Monday 27 February 2017

தேசிய அறிவியல் தின கொண்டாட்டம்

மூளை தொப்பி.. உணவுச் சங்கிலி.. ஊசித் துளை கேமரா.. "கம்மி" செலவில் அறிவியல் உபகரண தயாரிப்பு...!

தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் உபகரணங்களை செய்வது எப்படி என்பதை விளக்கி செய்து காண்பித்தனர்.

Sunday 26 February 2017

வார வழிபாட்டில்  சாதனை செய்த மாணவர்கள் 

முதல் பரிசினை நான்கு பேர் பெற்று சாதனை

                            தேவகோட்டை-   தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர் தேவகோட்டை நகர சிவன்கோவிலில் நடைபெறும் வார வழிபாட்டுக் கூட்டதில் கலந்து கொண்டு பரிசு பெற்றதற்கு பாராட்டு விழா நடைபெற்றது.தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக இப்பள்ளி மாணவர்கள் முதல் பரிசினை பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday 23 February 2017

பன்றி காய்ச்சலை  தடுக்க என்ன செய்யவேண்டும் ?
கிழ்கண்ட வீடியோவை காணுங்கள் 

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளியில் பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு கருத்தரங்கில் தேவகோட்டை வட்டார மருத்துவ அலுவலர் மாணவர்ளுக்கு நேரடியாக பன்றி காய்ச்சலை தடுக்க விளக்கும் காணொளி .அனைவரும் காணுங்கள்
பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு கருத்தரங்கு

பன்றி காய்ச்சலை தடுக்க கைகளை நன்றாக கழுவுங்கள்

தொண்டை வலி,காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் பள்ளிக்கு விடுமுறை எடுத்து கொள்ளுங்கள்.வீட்டிலேயே ஓய்வு எடுங்கள்.

மருத்துவ  துணை இயக்குனர்  அறிவுரை

பன்றி காய்ச்சல் நோய்க்கு தடுப்பூசி உண்டா ? மாணவரின் ருசிகர கேள்வி

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு கருத்தரங்கு
நடைபெற்றது.

Sunday 19 February 2017

அறநூல் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  பாராட்டு விழா 

தமிழ்நாடு அரசு தனி  பேருந்து மூலம் தேவகோட்டையில் இருந்து காரைக்குடிக்கு சென்று போட்டியில் பங்கேற்று அதிக பரிசுகளை குவித்து மாணவர்கள் சாதனை

 தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக போட்டி போட்டு வெற்றி பெற்ற தேவகோட்டை அரசு உதவி பெறும் பள்ளி மாணவ,மாணவியர்

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் அறநூல் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

சுட்டி ஸ்டார்க்கு சென்னையில் பாராட்டு விழா
                     இன்று சென்னையில் நடைபெறும் சுட்டி ஸ்டார்களுக்கான பாராட்டு விழாவில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி ராஜேஸ்வரி பங்கு கொண்டு பரிசுகளை பெற உள்ளார்.அவருக்கு பள்ளியின் சார்பாக பாராட்டுக்கள்.

Saturday 18 February 2017

ஐ.ஏ .எஸ்.உட்பட போட்டி தேர்வுகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல்
தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்நடுநிலைப் பள்ளியில் பள்ளி பருவத்தில் போட்டி தேர்வுகளுக்கான ஆளுமை தன்மையை வளர்த்து கொள்வது எவ்வாறு என்பது தொடர்பான பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியாளரிடம் மாணவர்கள் கேள்வி மற்றும் ராஜேஷ் அவர்களின் பதில்கள் 🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀
காயத்ரி : *IAS தேர்வு என்றால் என்ன ?*

பயிற்சியாளர் பதில் : IAS மற்றும் IPS உள்ளிட்ட
24 பணிகளுக்காக
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயத்தினால்(UPSC) ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் குடிமைப்பணித் தேர்வே(CIVIL SERVICE EXAM) மிகவும் பிரபலமாக IAS தேர்வு என்று அழைக்கப்படுகிறது.


