Sunday 5 February 2017

 மீன்கள் இரண்டு வருடம் முதல் 75 வருடம் வரை ஆயுட்காலம் கொண்டது 

 மீன்வள பல்கலைகழகத்தின் முதன்மை செயல் அலுவலர் தகவல் 


தமிழகத்தில் மாநில அளவில் முதன் முறையாக பள்ளி அளவில் மாணவர்களிடம் வண்ண மீன்கள் வளர்ப்பது  தொடர்பாக விழிப்புணர்வினை ஏற்படுத்தும்  நிகழ்ச்சி 

நடுநிலைப் பள்ளி அளவில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளி மாணவர்களுடன் ஏராளமான  கல்லூரி மாணவர்களும் பங்கேற்பு

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் வண்ண மீன்கள் வளர்ப்பு  இலவச பயிற்சி மற்றும் மீன்கள் , மீன்வளர்ப்பு பற்றிய படிப்பு தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது. 

                    கருத்தரங்கிற்கு வந்தவர்களை பள்ளி ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை ஆனந்தா கல்லூரியின் முதல்வர் ஜான் வசந்த் சிறப்புரையாற்றினார்.சென்னை தமிழ்நாடு மீன் வள பல்கலைகழகம், மீன் வள தொழில் நுட்பம் மற்றும் பயிற்சி நிலையத்தின் முதன்மை செயல் அலுவலர் முனைவர் நா . பெலிக்ஸ் மாணவர்களிடம் பயிற்சி அளித்து பேசியதாவது : மாணவர்களாகிய நீங்கள் அனைவரும் மீன்வள பல்கலைகழகத்தில் சேர்ந்து படிக்க வேண்டும்.மீன்வளம் தொடர்பாக உள்ள படிப்புகளை படித்தால் அதிகமான வேலை வாயுப்புகள் இருக்கின்றன.வண்ண மீன்கள் வளர்த்தால் இரத்த அழுத்தம் மற்றும் இருதயம் தொடர்பான நோய்கள் வராது . அதனை பார்க்கும்போது நமது மனது அமைதியாக இருக்கும்.பள்ளி மாணவர்களாகிய நீங்கள் வண்ண மீன்கள் கண்ணாடி தொட்டிகளில் வளர்ப்பு பற்றி அறிந்து கொண்டால் கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த விஷயங்களை எளிதாக கற்று கொள்ளலாம்..நிறங்கள் கற்று கொள்ளலாம்.இயற்கை ஈடுபாடு வளரும்.மீன்களை அன்பாக உணவு கொடுத்து சாப்பிட வைத்தால் யாரையும் துன்புறுத்த மாட்டீர்கள்.நல்ல பண்புகள் வளரும்.பொதுவாக குட்டி இடும் மீன்கள் கப்பி ,மோலி ,கத்தி மீன்,பிளாட்டி என நான்கு வகையாக உள்ளன.இதன் ஒவ்வொன்றிலும் பல்வேறு வகையான மீன்கள் உள்ளன.மீன்களில் சுமார் 5 அல்லது 6 மாத காலத்தில் இனப்பெருக்கம் நடைபெறுகிறது.பெண் மீன்கள் சுமார் 50இல் இருந்து 200 வரை மீன்களை உற்பத்தி செய்யும்.மீன்கள் இரண்டு வருடம் முதல் 75 வருடம் வரை ஆயுட்காலம் கொண்டது இவ்வாறு பேசினார்.மாணவர்கள் பரத் குமார்,தனலெட்சுமி,ஐயப்பன்,திவ்ய ஸ்ரீ,ஈஸ்வரன்,காயத்ரி,பரமேஸ்வரி,ஜெனிபர் ஆகியோரும்,ஆனந்தா கல்லூரி மாணவர்கள் சத்தியா ,சுவாதி,முகமது ஹக்கீம்,கீர்த்தனா, உட்பட பலர் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.நிகழ்வில் ஏராளமான கல்லூரி மாணவர்கள்,பெற்றோர்கள் கலந்து கொண்டு மீன் வளர்ப்பு பற்றியும்,மீன் வள படிப்பு பற்றியும் அறிந்து கொண்டனர்.அறிய வகை மீன்களின் படங்களும் காண்பிக்கப்பட்டு விளக்கப்பட்டது.நிறைவாக ஆனந்தா கல்லூரியின் பேராசிரியர் மெர்லின் நன்றி கூறினார்.இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளியும்,ஆனந்தா கல்லூரியும் இணைந்து செய்து இருந்தனர்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் வண்ண மீன்கள் வளர்ப்பு  இலவச பயிற்சி மற்றும் மீன்கள் , மீன்வளர்ப்பு பற்றிய படிப்பு தொடர்பான கருத்தரங்கில் சென்னை தமிழ்நாடு மீன் வள பல்கலைகழகம், மீன் வள தொழில் நுட்பம் மற்றும் பயிற்சி நிலையத்தின் முதன்மை செயல் அலுவலர் முனைவர் நா . பெலிக்ஸ் பள்ளி மற்றும் ஆனந்தா கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.

கூடுதல் தகவல்கள் : 
           கருத்தரங்கில் முனைவர் நா.பெலிக்ஸ் மேலும் கூறிய தகவல்கள் வருமாறு :
   மீன் வள படிப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றி ஓர் அறிமுகம் 
                         மீன் வளம் தொடர்பான படிப்பில் முதலாவதாக பி.எப்.எஸ்சி.என்கிற இளங்கலை படிப்பு நான்கு வருடங்கள் கோர்ஸும்,அடுத்ததாக மேல் படிப்பு எம்.எப்.எஸ்சி.என்கிற முதுகலை படிப்பு இரண்டு வருடங்களும், முனைவர் பட்டமான பி.எச்.டி .படிப்புக்கு மூன்று வருடங்களும் ஆகும்.தூத்துக்குடி,சென்னை பொன்னேரி ஆகிய ஊர்களில் இளங்கலை,முதுகலை படிப்பு கல்லூரியும்,நாகப்பட்டினத்தில் பொறியியல் மீன் வள படிப்பு கல்லூரியும் உள்ளன.மீன் வள படிப்பை படித்தால் வேலை வாய்ப்புகள் அதிகம்.மீன் வள துறையில் இன்ஸ்பெக்டர்,துணை இயக்குனர்,கல்லூரியில் உதவி பேராசிரியர் மற்றும் மத்திய மீன் வள ஆரையாட்சி நிறுவனங்களில் விஞ்ஞானி  போன்ற பல்வேறு பணி வாய்ப்புகள் உள்ளன.இறால் வளர்ப்பு முறையை கற்று கொண்டால் சுய வேலை வாய்ப்பில் அதிகம் சம்பாதிக்கலாம்.

மீன் வளம் தொடர்பாக உள்ள படிப்புகளுக்கு கீழ்கண்ட இணைப்பில் சென்று பார்க்கலாம் :www.tnfu.ac.in

