தோம்.அவர் எங்களை ஒரு ஜீப்பில் ஏற்றி நேராக நாங்கள் தங்க வேண்டிய அறைக்கு அழைத்து சென்றார்.நாங்கள் தங்கிய ஹோட்டலின் பெயர் சவரவு.ஆகும்.ஆனால் தயவு செய்து இங்கு யாரும் தங்க வேண்டாம்.இரவு முழுவதும் ஒரே பூச்சி கடி.தூங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டோம்.ஹவோல்க் தீவில் பார்க்க வேண்டிய இடங்கள் .

ஹவெலக் தீவில் பார்க்க வேண்டிய இடங்கள்

கல்பத்ரா பீச்

1) கல்பத்ரா கடற்கரை .இது மிகவும் அருமையான கடற்கரை.இங்கு கூட்டம் அதிகம் கிடையாது.இங்கு யாரும் வரவும் இல்லை.ஏனெனில் பெரும்பாலான ஏஜெண்டுகள் இங்கு அழைத்து வருவது கிடையாது.இங்கு குளிக்க இயலாது.ஏனெனில் இங்கு அதிகமான கல் பாறைகள் இருப்பதால் கல்பத்ரா என்கிற பெயர் வந்துள்ளது.
                             இங்கு முக்கியமான விஷயம் சூரிய உதயம் காலையில் பார்க்க இயலும்.வானம் மேக  மூட்டம் இல்லாமல் இருந்தால் பார்க்கலாம்.இங்கு செல்வதற்கு ரூபாய் 400 மட்டுமே நாங்கள் ஆட்டோவிற்கு குடுத்தோம் .ஆனால் எங்கள் ஏஜெண்ட்டோ எங்களிடம் ரூபாய் 1,000 கேட்டார்.
                                                நாங்கள் ரூம்க்கு சென்று சுமார் 4.30 மணி அளவில் எங்கள் ரூமில் இருந்து  கிளம்பி நேராக பஜார் சென்று விசாரித்தோம்.அங்கு இரண்டு,மூன்று பேரிடம் விசாரித்து விட்டு ( ஹிந்தி தெரியாதுதான் வருத்தத்தை உணர்தோம் ) பிறகு கவுதம் என்கிற நபர் ஒட்டிய ஆட்டோவில் விசாரித்து இரண்டு மணி நேரம் காத்திருப்பதுடன் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கல்பத்ரா கடற்கரைக்கு சென்றோம்.நீண்ட தூரம் கடற்கரையில் நடந்து விட்டு,ஓய்வு எடுத்து விட்டு மீண்டும் சுமார் 6.30 மணி அளவில் எங்கள் ரூம்க்கு சென்றோம்.கவுதம் என்பவர் எங்களிடம் நன்றாக ஆங்கிலத்தில் பேசினார்.( அவரது எண் : 09476070226).
                              அவரிடம் நாங்கள் தங்கி இருக்கும் அரை பாதுகாப்பானதா என விசாரித்ததற்கு அவரோ அந்தமான் முழுவதுமே பாதுகாப்பானதுதான் என்று அருமையான பதில் சொன்னார்.பின்பு அவரிடம் மறுநாள் காலை 4 மணி அளவில் சூரிய உதயம் பார்ப்பதற்கு செல்லலாம் என கேட்டு அதற்கு ஒரு ஒப்பந்தத்தை போட்டு கொண்டோம்.

ஹவெலக் தீவில் பகல் கொள்ளை மற்றும் மோசமான ரூம் அனுபவம்
                             பிறகு எங்கள் ரூமுக்கு வந்தால் அங்கே கரண்ட் இல்லை.அப்போது எங்கள் அறைக்கு பக்கத்து அறையில் தங்கி இருந்த ஒருவர் குடும்பம் வெளியில் அமர்ந்து இருந்தனர்.அவர்களிடம் பேசினோம்.அவர்களையும் கல்பத்ரா கடற்கரைக்கு அழைத்தோம்.அவர்களோ வேறு ஒரு ஹோட்டலில் ஆன்லைன் வழியாக ரூம் போட்டதில் அவர்கள் தீடிரென இந்த அறைக்கு மாற்றி விட்டதாக தெரிவித்து விட்டு,அவரகள் ஏஜென்டிடம் பேசினார்கள்.அவரோ 11 நபர்களுக்கு ரூபாய் 4,400 கொடுத்தால் அழைத்து செல்கிறேன் என்று சொல்லி விட்டார்.என்ன கொள்ளை பாருங்கள்.அவர் எதுவுமே பேசவில்லை.அவரும் சென்னையை சேந்தவர் என்பதால் எளிதாக தமிழில் பேசினோம்.நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் சவுரவில் ரூமில் இரவு முழுவதும் பூச்சி கடி.சரியான தூக்கம்  இல்லை.

சூரிய உதயம் காணுதல் 
                           பிறகு மறு  நாள் காலை 4.15 மணிக்கெல்லாம் அதே ஆட்டோவில் கிளம்பி நாங்கள் 4.30 மணிக்கெல்லாம் கல்பத்ரா கடற்கையை அடைந்தோம்.6 மணி வரை அமர்ந்து இருந்தோம்.ஆளே கிடையாது.அன்று பார்த்து வானம் மேக மூட்டத்துடன் இருந்ததால் எங்களால் சூரிய உதயம் பார்க்க இயலவில்லை.இருந்த போதும் காலையில் அமைதியான கடற்கரையை பார்த்த மன சந்தோசத்துடன் எங்கள் அறைக்கு திரும்பி வந்தோம்.
                              கல்பத்ரா கடற்கரையில் எதுவும் வாங்கி சாப்பிடாதீர்கள்.ஏனெனில் விலை அதிகம்.ஒரு டீ விலை ரூபாய் 25.ஆனால் அதுவே ஹவேலோக் தீவில் டீ விலை ரூபாய் 10 மட்டுமே.
                             காலையில் இருந்து எங்களின் ரூம் ஓனரிடம் திரும்பி செல்வதற்கு கப்பல் டிக்கெட் கேட்டோம்.நீங்கள் கப்பலுக்கு செல்லும்போது அங்கு டிக்கெட் ரெடியாக இருக்கும் என்றார்.சரி என்று காலை 8 மணி அளவில் இரண்டாவது இடத்திற்கு சென்றோம்.ரூமை காலி செய்து விட்டு எங்களது உடைமைகளை ஹோட்டலின் முன்பு பாதுகாப்பாக வைத்து விட்டு ராதா நகர் கடற்கரைக்கு சென்றோம்.

