Wednesday 14 December 2016

நாளிதழ்களில் செய்திகளை படிப்பது சுகமான அனுபவம்

பத்திரிக்கை ஆசிரியர் பேச்சு

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பத்திரிக்கை ஆசிரியருடன் மாணவர்கள் கலந்துரையாடும் நிகழ்வு நடைபெற்றது.


                                  நிகழ்விற்கு ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார்.தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சந்திரமோகன் தலைமை தாங்கினார்.நிகழ்வின் துவக்கமாக அபிராமி அந்தாதி நடனம்,திருக்குறள் நாட்டியம் மாணவிகளால் நடத்தப்பட்டது.திருப்பாவை,திரும்வெம்பாவை ,ஆத்திசூடி,கொன்றைவேந்தன்,வெற்றி வேற்கை ,மூதுரை,நல்வழி,நன்னெறி போன்ற பாடல்களை பாடிய மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.தினகரன் நாளிதழின் மதுரை மண்டல  செய்தி ஆசிரியர் திருமங்கலம் கிருஷ்ணகுமார் மாணவர்களிடம் பத்திரிக்கை தொடர்பாக பேசுகையில், தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை பார்த்தால் மீண்டும் அதனை பார்ப்பது சிரமமானது.ஆனால் நாளிதழ்களில் செய்தியை படிக்கும்போது விரிவாக அதோடு எத்துணை முறை வேண்டுமானாலும் படிக்க இயலும்.கட் செவி,முகநூல் போன்றவற்றின் வழியாக எத்துணை செய்திகளை படித்தாலும் அதனில் உண்மை தன்மை உள்ளதா என்று பார்க்க இயலாது.ஆனால் பத்திரிக்கையின் வழியாக செய்திகளை பல தடவை உண்மை தன்மை உள்ளதா என விசாரித்து அதன் பிறகு தான் வெளியிடுவோம்.சமூகத்தில் ஒரு இடத்தில் நடைபெறும் அவலங்களை வெளியிடும்போது அதனை பார்த்து மற்றவர்கள் தங்கள் தவறுகளை சரி செய்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது.பல நல்ல நிகழ்வுகளுடன் சில மோசமான சமூக அவலங்களையும் பத்திரிக்கைகள் ஆதாரங்களுடன் வெளியிடுகின்றன.உண்மை தன்மை பத்திரிக்கைகளுக்கு மிக முக்கியமானது.இன்று இ பேப்பர் என்கிற முறையில் பத்திரிக்கைகள் இணையம் வழியாகவும் படிக்க வசதியாக உள்ளது .மாணவர்களாகிய நீங்கள் சிறு வயது முதலே நன்றாக தினம்தோறும் செய்தி தாள்கள் வாசியுங்கள்.பல்வேறு பொது  தகவல்களை உள்ளடக்கி வருவதுதான் பத்திரிக்கை ஆகும்.அதனையும் தினம்தோறும் வாசித்து குறிப்பு எடுத்து கொள்ளுங்கள்.எப்போதும் தகவல்கள்  உங்களிடம் அதிகமாக இருந்தால் உங்களுக்கு நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள் .செய்தி சேகரிக்க ஒவ்வொரு ஊருக்கும் ஒரு நிருபர் இருப்பார் .உங்கள் பகுதியில் ,பள்ளியில் யாரேனும் மிக சிறப்பாக செயல்கள் செய்தால் எங்களுக்கு ஒரு போஸ்ட் கார்டில் எழுதி அனுப்புங்கள்.பத்திரிக்கைகள் உங்களை தேடி வந்து செய்தி வெளியிடுவார்கள்.மாணவர்களுக்காக மாணவர்கள் வரைந்து அனுப்பும் ஓவியங்கள்,கவிதைகள் போன்றவை அதிக அளவில் பத்திரிக்கையில் வெளியிட்டு உங்கள் திறமைகளை வெளி கொண்டுவரும் களமாகவும் பத்திரிக்கைகள் செயல்படுகின்றன.இவ்வாறு பேசினார்.
                            மாணவர்கள் ரஞ்சித்,ராஜி,ஐயப்பன்,காயத்ரி,ஜெனிபர் , தனலெட்சுமி,பரமேஸ்வரி,ராஜேஸ்வரி,வித்யா,ஜெகதீஸ்வரன்,கார்த்திகேயன்,
உமா மஹேஸ்வரி உட்பட பலர்  பத்திரிக்கை தொடர்பாக கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.நிறைவாக ஆசிரியை வாசுகி நன்றி கூறினார்.


பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பத்திரிக்கை ஆசிரியருடன் மாணவர்கள் கலந்துரையாடும் நிகழ்வு நடைபெற்றது.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தினகரன் நாளிதழின் மதுரை மண்டல  செய்தி ஆசிரியர் திருமங்கலம் கிருஷ்ணகுமார் பரிசுகளை வழங்கினார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சந்திரமோஹன் உள்ளனர்.

No comments:

Post a Comment