                       வண்ண மீன்கள் வளர்ப்பு 
           மீன்கள் வளர்ப்பது என்பது பொதுவாக உணவுக்காக அதிகம் வளர்க்கப்படுகிறது.தற்காலங்களில் அதிகம் அழகுக்காக வளர்க்கப்படுகிறது.வண்ண மீன்கள் வளர்ப்பு சென்னை,பெங்களூர்,கல்கத்தா,பாம்பே ஆகிய நகரங்களில் கண்ணாடி தொட்டிகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது.வண்ண மீன்களை கொஞ்சி விளையாட,ஒரு வளர்ப்பு பிராணியாக அதிகம் வளர்த்து வருகின்றனர்.வண்ண மீன்கள் வண்ண மீன்கள் நீந்துவதை,விளையாடுவதை,இறக்கை திரும்புவதை பார்த்து கொண்டு இருந்தால் நோய்கள் வராது .நல்ல பொழுதுபோக்காக அமையும்.மனது சாந்தம் அடையும்.
                      வீடுகளில் தொட்டியில் மீன்கள் வளர்த்தால் சிறு குழந்தைகள் எண்கள் எளிதாக கற்று கொள்வதுடன்,இயற்கையாக கணித ஈடுபாடு வளரும்.நிறங்களை அதிகமாக கற்று கொள்வார்கள்.அறிவியல் ஆர்வம் ஏற்படும்.மீன்களை அன்பாக உணவு கொடுத்து சாப்பிட வைத்தால் யாரையும் துன்புறுத்த மாட்டீர்கள்.வண்ண மீன்கள் இனப்பெருக்கம் செய்வது தொழிலாக சென்னை,கொளத்தூர்,மதுரை,திருச்சி,கோவை ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.
                    மீன் தொட்டியில் மீன்கள் வளர்த்தல் என்பது வீட்டில் செடி வளர்ப்பது போன்றது.கண்ணாடி தொட்டிகளில் பில்டர் வைத்திருந்தால் 6 மாதத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்தாலே போதும்..
                             மீன்கள் முட்டையும் டும்.குட்டியும் போடும்.குட்டி டும் மீன்கள் எளிதாக உற்பத்தி செய்ய இயலும்.பொதுவாக குட்டி இடும் மீன்கள் கப்பி ,மோலி ,கத்தி மீன்,பிளாட்டி என நான்கு வகையாக உள்ளன.
                கப்பி வகையில் அரைப்பக்கம் கருப்பு,ஊதா வகை,மல்டி கலர் , அல்பினோ கோல்டு ,கோல்டன் ஸ்கின் கப்பி ,ரெட் கலர் கப்பி,சன் செட் கலர் கப்பி   என 6 வகைகள் உள்ளன.
                         மோலி  வகையில் படகு வடிவம் மீன்,கருப்பு மோலி ,ஆரஞ்சு வகை,பிளாக் பலூன்,சில்வர் கலர்,ரெட் கலர் என வகைகள் உள்ளன. 
                    கத்தி மீன்களில் வால்  பகுதி கத்தி மாதிரி இருக்கும்.இதனில் ரெட் கலர்,ஒயிட் கலர்,சன் செட் கலர்,மெரி  கோல்ட் கலர் என வகைகள் உள்ளன.
                      பிளாட்டி மீன்களில் ரெட்,ஆர்டினரி,ஹை பின் மோலாஸ் என வகைகள் உள்ளன. 
                                  மீன்களுக்கு இறக்கை இருப்பதன் மூலம் நீந்துகின்றன.பொதுவாக மீன்கள் செதில் மூலம் சுவாசிக்கும்..பெண் மீன்  முட்டையிடும்.5 அல்லது 6 மாதத்தில் இனப்பெருக்கத்திற்கு தயாராகிறது.பெண் மீன்கள் சுமார் 50 முதல் 200 குட்டிகள் இடும்.மீன்களின் அள்வு,எடை பொறுத்து வெளி வரும்.
                      உணவு முறைகள் 
                       முட்டை மஞ்சள்கரு மேலும் உயிர் உணவு ,குட்டிகளுக்கு தேவையான அளவு கொடுக்க வேண்டும்.கடலை புண்ணாக்கு,தவிடு பொடியாக அரைத்து சாப்பிட கொடுக்கலாம்.கண்ணாடி தொட்டியில் வளர்க்கலாம்.உப்பு தண்ணீரில் மீன்கள் நன்றாக வளரும்.
                    முட்டையிடக்கூடிய மீன்கள் : 
                     முட்டையிடக்கூடிய மீன்களின் இனப்பெருக்கம் பல்வேறு வகைப்படும்.  சில மீன்கள் குளம் வற்றி போவதற்கு முன்பு மீன்கள் முட்டையிடும்.முட்டைகளை புதைத்து வைக்கும்.முட்டை சேமிக்கப்பட்டு செடிகளில் தெளிக்கும்.முட்டை இலைகளில் ஒட்டி கொள்ளும்.சில மீன்கள் 24 மணி நேரத்தில் முட்டையில் இருந்து வெளி வரும்.சில மீன்கள் 48 மணி னேற்றத்திலும்,72 மணி நேரத்திலும் வெளி வரும்.குளத்தில் அதிகமான செடிகள் போடா வேண்டும்.அப்போதுதான் இலையில் முட்டை ஒட்டி கொண்டு நன்றாக வளரும்.சில மீன்கள் உமிழக்கூடிய எச்சில் மூலம் காற்று குமிழிகள் உற்பத்தி செய்து முட்டை இடும்.வாய்க்குள் அடைகாத்தல் ,சிலேபி மீன்குஞ்சுகள் அடைகாக்கும்.பைட்டர் மீன் காற்றுக்குமிழ் பாதுகாத்து 24 மணி நேரத்தில் மீன் குஞ்சு பொரிக்கும்.சில சிக்கிலிடு மீன்கள் முட்டையை வாயில் வைத்து அடைகாக்கும். அரோவொணா மீன்கள் பெரிய,பெரிய முட்டையிட்டு மீன்கள் பொரிக்கும். 