ராதா நகர் பீச்

2) ராதா நகர் கடற்கரை : இங்கு மிகப்பெரிய அள்வில் குளிக்கும் வசதி செய்ததுபோல் இயற்கை அமைந்து உள்ளது.கடல் அலைகள் பாயை சுருட்டி கொண்டு வருவது போல் அழகாக வருகிறது.நீண்ட தூரத்திற்கு வலை கட்டி உள்ளதுடன் போலீஸ் பாதுகாப்பு,லைப் கார்ட் பாதுகாப்பு என அனைத்தும் உள்ளது.எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இங்கு நாம் நன்றாக குளிக்கலாம்.எந்த பயமும் இல்லை.
                         ராதா நகர் பீச் செல்லும் வழியில் சுமார் 7 கிலோமீட்டர் தூரம் மிக அருமையான இயற்கை சூழ்நிலை உள்ளது.பாக்கு மரங்களும்,தென்னை மரங்களும் அதிக அளவில் அழகாக உள்ளன.
                                           நாங்கள் சுமார் 8.30 மணி அளவில் ராதா நகர் பீச்சுக்கு சென்றோம்.சுமார் 10.30 மணி வரை நன்றாக குளித்தோம்.பிறகு பல்வேறு இடங்களில் அங்கங்கே அமைக்கப்பட்டுள்ள ஓய்வு இடங்களில் நன்றாக ஓய்வு எடுத்தோம்.இந்த இடத்தில் குறிப்பிடத்தக்க விஷயம் கடலில் குளித்த பிறகு நீங்கள் இங்கு உள்ள நல்ல தண்ணீர் பாத்ரூமை பயன்படுத்தி கொண்டு குளிக்கலாம்.இது நன்றாக சுத்தமாக உள்ளது.ஒரு நபருக்கு ரூபாய் 10 மட்டுமே ஆகும்.

ராதா நகர் பீச்சில் சாப்பாடு
                            பிறகு அங்கு உள்ள ஸ்ரீ ஹரி ஹோட்டலில் சாப்பிட்டோம்.சாப்பாடு நன்றாக இருந்தது.ஒரு சாப்பாட்டின் விலை ரூபாய் 120 மட்டுமே.
 சுற்றுலா ஏஜெண்டின் ஏமாற்றும் திட்டம் 

பிறகு அங்கிருந்து சுமார் 2.30 மணி அளவில் நாங்கள் மீண்டும் கிளம்பி ஜெட்டியை அடைந்தோம்.சுமார் 2.55 மணி முதல் ஹோட்டல் ஓனரிடம் கப்பல் டிக்கெட் கேட்டோம்.அவரோ தரவில்லை.இதோ வருகிறேன்.அதோ வருகிறேன் என்று சொன்னார்கள்.3.30 மணிக்கு கப்பல்ப் என்று அறிவித்தார்கள் .எங்கள் ஏஜென்ட் அனுப்பிய நபரோ சரியாக 3.15 மணிக்கு எங்களுக்கு டிக்கெட் கொடுத்தார்.பிறகு 5 நிமிடம் கழித்து எங்கள் அருகில் இருந்த நண்பர் டிக்கெட்டை பார்த்து விட்டு ,சார் உங்களுக்கு டெக் என்கிற இடத்தில் டிக்கெட் வாங்கி கொடுத்து உள்ளார்.நீங்கள் நின்று கொண்டுதான் கப்பலிலோ செல்ல வேண்டும் என்றார்.எனக்கு உடனே எங்கள் ஹவேலோக் ஏஜென்டிற்கு போன் அடித்தால் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.எங்களது போர்ட் பிளியேற் ஏஜெண்டை தொடர்பு கொண்டால் அவரும் சரியாக பதில் சொல்லவில்லை.பிறகு இரண்டு மணிநேரம் முழுவதும் அரசு  கப்பலின் மேல் தளத்தில் நின்று கொண்டே (மிகப்பெரிய என்ஜின்  சத்தத்துடன் ) எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.இதில் எனது மகனுக்கு நல்ல வாந்தி வேறு.மிகவும் சிரமத்துடன் வந்து சேர்ந்தோம்.
                             என்னுடன் வரிசையில் நின்ற மற்றுமொருவர் ,அவருக்கும் டெக் என்றுதான் டிக்கெட்.அவரோ என்னுடன் பயணிக்கும்போது டிக்கெட்டை எடுத்து விளக்கம் சொன்னபோது ,சார் எங்கள் ஏஜென்ட் YOU SIT ANY WHERE IN SHIP என்று சொன்னார்.என்னிடம் ஒரு டிக்கெட்டுக்கு ரூபாய் 700 வாங்கி விட்டார்.டிக்கெட்டின் விலை ரூபாய் 355 மட்டுமே.என்ன கொடுமை பார்த்தீர்களா? ஏஜென்ட் பெரும்பாலானோர் ஏமாற்றுவதில் தான் குறியாக உள்ளனர்.ஹவேலோக் தீவில் பஜார் அருகில் எங்களை தங்க வைத்தவர் பெயர் பிரசன்னா.இவரது ஹோட்டல் பெயர் சவுரவ் ஆகும்.தயவு செய்து இவரது ரூமில் தங்காதீர்கள்.ஏமாற்றம்தான் மிஞ்சும்.
                             இதனை முன்பே தெரிவித்து, சார் அரசு கப்பலில் சிட்டிங் கிடைக்காது.தனியார் படகில் செல்லுங்கள் என்று சொன்னால் எவ்வளவு நன்றாக இருக்கும்.ஆனால் அதனை சொல்ல மாட்டேன் என்கிறார்கள்.எனவே இதனை படிக்கும் நீங்கள் அவசியம் தனியார் கப்பலில் செல்வதே நன்று.

ஹவெலக் தீவில் 10வெறும்  ரூபாயில் அனைத்து இடங்களுக்கும் செல்லும் அரசு பேருந்து
                               ஜட்டியில் இருந்து அனைத்து இடங்களுக்கும் ரூபாய் 10இல் பஸ் செல்கிறது.நாம் பஸ் மூலமாவே எளிதாக அனைத்து இடங்களுக்கும் சென்று வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

எலிபன்ட் பீச்

3) மூன்றாவதாக இங்கு காண வேண்டிய இடம் எலிபன்ட் கடற்கரை.இங்கு பல்வேறு கடல் சார்ந்த விளையாட்டுக்கள் உள்ளன.உங்கள் பணம் அதிகம் செலவு ஆகும் இடம்.எலிபன்ட் கடற்கரை செல்வதற்கு நீங்களாக ஜெட்டியில் சென்று டிக்கெட் எடுத்தால் ரூபாய் 570 மட்டுமே.ஆனால் ஏஜென்ட் வழியாக செல்லும்போது ரூபாய் 750 கேட்கிறார்கள். ஹவேலோக் தீவில் இருந்து எலிபன்ட் தீவிற்கு செல்ல அரை மணி நேர போட் பயணம்.அங்கு இரண்டு மணி நேரம் விளையாட்டுக்கள் விளையாண்டு விட்டு மீண்டும் அதே போட்டில் திரும்பி வரவேண்டும்.நாங்கள் இங்கு செல்லவில்லை.