Thursday 16 February 2017

இன்றைய நிகழ்ச்சி 17/02/2017

பள்ளி பருவத்தில் போட்டி தேர்வுகளுக்கான  ஆளுமை தன்மையை வளர்ப்பது எவ்வாறு ?

இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி,வளாகம்,தேவகோட்டை.

நாள் : 17/02/2017

நேரம் : காலை 9.15 மணி

பயிற்சி அளிப்பவர் : திரு.K.M.ராஜேஷ், நிருவாக இயக்குனர்,ராஜேஷ் IAS பயிற்சி மையம் ,(அரியலூர்,சேலம்,தஞ்சாவூர் ).

அனைவரும் வருக.அனுமதி இலவசம்.

நீங்களும் IAS ஆகலாம் என்கிற தலைப்பிலும் தகவல்கள் வழங்கப்பட உள்ளது.அனைவரும் அருமையான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
100 சதவிகிதம் (பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ) ரூபெல்லா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்திய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு காரைக்குடி அழகப்பா பல்கலைகழக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் பாராட்டுதல் நடைபெற்றது. இதில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கதுக்கு சிவகங்கை மாவட்ட மருத்துவ துறை துணை இயக்குனர் யசோத மணி பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

Monday 13 February 2017

சேக்கிழார் விழாவில்  பெரியபுராணம்    பாடிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா  


      தேவகோட்டை -    தேவக்கோட்டடை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சேக்கிழார் விழாவில் பெரியபுராணம் பாடிய மாணவர்ளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

Saturday 11 February 2017

பள்ளியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை  வழங்கல் விழா 


தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்  நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் துவக்க விழா நடைபெற்றது.
 
 

Tuesday 7 February 2017

    ரூபெல்லா பீதியை முறியடித்த மாணவர்கள்

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மீசில்ஸ் ரூபெல்லா தடுப்புசித் திட்டதின் கீழ்  ஊசி போட்டுக்கொண்ட  பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலத்தை சப் கலெக்டர் துவக்கி வைத்தார்.

Monday 6 February 2017

100 சதவிகிதம்  (பள்ளி மாணவர்கள் அனைவருக்கும்  ) மீசில்ஸ் ரூபெல்லா தடுப்புசித் பெற்றோர் ஒத்துழைப்புடன் போடப்பட்டது

 மீசில்ஸ் ரூபெல்லா   தடுப்புசித் திட்டம் துவக்க விழா

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மீசில்ஸ் ரூபெல்லா தடுப்புசித் திட்ட துவக்க விழா நடைபெற்றது.100 சதவிகிதம்  (பள்ளி மாணவர்கள் அனைவருக்கும்  ) மீசில்ஸ் ரூபெல்லா தடுப்புசித் பெற்றோர் ஒத்துழைப்புடன் போடப்பட்டது 

Sunday 5 February 2017

 மீன்கள் இரண்டு வருடம் முதல் 75 வருடம் வரை ஆயுட்காலம் கொண்டது 

 மீன்வள பல்கலைகழகத்தின் முதன்மை செயல் அலுவலர் தகவல் 


தமிழகத்தில் மாநில அளவில் முதன் முறையாக பள்ளி அளவில் மாணவர்களிடம் வண்ண மீன்கள் வளர்ப்பது  தொடர்பாக விழிப்புணர்வினை ஏற்படுத்தும்  நிகழ்ச்சி 

நடுநிலைப் பள்ளி அளவில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளி மாணவர்களுடன் ஏராளமான  கல்லூரி மாணவர்களும் பங்கேற்பு

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் வண்ண மீன்கள் வளர்ப்பு  இலவச பயிற்சி மற்றும் மீன்கள் , மீன்வளர்ப்பு பற்றிய படிப்பு தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது.