Thursday 29 December 2016



பருப்பு சாப்பிடுவதால் உடல் குண்டாகாது

அரசு மருத்துவர் தகவல்



விடுமுறை கால இலவச பயிற்சி முகாமில் மூன்றாம் நாள் நிகழ்வில்

அரசு மருத்துவருடன் மாணவர்கள் கலந்துரையாடல்


தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பயிற்சி முகாமில் பருப்பு சாப்பிடுவதால் உடல் குண்டாகாது என அரசு மருத்துவர் பேசினார்.



                     பயிற்சி முகாமிற்கு வந்தவர்களை மாணவி ராஜி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் மாணவர்கள் உடல்நலனுக்கு சாப்பிட வேண்டிய சத்தான உணவுகள் குறித்து திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சிவசங்கரி பேசுகையில் , மாணவர்கள் உடலுக்கு நல்லது செய்ய கூடிய இரும்பு சத்து நிறைந்தகீரை, பேரீச்சம்பழம்,அத்திபழம்,கடலை மிட்டாய்,கம்பு போன்ற சத்து நிறைந்த பொருள்களை அதிக அளவில் சாப்பிட வேண்டும். பருப்பு வகைகள்,மீன்,வேர்க்கடலை,காய்கறிகள்,குட மிளகாய்,வெள்ளரிக்காய் ஆகியவற்றில் புரோடீன் சத்து அதிகமாக உள்ளது.சாம்பார் சாப்பிடும்போது அதில் உள்ள பருப்பை அவசியம் சாப்பிட வேண்டும்.அதை தனியாக சாப்பிடாமல் ஒதுக்க கூடாது.பருப்பு சாப்பிடுவதால் உடல்  குண்டாகாது.தூதுவளை போன்ற மூலிகை தாவரங்களை உணவில் துவையலாக சேர்த்து கொண்டால் வளரிளம் பெண்களுக்கு உடல் நன்றாக இருக்கும்.வைட்டமின்கள் எ  அதிகம் கண்ணுக்கு தேவைப்படும்.வைட்டமின் பி  வெந்தயத்தில் அதிகம் உள்ளது.அது உடல் சூட்டை நன்றாக குறைக்கும் .வைட்டமின் சி  கொய்யா,ஆரஞ்சு பழத்தில் அதிகம் இருக்கும்.இந்த சத்து குறைவதால் அடிக்கடி பல் ஈறுகளில் ரத்தம் வரும்.வைட்டமின் டி  பாலிலும்,அதிகமாக வெயிலிலும் இருக்கும்.செலவே இல்லாமல் இயற்கையில்  கிடைக்க கூடியது வெயில் இருந்து அதிகமாக எளிதாக கிடைக்கும். கால்சியம் வளரிளம் பெண்களுக்கு அதிகமாக தேவைப்படக்கூடியது ஆகும்.வைட்டமின் இ  ,கே  யும் உடலுக்கு முக்கியமானது ஆகும்.வைட்டமின் கே குறைவால் உடலில் ரத்தம் உறைதல் தடைபடும்.தைராய்டு குறைவாக இருக்கும் குழந்தைகள் மந்தமாகவே இருப்பார்கள்.அரசு மருத்துவ மனைகளில் ஆறு மாதத்திற்கு ஒரு முறை அரசு மருத்துவமனைகளில் இதற்கான மாத்திரைகள் தேவைப்படுவோருக்கு அவரகளது உடலை சோதனை செய்து இலவசமாகவே வழங்கப்படுகிறது.இதனை அனைத்து மக்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.கொழுப்பு சத்து நல்லது,கேட்டது என உள்ளது.அதனை பார்த்து சரியான கொழுப்பு நல்ல கொழுப்பு சத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.சோப்புகளில் அதிகம் வேதி தன்மை இல்லாத சோப்புகளை அதிகம் பயன்படுத்த வேண்டும்.மண்ணில் விளையாடினால் நன்றாக கைகளை கழுவி விட்டு பிறகு தான் வீட்டில் எந்த வேலையையும் செய்ய வேண்டும்.இல்லை எனில் கைகளில் புண்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்றும்,குடற்புழுக்கள் வயிற்றில் சென்று சேர்வதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றும் கூறினார். காயத்ரி,தனலெட்சுமி,ஜனஸ்ரீ ,பரமேஸ்வரி,விஜய்,பரத் ஆகியோர் ரத்தசோகை ,மூளை காய்ச்சல்,தேமல் தொடர்பான கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.
                     கை கழுவுதல் எப்படி என ஆறு விதமான முறைகளை செவிலியர் செல்வி மாணவர்களுக்கு செயல் விளக்கம் வாயிலாக நேரடியாக செய்து காண்பித்தார். நிறைவாக மாணவி ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் விடுமுறை கால இலவச பயிற்சி முகாமில் மூன்றாம் நாள் நிகழ்வில் திருவேகம்பத்துர்  அரசு மருத்துவர் சிவசங்கரி மாணவர்களுடன்  கலந்துரையாடல் நடத்தினர்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்



No comments:

Post a Comment