மாணவர்களின் கேள்விகளும்,பதில்களும் :

பரத்குமார் : எத்துணை வகையான மீன்கள் உள்ளன ?

சி.இ.ஓ .பதில் : சுமார் 25,000 வகையான மீன்கள் உள்ளன.

பரமேஸ்வரி : எந்த வகையான மீன்களை சாப்பிடலாம்

 சி.இ.ஓ .பதில்: கெண்டை மீன்,விரால் மீன்,ஜெலபியா மீன்,கெழுத்தி மீன்,வஞ்சிரம் மீன்,நகர மீன்,சாலை மீன் இது போன்ற மீன்களை சாப்பிடலாம்.

தனலெட்சுமி : வண்ணமீன்கள் வளர்க்க சொல்வதன் காரணம் என்ன?

 
சி.இ.ஓ .பதில்: வண்ண மீன்களைத்தான் மக்கள் மிகவும் விரும்பி வளர்க்கிறார்கள்.அழகாக இருப்பது காரணம்..மேலும் அதன் மீது தான் நம்பிக்கையும் அதிகம் உள்ளது.அதுதான் கரணம்.

ஐயப்பன் : மீன்கள் எவ்வளவு காலம் வாழும்?


சி.இ.ஓ .பதில்: மீன்கள் பொதுவாக 2 வருடம் முதல் 75 வருடம் வரை ஆயுள் காலம் கொண்டது.

கல்லூரி மாணவி சத்தியா  : மீன்களுக்கான உணவு எப்படி தயார் செய்யலாம் ?
          
 சி.இ.ஓ .பதில் : மீன்களுக்கு உணவு குறைவாக கொடுத்தால்  வளராது..உணவுகளில் கோதுமை மாவு,சோயா மாவு,கான்பிளவர்,வைட்டமின்,மினரல்,கருவாடு ஆகியவை கொடுக்கலாம்.உணவுகளை நாமே தயார் செய்யலாம்.அரசி மாவு வேக வைத்து அதனை இடியாப்பமாக பிழிந்து காயவைத்து பாலிதீன் கவரில் போட்டு வைத்து உணவாக கொடுக்கலாம்.கம்பு,கேழ்வரகு போன்று எளிமையாக கிடைப்பதை அளவாக கலந்து கொடுக்கலாம்.

திவ்ய ஸ்ரீ : ஒரு தொட்டியில் எத்துணை மீன் போட்டு வளர்க்கலாம்?

