Friday 31 March 2017

அகிலஇந்தியவானொலியான 
மதுரை வானொலியில் தேவகோட்டை பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் சிறுவர் பல்சுவை  நிகழ்ச்சி !
மதுரை வானொலி நிலையத்தில்  ஒலிப்பதிவானது 

தமிழ்நாடு அரசு தனி  பேருந்து   மூலம் தேவகோட்டையில் இருந்து மதுரை வானொலி நிலையத்துக்கு பயணம்
இந்த நிகழ்ச்சி மதுரை வானொலியில் வருகிற ஏப்ரல் மாதம் 8 மற்றும் 15ஆம் தேதிகளில் மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் அகில இந்திய வானொலி நிலையமான  மதுரை வானொலியில் ஒலிபரப்பாகும் சிறுவர் பல்சுவை   நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான    ஒலிபதிவு  செய்யப்பட்டது.


                      
                                                     மதுரை வானொலி நிலையத்திற்கு மாணவ,மாணவியர் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் சென்றனர்.மதுரை வானொலி நிலையத்தினர் மாணவர்களை வரவேற்று ஒலி பதிவு அறைக்கு அழைத்து சென்றனர். மாணவர்கள் பிரஜித் ,அஜய்,கனிஷ்கா,முகல்யா ஆகியோர் அபிநய பாடல்களையும் ,கனிஷ்கா வினாடி வினாவையும் ,ஜெயஸ்ரீ ,திவ்யதர்ஷினி  மீனாட்சி அம்மன் கோவில் உருவான வரலாற்றையும் ,முத்தய்யன் ,திவ்யஸ்ரீ ஆகியோர் கண்டுபிடித்தது யார் என்கிற தலைப்பில் அறிவியில் கேள்வி பதில்களையும் ,அம்முஸ்ரீ,ராஜேஸ்வரி,தேவதர்ஷினி ஆகியோர் சுழலும் சொற்போர் நிகழ்வையும்,கீர்த்தியா ,ஜனஸ்ரீ ஆகியோர் அறிவியல் பாடல்களையும்,கிஷோர்குமார் 60நொடியில் ஆச்சரியம் மற்றும் கேள்வி கேட்க கற்று கொள்ளுங்கள் தொடர்பாகவும்,ஐயப்பன் தூய்மை பாரதம் என்கிற தலைப்பிலான கவிதையையும்,கிருத்திகா நாடுகளின் தேசிய மலர்கள் என்கிற தலைப்பிலும்,பாக்கியலட்சுமி மற்றும் நித்திய கல்யாணி ஆகியோர் ஆங்கில உரையையும்,ஜெனிபர்,காவியா,சின்னம்மாள் ஆகியோர் மீன்களின் கதையையும் விரிவாக விளக்கியதுடன் சிந்திக்கவும்,சிரிக்கவும் விதமாக நிகழ்ச்சிகளை வழங்கினார்கள். மாணவி தனலெட்சுமி அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.ஆசிரியை செல்வமீனாள் மாணவர்களை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.
                           பள்ளியில் இருந்து தமிழ்நாடு அரசு தனி பேருந்து மூலம் மாணவர்கள் அனைவரும் பெற்றோர்களுடன் தேவகோட்டை பள்ளியில் இருந்து மதுரை வானொலி நிலையத்திற்கு நேரடியாக அழைத்து செல்லப்பட்டனர்.பள்ளியின் சார்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.மீண்டும் மாணவர்கள் அனைவரும் தமிழ்நாடு அரசின் தனிப்பேருந்து மூலம் மதுரை வானொலி நிலையத்தில் இருந்து தேவகோட்டை பள்ளி வளாகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் மதுரைக்கு வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்ச்சி மதுரை வானொலியில் வருகிற ஏப்ரல் மாதம் 8 மற்றும் 15ஆம் தேதிகளில் மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் அகில இந்திய வானொலியான மதுரை வானொலி நிலையத்தில் சிறுவர் பல்சுவை  நிகழ்ச்சிக்கு ஒலி பதிவுக்கு தமிழ்நாடு அரசின் தனி பேருந்து மூலம் சென்ற போது எடுத்த படம்.



மேலும் கூடுதல் தகவல்கள்

அகிலஇந்தியவானொலியான 
மதுரை வானொலியில் தேவகோட்டை பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் சிறுவர் பல்சுவை  நிகழ்ச்சி !
மதுரை வானொலி நிலையத்தில்  ஒலிப்பதிவானது 

தமிழ்நாடு அரசு தனி  பேருந்து   மூலம் தேவகோட்டையில் இருந்து மதுரை வானொலி நிலையத்துக்கு பயணம்
இந்த நிகழ்ச்சி மதுரை வானொலியில் வருகிற ஏப்ரல் மாதம் 8 மற்றும் 15ஆம் தேதிகளில் மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

                                    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் அகில இந்திய வானொலி நிலையமான  மதுரை வானொலியில் ஒலிபரப்பாகும் சிறுவர் பல்சுவை   நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான    ஒலிபதிவு  நடைபெற்றது. வருகிற 8ம் தேதி மற்றும் 15ம் தேதிகளில் மதியம் 2.3௦ மணி அளவில் மதுரை வானொலி நிலையத்தில் ஒளிபரப்பாக உள்ளது.

                                     
                                       மதுரை வானொலி நிலையத்திற்கு மாணவ,மாணவியர் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் சென்றனர்.மதுரை வானொலி நிலையத்தினர் மாணவர்களை வரவேற்று ஒலி பதிவு அறைக்கு அழைத்து சென்றனர். மாணவர்கள் பிரஜித் ,அஜய்,கனிஷ்கா,முகல்யா ஆகியோர் அபிநய பாடல்களையும் ,கனிஷ்கா வினாடி வினாவையும் ,ஜெயஸ்ரீ ,திவ்யதர்ஷினி  மீனாட்சி அம்மன் கோவில் உருவான வரலாற்றையும் ,முத்தய்யன் ,திவ்யஸ்ரீ ஆகியோர் கண்டுபிடித்தது யார் என்கிற தலைப்பில் அறிவியில் கேள்வி பதில்களையும் ,அம்முஸ்ரீ,ராஜேஸ்வரி,தேவதர்ஷினி ஆகியோர் சுழலும் சொற்போர் நிகழ்வையும்,கீர்த்தியா ,ஜனஸ்ரீ ஆகியோர் அறிவியல் பாடல்களையும்,கிஷோர்குமார் 60நொடியில் ஆச்சரியம் மற்றும் கேள்வி கேட்க கற்று கொள்ளுங்கள் தொடர்பாகவும்,ஐயப்பன் தூய்மை பாரதம் என்கிற தலைப்பிலான கவிதையையும்,கிருத்திகா நாடுகளின் தேசிய மலர்கள் என்கிற தலைப்பிலும்,பாக்கியலட்சுமி மற்றும் நித்திய கல்யாணி ஆகியோர் ஆங்கில உரையையும்,ஜெனிபர்,காவியா,சின்னம்மாள் ஆகியோர் மீன்களின் கதையையும் விரிவாக விளக்கியதுடன் சிந்திக்கவும்,சிரிக்கவும் விதமாக நிகழ்ச்சிகளை வழங்கினார்கள். மாணவி தனலெட்சுமி அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். மதுரை வானொலி நிலையத்தினர்  மாணவ,மாணவியரிடம் அன்புடன் பேசி சிறுவர் பல்சுவை  நிகழ்ச்சிக்கு பேட்டி எடுத்து ஒலிபதிவு செய்தனர். மாணவ,மாணவியரும் வானொலியில் பேச போவதை  எண்ணி மகிழ்ச்சியாக பேசினார்கள். மாணவ,மாணவியர் பேசுவதற்கு ஆசிரியைகள்  முத்துலெட்சுமி,வாசுகி,சாந்தி, கலாவல்லி ,ஆசிரியர் ஸ்ரீதர் ஆகியோர் பயற்சி அளித்தனர். இவர்களை ஆசிரியை செல்வமீனாள்   நிகழ்ச்சியில்  பங்கேற்க மதுரை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார் . வானொலி நிலையம்,அதன் ஒலி பதிவு  அறை , ஒலி பதிவு செய்யும் விதம் ஆகியவற்றை வாழ்கையில் முதன் முறையாக கண்டு மாணவ,மாணவியர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.ஏராளமான பெற்றோர்களும் இவர்களுடன் சென்றனர்.பள்ளியில் இருந்து தமிழ்நாடு அரசு தனி பேருந்து மூலம் மாணவர்கள் அனைவரும் பெற்றோர்களுடன் தேவகோட்டை பள்ளியில் இருந்து மதுரை வானொலி நிலையத்திற்கு நேரடியாக அழைத்து செல்லப்பட்டனர்.பள்ளியின் சார்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.மீண்டும் மாணவர்கள் அனைவரும் தமிழ்நாடு அரசின் தனிப்பேருந்து மூலம் மதுரை வானொலி நிலையத்தில் இருந்து தேவகோட்டை பள்ளி வளாகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் மதுரைக்கு வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்ச்சி மதுரை வானொலியில் வருகிற ஏப்ரல் மாதம் 8 மற்றும் 15ஆம் தேதிகளில் மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் அகில இந்திய வானொலியான மதுரை வானொலி நிலையத்தில் சிறுவர் பல்சுவை  நிகழ்ச்சிக்கு ஒலி பதிவுக்கு தமிழ்நாடு அரசின் தனி பேருந்து மூலம் சென்ற போது எடுத்த படம்.