                                   போர்ட் பிளியேற் மாலை 7.00 மணிக்கு சென்று அடைந்தோம்.பிறகு சாப்பாட்டை பார்சல் கட்டி கொண்டு ரூமுக்கு சென்றோம்.இந்த இடத்தில நாங்கள் ரூமுக்கு சென்று விட்டு மீண்டும் வந்து சாப்பிட்டு கொள்ளலாம் என்று சொன்னோம்.எங்கள் ஏஜெண்ட்டோ அதற்கு தனியாக காசு கொடுக்க வேண்டும்.எனவே நீங்கள் நேராக ரூமுக்கு பார்சல் கட்டி செல்லுங்கள் என்று சொல்லி விட்டார்.

ரெட்ஸ்கின் தீவு சுற்றுலா

                           5ம் நாளன்று காலையில் 7.40 மணிக்கெல்லாம் கிளம்பி வண்டூர் பீச் அருகில் உள்ள ரெட்ஸ்கின் தீவிற்கு செல்வதற்காக போர்ட் பிளேயர் ரூமில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் வாகனத்தின் வழியாக பயணம் செய்தோம்.பிறகு மகாத்மா காந்தி அருங்காட்சியகம் பகுதியில் அமைந்துள்ள இடத்தில் ரெட்ஸ்கின் தீவிற்கு டிக்கெட் எடுத்து கொண்டோம்.டிக்கெட்டின் விலை ரூபாய் 750 .

1)  வருடத்தில் 6 மாதம் ஜாலிபாய் தீவும், 6 மாதம்  ரெட்ஸ்கின் தீவு திறந்திருக்கும்.இங்கு செல்வதற்கு முதல் நாள் அந்தமான் வன அலுவலகத்தில் சென்று நமது அடையாள அட்டை நகல் கொடுத்து அனுமதி பெற வேண்டும்.அனுமதிக்கு ஒரு நபருக்கு ரூபாய் 50 மட்டுமே.12 வயதுக்குள் இருந்தால் ரூபாய் 25 மட்டுமே.ஆனால் போட்டில் செல்வதற்கு 6 வயதுக்குள் இருந்தால் மட்டுமே பாதி காசு.இல்லை என்றால் முழு டிக்கெட் வாங்கி கொள்கிறார்கள்.
                                   நாங்கள் சென்ற போது ஜாலி பாய் தீவு மூடி விட்டார்கள்.ரெட்ஸ்கின் தீவுதான் திறந்து இருந்தது.எங்கள் ஏஜென்ட் அது வெஸ்ட் என்று எங்களிடம் சொல்லி பார்த்தார்.ஆனால் நாங்கள் அங்கு செல்ல வேண்டும் என்று சொல்லி விட்டோம்.அது அருமையான இடம்.காலை 8 மணிக்கெல்லாம் அங்கு சென்று , சாப்பாடு வாங்கி கொண்டு ,தண்ணீர் வாங்கி கொண்டு (வெளியில் விலைக்கு வாங்கும் தண்ணீர் கேனுக்கு அனுமதி இல்லை.) நாமே நமது பெட் பாட்டில் வாங்கி சென்றால் அதில் தண்ணீர் வாங்கி ஊற்றி கொண்டு சென்றால் நன்றாக குடிக்கலாம்.இங்கு முக்கியமான விஷயம் பிளாஸ்டிக் பை எதுவும் கொண்டு செல்லக்கூடாது.இதனை ஸ்டிக்டாக செக் செய்கிறார்கள்.காலை 7 மணிக்கு சென்று விடுவது நல்லது.ஏனெனில் இங்கு காலை 8.30 மணிக்கு செல்லும்போது ஆள்கள் வரவில்லை என்றால் நீண்ட நேரம் போட்டை நிறுத்தி வைக்கின்றனர்.பின்புதான் அழைத்து செல்கின்றனர்.

2) ரெட்ஸ்கின் தீவிற்கு செல்லும்போது வழியில் VIP  தீவு பார்க்கலாம்.பிறகு 20 நிமிட பயணத்திற்கு பின்பு சுமார் 9.30 மணி அளவில் நாங்கள் தீவை அடைந்தோம்.அங்கு கடல் அலை சுத்தமாக இல்லை.அனைவரும் ஆனந்தமாக குளித்து கொண்டு இருந்தனர். நமது கப்பலை விட்டு இறங்கியுடன் நம்மை ஒரு பத்து நிமிடம் பவளப்பாறைகள் பார்ப்பதற்கு இலவசமாக அழைத்து செல்கின்றனர்.நாங்கள் கொண்டு சென்ற உணவை சாப்பிட்டு விட்டு சுமார் 10.30 மணி அளவில் நாங்கள் கண்ணாடி போட்டில் பவள பாறைகள் பார்க்க சென்றோம்.மிக அருமையான காட்சிகள். நாம் இதுவரை படித்த பாடங்களில் உள்ள தகவல்கள் அனைத்தும் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.பிரைன் , காலிஃளார்,வண்ண மீன்கள் என அனைத்தையும் விளக்கமாக காண்பிக்கின்றனர்.சுமார் ஒரு மணி நேரம் செல்வதற்கு ரூபாய் 600 மட்டுமே.ஒரு நபருக்கு,9 ஆனால் உண்மையில் இங்கும் ரூபாய் 300 தான் வாங்க வேண்டுமாம்.ஏமாற்றி ரூபாய் 600 வாங்குகிறர்கள் என்பது பின்புதான் தெரியும்.

ரெட்ஸ்கின் தீவில் மிரட்டும்  வன அதிகாரிகள்
                                     ஒரு மணி நேரம் சுற்றி பார்த்து விட்டு பின்பு நாங்கள் 11.35 மணிக்கு கரைக்கு வந்தோம்.கடலில் ஆசையுடன் குளித்து விட்டு மீண்டும்

பிறகு தண்ணீர்க்குள் சென்று  நீரில் முழ்கி கைடு உதவியுடன் பவள பாறைகளை காணும் காட்சிகளை பார்க்கலாம் என்று சென்றால் அங்குள்ள வன அலுவலர் எங்களை உடனடியாக கப்பலுக்கு செல்லுங்கள் என்று சொல்லி விட்டார்.இல்லை என்றால் உங்களை விட்டு,விட்டு சென்று விடுவார்கள் என்று சொல்லி விட்டார்.எங்களுக்கோ ஒன்றும் புரியவில்லை.மூன்று மணி நேரம் பார்க்கலாம் என்று சொல்லி ரூபாய் 750 வாங்கி விட்டு இரண்டு மணி நேரத்தில் மீண்டும் எங்களை போக சொன்னது எங்களால் பொறுத்து கொள்ள இயலவில்லை.அங்கு நாம் சுற்றி பார்க்க உள்ள நேரம் 3 மணி நேரம் ஆகும்.ஆனால் அங்குள்ள போலீஸ்,வன அலுவலர்கள் அவர்கள் சீக்கிரம் செல்ல வேண்டும் என்பதற்காக நம்மை சுற்றுலா சென்றவர்களை விரட்டுவது எந்த விதத்தில் சரியானது என்பதை கேட்பதற்காக அங்கு உள்ள வன அலுவலகத்தில் பாரஸ்டர் திரு.ராஜு என்பவரிடம் எங்களது புகாரை அளித்து விட்டு மீண்டும் நாங்கள் வண்டூர் பீச் சென்றோம்.பீச் அங்கிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளன.ரெட்ஸ்கின் தீவில் பார்த்து விட்டு டிக்கெட் கொடுக்கும் இடத்திற்கு வந்தால் அங்கு அருமையான அருகாட்சியகம் உள்ளது.அங்கு பவளப்பாறைகள் , கடல் வாழ் உயிரினங்கள் நம்மை நேரில் பார்ப்பது போல் அழகாக ஏற்பாடு செய்து உள்ளனர்.அங்கு ஒரு ஷோ தொடர்ந்து ஓடி கொண்டு உள்ளது.அதனில் கடல் வாழ் உயிரினங்கள் ,பவள பாறைகள் தொடர்பாக அருமையான வீடியோ ஓடி கொண்டு உள்ளது.இவற்றை மதியம் 2.30 மணி வரைதான் பார்க்க இயலும்.அதனுடன் இந்த நிலையம் மூடப்பட்டும்.