 சி.இ.ஓ .பதில் : ஒரு அடி அகலம்,ஒரு அடி உயரம் உள்ள தொட்டியில் 10 மீன்கள்  போட்டு வளர்க்கலாம் .


ஜெகதீஸ்வரன் : கோல்ட் மீன்கள் எத்தனை வகை உள்ளது ?

 சி.இ.ஓ .பதில் : 20 வகை உள்ளது.



ஜெனிபர் : தொட்டியில் தண்ணீர் மாற்றுகிறோம்.குளத்தில் தண்ணீர் மற்ற முடியாது.எப்படி சார் மீன்கள் வாழ்வது  சாத்தியம் ?

 சி.இ.ஓ .பதில்: தொட்டிக்குள் சுவாசிக்க தேவையான ஆக்ஸிஜன் குறைவு.அதுவே குளத்தில் திறந்த வெளியில் உள்ளதால் ஆக்ஸிஜன் அதிகம் இருக்கும்.மேலும் குளத்தில் உள்ள மீன்கள் எண்ணிக்கை குறைவு.தொட்டிக்குள் தண்ணீர் பழையது ஆகி விடுவதால் ஆக்ஸிஜன் அளவு குறைந்து விடும்.எனவே புதிய தண்ணீர் மற்ற வேடனும்.ஆனால் குளத்தில் இந்த பிரச்சினை கிடையாது.

காயத்ரி : தமிழகத்தில் எந்த இடத்தில அதிகம் மீன்கள் உள்ளன?

 சி.இ.ஓ .பதில் : ராமேஸ்வரம் பகுதியில் அதிகம் உள்ளன.

கல்லூரி மாணவர் முகமது ஹக்கீம் : மீன்களுக்கு எந்த மாதிரியான நோய்கள் வரும் ? 

 சி.இ.ஓ .பதில்: மீன்களுக்கு பல  நோய்கள் வரும்.அதற்குரிய மருந்தை போடா வேண்டும்.நோய் பிடித்த மீனை தனியே எடுத்து,தொட்டியை   சுத்தமாக கழுவ வேண்டும்.நோய் பிடித்த மீன்கள் சாப்பிடாது.மேலே வந்து மிதந்து கொண்டு இருக்கும்.தொட்டியை ஒட்டி,ஒட்டி வந்து நின்று கொள்ளும்.வால் ,இறக்கை, உடம்பு போன்ற பகுதிகளில் சிவப்பு புள்ளி இருக்கும்.நோய் பதித்த மீன்களின் இயக்கம் குறைவாக இருக்கும்.ஒரு மீன் பாதித்தால் எல்லா மீன்களும் பாதிக்கும்.உப்பு தண்ணீர் அல்லது மஞ்சள் மருந்து நல்லது.

செந்தில் : எல்லா மீன்களையும் ஒன்றாக வளர்க்கலாமா? 


சி.இ.ஓ .பதில்: சில மீன்களை ஒன்றாக வளர்க்க இயலாது.பைட்டர் மீனை தனியாக வளர்க்க வேண்டும்.


கல்லூரி மாணவி கீர்த்தனா : எத்துணை நாளைக்கு ஒரு முறை தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும்?

 சி.இ.ஓ .பதில்: தொட்டியில் பில்டர் வைத்து இருந்தால் ஆறு மாதத்திற்கு ஒரு முறையும், இல்லாவிட்டால் மாதம் ஒரு முறையும் கழுவ வேண்டும்.


ஜனஸ்ரீ : வண்ண மீன்களின் நீளம் ,அகலம் பொதுவாக எவ்வளவு இருக்கும் ?

 சி.இ.ஓ .பதில் : வண்ண மீன்கள் 2 சென்டி மீட்டர் முதல் 30 சென்டி மீட்டர் வரை இருக்கும்.அவற்றை கண்ணாடி தொட்டிகளில் வளர்க்கலாம்.              இவ்வாறு மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
 
                
                              

No comments:

Post a Comment