வானொலி நிலையத்திற்கு சென்றது தொடர்பாக மாணவர்களின் கருத்து:
7ம வகுப்பு படிக்கும் ஜெனிபர்: நான் இது வரை மதுரை வந்தது கிடையாது.இதுவே முதல் முறை.வானொலி நிலையத்தை கேள்வி பட்டது கூட கிடையாது.இங்கு வந்து நான் பேசும் நிகழ்ச்சி ஒலிப்பதிவானது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. என்னுடைய வாழ்கையில் இது மறக்க முடியாத நிகழ்வு.இது வரை தொலைகாட்சியில் அனைவரும் பேசுவதை தான் கேட்டு உள்ளேன்.ஆனால் இப்போது தான் ரேடியோவில் நான் பேசுவதை கேட்க போகிறேன் என்று நினைக்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.ரேடியோ நிலையத்தை சுற்றி காண்பித்தனர்.எனக்கும்,எனது அம்மாவுக்கும் ரேடியோ ஒலிபதிவு புதிய அனுபவத்தை கொடுத்துள்ளது.

நான்காம்  வகுப்பு  கிருத்திகா : நான் ரேடியோவில் பேசியது எனக்கு பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளது.என்னுடைய குரல் மிக நன்றாக உள்ளதாக ரேடியோ நிலையத்தில் சொன்னார்கள்.எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.நான் பேசியதை நான் கேட்பது தொடர்பாக என்னுடைய வீட்டின் அருகில் உள்ளவர்களிடம் எல்லாம் சொல்லி உள்ளேன்.அனைவரும் ஆச்சரியத்துடன் கேட்டனர்.ரேடியோ நிலையம் எப்படி இருக்கும் என்று அனைவரும் என்னிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி.ஒரே வருத்தம் எனது தயார் கூலி வேலைக்கு செல்வதால் அவர்கள் என்னுடன் வர இயலவில்லை.அவர்களும் வந்து நான் பேசுவதை பார்த்திருந்தால் இன்னும் சந்தோசமாக இருந்து இருக்கும்.இருந்த போதும் ரேடியோ நிலையத்தில் என்னை அன்புடன் பேச சொல்லி பாராட்டி ஒலிபதிவு செய்ததும்,எங்கள் பள்ளியில் இருந்து எங்களை தனி பேருந்து மூலம் பாதுகாப்பாக ரேடியோ நிலையம் அழைத்து வந்து மதியம் உணவு பள்ளியின் சார்பாக வழங்கியதும் எனக்கு அதிமகமான மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

No comments:

Post a Comment