வண்டூர் பீச்

                           வண்டூர் பீச் மிக அருமை.அங்கு நாம் நுழைந்த உடன் கொஞ்ச தூரம் தள்ளி சென்றால் அருமையான பீச் குளிக்கும் இடம் ஆகும்.எவ்வளவு நேரம் ஆனாலும் ஆனந்தமாக குளித்து கொண்டு இருக்கலாம்.நாங்கள் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக குளித்து விட்டு ,சுமார் 2.30 மணி அளவில் கிளம்பி மீண்டும் போர்ட் பிளியேற் வந்து மதிய உணவு சாப்பிட்டு விட்டு அங்கிருந்து 3.50 மணி போல ரோஸ் தீவிற்கு செல்லும் மெரினா பீச் என்று அழைக்கப்படும் அந்தமான் நீர் விளையாட்டரங்கம் சென்று சேர்ந்தோம்.

போர்ட் பிளேயர் மெரீனா பீச் மற்றும் நீர் விளையாட்டரங்கம்
                           அங்கு ரூபாய் 350 பெற்று கொண்டு 5 நிமிடங்கள் வேகமாக செல்லும் ஸ்பீட் போட்டில் விளையாட்டாக சாகச பயணம் செல்லலாம் . 

ரோஸ் தீவு - ஒளி - ஒலி காட்சி
                   ரோஸ் தீவில் நடைபெறும் மாலை நேர ஒளி -ஒலி காட்சியை பார்க்க நாம் காலையில் சென்று ஒரு நபருக்கு ரூபாய் 100 செலுத்தி டிக்கெட் பெற்று கொள்ள வேண்டும்.மீண்டும் மாலையில் எங்களுக்கு சுமார் 4.30 மணி அளவில் கப்பல் கிளம்பியது.அந்த கப்பலில் ரோஸ் தீவில் உள்ளே செல்வதற்கு நேவி எனப்படும் கடல் படைக்கு ரூபாய் 50 டிக்கெட் பெற்று கொள்ள வேண்டும்.ஒரு நபருக்கு ரூபாய் 50.இதனை படகில் பெற்று கொள்கின்றனர்.சுமார் 10 நிமிடத்தில் நாம் ரோஸ் தீவை அடைந்து விடலாம்.நாங்கள் சுமார் 4.50 மணிக்கு அங்கு சென்றோம்.
                    நம்மை முதலில் அங்கு ஜப்பானின் புத்தர் தொடர்பான அறை வரவேற்கிறது.
1) மான்கள் காட்சி 
2) வண்ண மயில்களின் காட்சிகள் 
3) ஆங்கிலேயர் காலத்து நீச்சல் குளம் 
4) நீர் சுத்திகரிக்கும் இயந்திரங்கள் 
5) சர்ச் 
6) கண்கணிப்பாளர் அலுவலகம் 
7) ஆஃபீஸ்ர்ஸ் குதூகலிக்கும் இடம் 
8) கமிஷனர் அலுவலகம் உள்ள இடம் 
9) பராரே பீச் 
10) பொற்றாமரை குளம் 
11) பூங்கா 
12) கல்லறை 
13) பர்சன்ட் அலி ஸ்டோன் 
14) பேக்கரி 
15) ஸ்மிரிக்கா அருங்காட்சியகம் 
                   இன்னும் அதிகமான இடங்கள் உள்ளன.இவை அனைத்தையும் விரிவாக பார்க்க வேண்டும் என்றால் இரண்டரை மணி நேரம் வேண்டும்.தரை பகுதியில் நடந்து மீண்டும் மலை பகுதி ஏறி மீண்டும் கீழே இறங்கி வர வேண்டும்.இந்த தீவை சுற்றிலும் கடல் சூழ்ந்த பகுதி.சுனாமிக்கு பிறகு இந்த இடம் பாதி அளவாக குறைந்து விட்டதாக சொல்லபடுகிறது.
                        இங்கு அனுராதா  தேவி ( எண் : 9933290655) என்கிற பெண்மணி கைடாக உள்ளார்.நன்றாக தமிழ்,ஹிந்தி,ஆங்கிலம் பேசுகிறார்.இரண்டு மணி நேரம் சொல்வதர்க்கு இவருக்கு ரூபாய் 300 கொடுக்க வேண்டும்.இவர் நான்காவது தலைமுறையாக இந்த தீவில் இருப்பதாக சொன்னார்.இந்த தீவை சுற்றி வர வண்டிகளும் உண்டு.ஒரு நபருக்கு ரூபாய் 75 மட்டுமே.இரண்டு வண்டிகள் மட்டுமே உள்ளன.எங்களுக்கு இந்த விவரம் தெரியாது.நாங்கள் பின்புதான் இவற்றை விசாரித்து கொண்டோம்.நீங்கள் சென்ற உடன் வண்டியில் ஏறி விட்டால் இடம் கிடைக்கும்.
                           நாங்கள் சரியாக மாலை 5.40 மணிக்கு ஆரம்பித்த ஒளி-ஒலி காட்சியை ஆர்வத்துடன் பார்த்தோம்.உண்மையில் இது ஒரு மணி நேர அருமையான காட்சிகள் ரோஸ் தீவின் முழு கதையையும் மிக தெளிவாக எடுத்து உரைக்கிறது.காட்சி வடிமைப்பை சென்னை நிறுவனம்தான் தயாரித்து உள்ளது.சூப்பர்.அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.நிகழ்வுகள் அனைத்தும் நம் கண் முன்பாக நடப்பது போல் உள்ளது.செல்லுலார் சிறையில் உள்ள ஒளி-ஒலி காட்சி மிக சுமார்.
                      ரோஸ் தீவின் ஒளி-ஒலி காட்சி முடித்து விட்டு மாலை 6.50 மணிக்கு மீண்டும் போர்ட் பிளேயர் நோக்கி 10 நிமிட பயணம்.இந்த தீவில் இருந்து போர்ட் பிளேயர் தீவை பார்த்தபோது மிக அருமை.வண்ண விளக்குகள் சூழ அந்த காட்சி அழகே தனிதான்.

போர்ட் பிளேயர் சாப்பிடும் ஹோட்டல் விவரம்
                   மீண்டும் போர்ட் பிளேயர் வந்து ஆனந்தா என்கிற ஹோட்டலுக்கு சென்றோம்.அசைவ உணவுகள் மிகவும் மோசம்.சாப்பிட்டு விட்டு மிகவும் சிரமப்பட்டு போனோம்.எனவே நீங்கள் யாரும் பஜாரில் உள்ள ஆனந்தா ஹோட்டலில் சாப்பிட வேண்டாம்.
                  போர்ட் பிளேயர்   பஜாரில் அமைந்துள்ள கட்டபொம்மன் சைவ ஹோட்டலில் உணவு சூப்பர்.அங்கு சாப்பிட்டு விட்டு மீண்டும் நாங்கள் அறைக்கு திரும்பினோம்.


போர்ட் பிளேயர் முருகன் கோவில் 
                  6வது நாளன்று காலையில் கிளம்பி நேராக சுமார் 9.30 மணி அளவில் போர்ட் பிளேயர் உள்ள முருகன் கோவிலுக்கு சென்றோம்.அங்கு தெலுங்கர் திருமணம் நடைபெற்றது.அவர்கள் யாகம் வளர்க்கவில்லை.ஒரு தேங்காயை மட்டையுடன் வைத்து அதனை சாட்சியாக வைத்து மந்திரம் சொல்கின்றனர்.மந்திரம் சொல்லும் குருக்கள் சட்டை அணிந்து உள்ளார். தெலுங்கு குருக்கள் சட்டை அணிந்துதான் கோவிலில் மந்திரம் சொல்லுவார்களாம்.இதனை அங்குள்ள தமிழ் குருக்கள் சொன்னார்கள்.பொண்ணும் ,மாப்பிள்ளையும் கழுத்தில் ஒரு மஞ்சள் வெள்ளை கலந்த துண்டை அருமையாக மடித்து மேலே ஒரே மாதிரியாக போட்டு இருந்தனர்.எங்களுக்கு அது பார்க்கவே அழகாக இருந்தது.திருமணத்தை ரசித்து விட்டு கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் நாங்கள் ஆதிவாசிகள் அருங்காட்சியகம் உள்ளே சென்றோம்.
  போர்ட் பிளேயர் ஆதிவாசிகள் அருங்காட்சியகம்                 
                 போர்ட் பிளேயர் உள்ள ஆதிவாசிகள் அருங்காட்சியகத்தில் போட்டோ எடுக்க அனுமதி இல்லை.அந்தமான் முழுவதும் போட்டோ எடுக்க அனுமதி உண்டு.ஆனால் இங்கு மட்டுமே அனுமதி இல்லை.ஆதிவாசிகள் அருங்காட்சியகத்தில் சுமார் 1 மணி நேரம் நன்றாக பல்வேறு விஷயங்களை விரிவாக பார்க்கலாம்.செட்டி நாடு பகுதியில் உள்ள கொட்டன் ,மங்கு ஜமான்கள்,உப்பு ஜாடிகள்,திருகை ,மாவு சளிக்கும் ஜல்லடை போன்றவை அந்த காலத்தில் ஆதிவாசிகள் பயன்படுத்திய பொருள்களாக உள்ளன,மேலும் ஆதிவாசிகள்  வாழ்க்கை முறையை மிக அழகாக வருடம் வாரியாக விளக்கி வருகிறார்கள்.இங்கு உள்ளே செல்ல ஒரு நபருக்கு ரூபாய் 20 ஆகும்.
             அடுத்து எங்களை எங்கள் ஏஜென்ட் கடல் வாழ் உயிரினங்கள் அருங்காட்சியகத்திற்கு அழைத்து செல்வதாக சொன்னார்.நாங்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டு சாமுத்திரிகா அருங்காட்சியகத்திற்கு அழைத்து செல்ல சொன்னோம்.பெரும்பாலான ஏஜெண்டுகள் இங்கு அழைத்து செல்வது கிடையாது.
சாமுத்திரிகா அருங்காட்சியகம் என்ற நேவி அருங்காட்சியகம்
                               சாமுத்திரிகா அருங்காட்சியகம் நேவி அருங்காட்சியகம் ஆகும்.இங்கு  ஒரு ஆளுக்கு ரூபாய்   50 டிக்கெட் ஆகும்.இங்கு 5 பிரிவாக பிரித்து அந்தமானை தெளிவாக விளக்கி உள்ளனர்.இதற்கு தான் சுற்றுலா செல்பவர்கள் முதலில் செல்ல வேண்டும்.5 பிரிவுகளிலும் போர்ட் பிளேயர் பற்றியும்,ஆதிவாசிகள் ,பவளப்பாறைகள்,வண்ண கடல வாழ் உயிரினங்கள் ,போக்குவரத்து பற்றியும் விரிவாக சொல்லி உள்ளனர்.சூப்பரான இடம்.இங்கிருந்து மதியம் 12 மணிக்கெல்லாம் நாங்கள் விமான நிலையத்தை அடைந்தோம். 


கல்வி ;
            இங்கு நல்ல கல்வி உள்ளது.தனியார்,அரசு பள்ளிகள் உள்ளன.ஒன்று முதல் ஐந்து,எட்டு,10 வகுப்பு வரை உள்ளன.மேலும் +1,+2 சீனியர் செகண்டரி பள்ளி என்று உள்ளது.    போர்ட் பிளேயர் பகுதியில் கடல் சார்ந்த  படிப்புகள் உள்ள கல்லூரி உள்ளது.
சமூகம் சார்ந்த விஷயங்கள் : 
                        இங்கு அனைத்து மொழி பேசும் மக்களும் உள்ளனர்.மிக அமைதியான ஊர்.70 சதம் மக்கள் அரசு ஊழியர்களாகவே உள்ளனர்.மீதம் உள்ள மக்களும் அவர்களை சார்ந்தும்,சுற்றுலா அதிகம் அழைத்து செல்லும் தொழிலும் பார்க்கின்றனர்.ஹவேலோக் தீவில் மிகப்பெரிய ஹோட்டலான தாஜ் ஹோட்டல் கட்டப்பட்டு வருகிறது.எனவே இங்கு பொருளாதார வளர்ச்சி அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது.ஆனால் ஏமாற்றம் இல்லாமல் செய்தால் நன்றாக இருக்கும்.
                              இங்கு விவசாயமும் அதிக அளவில் நடைபெற்றுவருகிறது.சுனாமி பாதிப்புக்கு பின்பும் கூட மிக பெரிய ஹோட்டல்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஹோட்டல்கள் உட்பட அனைத்து கட்டிடங்களுக்கும் கட்டுவதற்கு தமிழ்நாடு மற்றும் மலேசியாவில் இருந்துதான் மணல் கப்பல் வழியாக செல்கிறது.
       
                    போர்ட் பிளேயர் பகுதியில் மரங்கள் அறுவை மில் பகுதியில் கப்பலில் சென்று இன்னொரு பக்கம் தீவிற்கு சத்தம் என்ற இடத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகிறார்கள்.போர்ட் பிளேயர் பகுதியில் உள்ள மிக நேர்த்தியான,அமைதியான மக்கள் வசிக்கும் இடங்களில் இதுவும் ஒன்று ஆகும்.இங்கு கப்பலில் மட்டுமே ஒரு கரையில் இருந்து கடலை தாண்டி மறு  கரைக்கு செல்ல இயலும்.கப்பலில் தான் பஸ், கார், இருசக்கர வாகனங்கள் என அனைத்துமே செல்ல இயலும்.
                             இங்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளார்.பெரும்பாலும் பெங்காலிகள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.முன்பு இருந்த ஒரு வங்காள எம்.பி .மிக அதிகமான வங்காள மக்களை கொண்டு வந்து குடியிருக்க இடம், விவசாயம் செய்ய நிலம் என  அரசு சார்பில் இலவசமாக செட்டில்மென்ட் காலத்தில் வழங்கி குடியேற்றி உள்ளார்.முன்பு பாசுபத்தி என்கிற இடத்தில் மிக அதிகமான அளவில் தமிழ் மக்கள் வாழ்ந்து உள்ளனர்.ஆனால் இப்போது பெங்காலிகள் அதிகம் உள்ளனர்.ஓரளவிற்கு தெலுங்கர்களும் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.சுற்றுலாவில் அதிகமாக நவம்பர்,டிசம்பர்,ஜனவரி ,பிப்ரவரி மாதத்தில் வங்காளிகள் வந்து குவிந்து விடுவதாக சொல்கின்றனர்.அப்போதுதான் அங்கு சீசன் .மேலும் குஜராத் மக்களும் இங்கு அதிகம் சுற்றுலாவிற்கு வருகிறார்கள்.

அந்தமான் பூர்வ குடிகளுக்கு சலுகை
                           அந்தமான் குடியுரிமை பெற்றவர்களுக்கு ஏர் இந்தியா விமானத்தில் ரூபாய் 2,000க்கு அவர்களுக்கு என்று தனியாக 50 டிக்கெட்டுகள் தினசரி ஒதுக்கி கொடுத்து உள்ளனர்.அதே போல் கல்கத்தா செல்வதற்கும் ரூபாய் 2,000த்தில் ஏர் இந்தியா விமானம் உட்பட சில விமானங்களில் தினசரி அந்தமான் குடியுரிமை பெற்றர்வர்கள் எளிதாக செல்லலாம்.அதேபோல் ஹவேலோக் தீவு உட்பட எந்த தீவுக்கு செல்வதற்கும் கப்பலில் அவர்களுக்கு ரூபாய் 50 மட்டுமே.நமக்கு 500 ரூபாய் மற்றும் அதற்கு மேல் ஆகும்.இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம் நாம் எப்படி தேர்தல் அடையாள அட்டை வைத்து உள்ளோம் அதே போல் பூர்வ குடியிருப்புகள் அட்டை அவர்கள் வைத்து உள்ளனர்.அதனை பயன்படுத்தி அவர்கள் சலுகைகளை பெற்று கொள்கின்றனர்.போர்ட் பிளேயர் செல்வதற்கு மட்டுமே மிக அதிகமான விமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.வெளிநாட்டுக்கு செல்வதை காட்டிலும் 15,000 ரூபாய் வரை விமான கட்டணம் ( நாள் சுருங்க,சுருங்க ) வசூலிக்கப்படுகிறது.

அரசியல் அமைப்பு : 
                            இங்கு பஞ்சயாத்து பிரதான் ,ஜில்லா கவுன்சிலர்,அவர்களுக்கு ஒரு தலைவர் ,பிறகு ஒரு எம்.பி. உள்ளனர்.பஞ்சாயத்து பிரதனுக்கு 5 வருடம் பதவி காலம்.மாதம் ரூபாய் 10,000 சம்பளம்.ஒரு வருடத்திற்கு ஒரு பஞ்சாயத்தின் வளர்ச்சிக்கு அரசு ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் ஒரு கோடி ஒதுக்குகிறது.இங்கு செய்யப்படும் ஒவ்வொரு வேலைக்கும் சரியான கணக்கு மற்றும் காரணம் சொல்ல வேண்டும்.இல்லை எனில் பெரும்பாலான இடங்களில் RTI எனும் தகவல் உரிமை சட்டம் மூலம் அதிகமான கேள்விகள் கேட்டு உண்மையை வெளி கொண்டு வந்து விடுகின்றனர் என்று எங்களுடன் கப்பலில் பயணித்த அஸ்லாம் என்பவர் தெரிவித்தார்.பல இடங்களில் சாலை வசதி நன்றாக உள்ளது.சில இடங்களில் மிகவும் சுமாராக உள்ளது.இன்னும் நன்றாக மேம்படுத்த வேண்டும்.
                         மருத்துவமனை வசதியும் நன்றாக உள்ளது.எம்.பி.நம்முடன் மிக சாதாரணமாக நம்முடன் கப்பலில் வருகிறார்.எந்தவிதமான பந்தாவும் இல்லை.ஆட்கள் ,அடிதடிகள் உடன் இல்லை.நமது தமிழ்நாட்டை எண்ணி பாருங்கள்.சிரிப்புதான் வருகிறது.
                        இங்கு உள்ள உயர்நீதிமன்றம் கிளை ,ஸ்டேட் பேங்க் ஆப்  இந்தியா ,போஸ்டல் துறை போன்றவை கல்கத்தா கட்டுப்பாட்டில் உள்ளது.மேற்கு வங்கத்தினர் தான் அதிக அளவில் பதவிகளில் உள்ளனர்.
                         போலீஸ் அனைத்து வாகனத்தையும் சோதனை செய்கிறார்கள்.ஆனால் இரண்டு நிமிடத்தில் சோதனை செய்து எல்லாம் சரியாக இருந்தால் உடன் அனுப்பி விடுகின்றனர். 

ஹவெலக் தீவின் மோசமான நிலை மற்றும் அரசு கப்பலின் பயணம்  இயலாத நிலை
                  இவை அனைத்தையும் நன்றாக இருந்தும் ஹவெலக் தீவு செல்லும் அரசு கப்பல் மட்டும் உள்ளே உட்காரும் சீட் அனைத்தும் மிகவும் மோசமாக உள்ளது.இதனை அரசு சரி செய்ய வேண்டும் என்பது வேண்டுகோள் ஆகும்.ஒரு பக்கம் வாந்தி எடுத்த நிலை,ஏசி ஒரு பக்கம் தண்ணீர் ஊற்றி கொண்டு வருதல் என மோசமான நிலை உள்ளே சாப்பிட எந்த  விதமான உணவும் இல்லை.ஆனால் தனியார் வாகனம் மிக அருமை.உள்ளே சாப்பிட அனைத்தும் மிக குறைந்த விலையில் அனைத்தும் கிடைக்கும்.சுற்றுலா செல்பவர்களுக்கு ஏற்றது.ஏனோ தெரியவில்லை அரசு இதில் மட்டும் கப்பலை கண்டு கொள்ள வில்லை.

சுற்றுலா வருபவர்கள் பெரும்பாலும் LTC உள்ளவர்களே :
                              அந்தமானுக்கு சுற்றுலா வரும் பெரும்பாலானவர்கள் மத்திய அரசின் அரசு ஊழியர்கள் மற்றும் மிக பெரிய தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்கள் .இவர்களுக்கு LTC என்கிற சலுகை கிடைத்து விடுவதால் சுற்றுலா ஏஜெண்டுகள் கேட்கும் காசை அள்ளி கொடுக்கின்றனர்.அவர்களிடம் எந்த கேள்வியும் அதிகம் கேட்பதில்லை.அப்படியே அது தவறு என்றாலும் தாங்களாகவே புலம்பி கொண்டு வந்து விடுகின்றனர்.இதுதான் சுற்றுலா ஏஜெண்டுகளை அதிகம் ஏமாற்ற சொல்கிறது.

நிறைவாக கவனத்தில் கொள்ளவேண்டியது
                             நிறைவாக சொல்வது என்றால் அந்தமான் சுற்றுலா செல்ல நினைப்பவர்கள் ஒரு நாள் கூடுதல் திட்டத்துடன் சென்றால் நீங்களே விசாரித்து நான் மேலே சொல்லி இடங்களை உங்கள் ரசனைக்கு ஏற்ப எளிதாக பார்க்கலாம்.உங்களுக்கு தெரிந்தவர் இருந்தால் இன்னும் நல்லது.உதவியாக இருக்கும்.இல்லை என்றாலும் நீங்களே விசாரித்து அனைத்து இடங்களுக்கும் செல்லலாம் . ஒருவேளை ஏஜென்டிடம் பேசி சென்றால் நல்ல முன்பாகவே அனைத்தையும் எழுதி வாங்கி சாப்பாடு,பார்க்கும் இடங்கள்,ரூம்,உணவு,வாகனம் ஏசியா அல்லது நான் ஏசியா,ஹவேலோக் செல்வது எந்த போட்டில் என்பது உட்பட என அனைத்தையும் முன்பே மெயில் அல்லது வாட்சப் வழியாக எழுதி வாங்கி விட்டால் உங்களுக்கு சிறப்பு.


அந்தமானில் பார்க்க வேண்டிய இடங்கள் :

1)  போர்ட் பிளேயர்: 
             *அறிவியல் நகரம் (ஞாயிறு விடுமுறை )
             *சாமுத்திரிகா என்கிற நேவி அருங்காட்சியகம் (திங்கள் விடுமுறை )
             *ஆதி வாசிகள் அருங்காட்சியகம்
              *மர அறுவை மில் ( ஞாயிறு விடுமுறை )
             *கரீபியன் பீச்,
             *கடல் வாழ் உயிரினங்கள் அருங்காட்சியகம் (திங்கள் விடுமுறை ) 
             *வண்டூர் செல்லும் வழியில் உள்ள காலப்பணி அருங்காட்சியகம்(திங்கள் விடுமுறை ) ,
             *முருகன் கோவில்,
             *மெரினா பீச் (அரசாங்கத்தின் நீர் விளையாட்டு அரங்கம்               *அரசு பூங்கா (குழந்தைகள் விளையாட அருமையான இடம்
              *செல்லுலார் சிறை,சிறையில் மாலையில்  6 மணி முதல் 7 மணி வரை காண்பிக்கப்படும் ஒளி-ஒலி காட்சி (ஹிந்தி ), மாலையில்  7 மணி முதல் 8 மணி வரை காண்பிக்கப்படும் ஒளி-ஒலி காட்சி (ஆங்கிலம் ).(திங்கள் விடுமுறை )

2) ரெட்ஸ்கின் தீவு அல்லது ஜாலிபாய் தீவு (போர்ட் பிளேயர் இருந்து 28 கிலோமீட்டர் ) வனத்துறையின் அனுமதி ரூபாய் 50 செலுத்தி முதல் நாளே பெற வேண்டும் .( வாகன பயணம் 30 நிமிடம் மற்றும் போட் பயணம்  20 நிமிடம் ) ( தீவில் இருப்பு மூன்று மணி நேரம் )
                    * பவளப்பாறைகள் காட்சி (கண்ணாடி போட் மற்றும் நீரில் மூழ்கி பார்த்தால் )
                        * நன்றாக குளிக்கலாம் 
                     * கடல் வாழ் உயினங்களின் அருகாட்சியகம் மற்றும் படம் காணலாம் .

3) வண்டூர் பீச் : ரெட்ஸ்கின் தீவு செல்வதற்கு போட் டிக்கெட் வாங்கும் இடத்தில்  இருந்து சுமார் 1 கிலோமீட்டர் - வாகன பயணம்
                 * நன்றாக குளிக்கலாம்

4) ரோஸ் தீவு : (போர்ட் பிளேயர் இருந்து 10 நிமிட கப்பல் பயணம்)
                * சுமார் இரண்டு மணி நேரம் சுற்றி பார்க்கலாம் 
                * அருமையான ஒளி-ஒலி காட்சி காணலாம் ( மாலை 4.30 மணி போட்டில் தனி அனுமதி வாங்கி செல்ல வேண்டும் 

5) பாராட்டங் தீவு :( வாகன பயணம் - கப்பல் பயணம்-விரிவாக உள்ளே உள்ளது )
            * சுண்ணாம்பு பாறை 
            * எரிமலை வெடிப்பு 
            * ஆதிவாசிகள் பார்த்தல் 
            *அடர்த்தியான காடுகளை காணுதல் 
6) ஹெவலக் தீவு : 
               * ராதா நகர் பீச் (இங்கு அனைத்து இடங்களுக்கும் பஸ் மூலம் வெறும் 10 ரூபாய் யில் செல்லலாம் .) (ஹவெலக் தீவில் இருந்து வாகனம் வழியாக சுமார் 7 கிலோமீட்டர் சென்று எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் குளிக்கலாம் )
               *கல்பத்ரா கடற்கரை ( சூரிய உதயம்  பார்க்கலாம் ) ( ஹவேலோக் தீவில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தூரம் வாகன பயணம் )
               *எலிபன்ட் பீச் (அனைத்து விதமான நீர் விளையாட்டுகளும் விளையாடலாம் .(ஹவெலக் ஜெட்டியில் இருந்து ரூபாய் 570இல் செல்லலாம் . படகில் சுமார் 30 நிமிட பயணம்.இரண்டு மணி நேரம் அங்கு இருக்கலாம் )


அந்தமான் செல்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை : 

1)  அந்தமான் சுற்றுலா செல்ல நினைப்பவர்கள் ஒரு நாள் கூடுதல் திட்டத்துடன் சென்றால் நீங்களே விசாரித்து நான் மேலே சொல்லி இடங்களை உங்கள் ரசனைக்கு ஏற்ப எளிதாக பார்க்கலாம்.உங்களுக்கு தெரிந்தவர் இருந்தால் இன்னும் நல்லது.உதவியாக இருக்கும்.இல்லை என்றாலும் நீங்களே விசாரித்து அனைத்து இடங்களுக்கும் செல்லலாம் . ஒருவேளை ஏஜென்டிடம் பேசி சென்றால் நல்ல முன்பாகவே அனைத்தையும் எழுதி வாங்கி சாப்பாடு,பார்க்கும் இடங்கள்,ரூம்,உணவு,வாகனம் ஏசியா அல்லது நான் ஏசியா,ஹவேலோக் செல்வது எந்த போட்டில் என்பது உட்பட என அனைத்தையும் முன்பே மெயில் அல்லது வாட்சப் வழியாக எழுதி வாங்கி விட்டால் உங்களுக்கு சிறப்பு.

..( முழு விவரம் எனது பயண திட்டத்தில் உள்ளது )




2) போர்ட் பிளேயர்இல் உள்ள சாமுத்திரிகா என்ற நேவி அருகாட்சியகத்தை அனைவரும் அவசியம் காணுங்கள் .அந்தமான் தொடர்பான அனைத்து தகவல்களும் நன்றாக உள்ளது..( முழு விவரம் எனது பயண திட்டத்தில் உள்ளது )


3) ஹவேலோக் தீவில் ரூம் எடுக்கும்போதும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.ரூமில் நம்மை ஏமாற்றி விடுவார்கள்.அரசு கப்பலில் ஏறும்போது ஜாக்கிரதையாக ஏற வேண்டும்.போட் டிக்கெட்டில் சீட் எண் என்ன இருக்கிறது என்று நன்றாக பார்த்து கொள்ள வேண்டும்.முடிந்த வரை தனியார் போட் வழியாக செல்வதும், திரும்புவதே சிறப்பு.கண்டிப்பாக கல்பத்ரா பீச்சுக்கு செல்லுங்கள்.அது மிகவும் அருமையான இடம்.( முழு விவரம் எனது பயண திட்டத்தில் உள்ளது )
                     ஹவெலக் தீவில் குளிக்கும்போது பாதுகாப்பு எல்லாம் நன்றாக .ஆனால் அங்கு உள்ள வாட்டர் டிரீட்மென்ட் பகுதியில் இருந்து கழிவு நீர் மக்கள்  குளிக்கும் இடத்தில் கலக்கிறது . நாங்கள் குளிக்கும்போது எண்ணெய் படலம் மஞ்சள் கலரில் அதிகமாக இருந்தது.எங்களால் நீண்ட நேரம் குளிக்க இயலவில்லை.எரிச்சல் வந்து விட்டது.எனவே யோசித்து விட்டு பிறகு குளியுங்கள்.

4) ரோஸ் தீவை காணுங்கள் .அங்கு ஒளி-ஒலி  காட்சி அவசியம் காணுங்கள் ( இதனைநம்மை அழைத்து செல்லும் ஏஜென்ட் யாரும் சொல்ல மாட்டார்கள்.நீங்கள்தான் ஆர்வமாக கேட்கவேண்டும்.இதற்கு முன்னதாகவே டிக்கெட் வாங்க வேண்டும்.எனவே முன்பே இது தொடர்பாக பேசிவிடுங்கள்).அங்குள்ள கைடை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

5) 6 மாதங்களுக்கு முன்பாகவே திட்டமிடுங்கள்.அந்தமானில்திங்கள் கிழமை முக்கியமான இடங்கள் அனைத்தும் விடுமுறை.எனவே உங்கள் பயண திட்டத்தில் திங்கள் கிழமையை தவிர்த்து திட்டமிடுங்கள்.6 மாதம் முன்பாகவே திட்டமிட்டால் உங்களின் பணம் விமான கட்டணத்தில் பாதியாக குறையும்.

6) அந்தமானில் அனைத்து இடங்களிலும் போட்டோ எடுக்கலாம்.ஆதிவாசிகள் அருங்காட்சியகத்தில் மட்டும் போட்டோ எடுக்க அனுமதி கிடையாது.போட்டோ எடுக்க எந்த கட்டணமும் இல்லை.

7) சுற்றுலா ஏஜென்டிடம் பேசும்போதே நாங்கள் விருப்பமான ஹோடேலில் தான் சாப்பிடுவோம்,அதற்கு வண்டி அனுப்ப வேண்டும் என்று முன்பே பேசி கொள்ளுங்கள்.ஹோடேல்களில் கட்டபொம்மன்,அன்னபூர்ணா,பிரபுச்னக்க்ஸ் என்கிற ஹோட்டல்கள் நன்றாக உள்ளன.ஆனந்த் என்கிற ஹோட்டல் மிகவும் சுமார்.அங்கு செல்வதை தவிர்க்கவும்.அசைவ உணவுக்கு லைட் ஹவுஸ் என்கிற ஒரு ரிசார்ட்ஹோட்டல் உள்ளது.அங்கு உணவு சூப்பர்.

8) பாரட்டங் தீவு செல்லும்போது காலை 3.3௦ மணிக்கு கிளம்பி விடுங்கள்.காலை உணவை பார்சல் செய்து கொள்ளுங்கள்.ஏனெனில் தீவில் அங்கு உணவு விலை அதிகம்.அவசியம் எரிமலை வெடிப்பு பாருங்கள்.உங்களை அழைத்து செல்லும் ஏஜென்ட் வேண்டாம் என்று சொல்வார்.அதனை காதில் வாங்கி கொள்ளாதீர்கள்.அருமயான இடங்கள்.

9) நார்த் பே என்கிற தீவுக்கு உங்களை அழைத்து செல்வதில் உங்கள் பயண ஏஜென்ட் ஆர்வமாக இருப்பார்.நீங்கள் அங்கும் செல்லுங்கள்.ஜாலிபாய் அல்லது ரெட்ச்கின் தீவிற்கு கட்டாயம் செல்லுங்கள்.இது வேண்டாம் என்று பெருமபாலான ஏஜெண்டுகள் சொல்வார்கள் .அவசியம் செல்லுங்கள்.

              தயவு செய்து போர்ட் பிளேயர்இல் உள்ள  சக்தி என்பவரிடமோ,ஹவேலோக் தீவில் ஹோட்டல் சவுரவ் ஹோட்டல்  உள்ள பிரசன்னாவிடமும் சென்று விடாதீர்கள் .உங்களை ஏமாற்றி விடுவார்கள்.

அன்புடன் 
            லெ .சொக்கலிங்கம் ,
            காரைக்குடி 














           
      
                               
                       
                                      

                    

                                      










2 comments:

  1. உங்களுடைய பதிவு மிக பயனுள்ளதாக இருக்கிறது.

    ReplyDelete