Wednesday 28 December 2016

   முதல் முறையாக தென் தமிழகத்தில் இது போன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி அளவில் முதன் முறையாக 5 நாள் இலவச பயிற்சி வகுப்பு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்காக நடப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.                     விடுமுறை நாளாக இருந்த போதிலும்   பல்வேறு பள்ளிகளில் இருந்தும்,எங்கள் பள்ளியில் இருந்தும் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் மிகுந்த ஆர்வமுடன் இரண்டாவது நாள் தொடர் பயிற்சியில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

விடுமுறை கால இலவச பயிற்சி வகுப்பின் இரண்டாம் நாள் நிகழ்வு 


 செய்தி தாளில் ஆல்பம் தயாரித்தல் பயிற்சி

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் விடுமுறை கால இலவச பயிற்சி வகுப்பின் இரண்டாம் நாள் நிகழ்வாக செய்தி தாளில் ஆல்பம் தயாரித்தல் பயிற்சி அளிக்கப்பட்டது.


                         பயிற்சிக்கு வந்தவர்களை ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.பெங்களூரு அகஸ்தியா நிறுவனத்தின் பயிற்சியாளர்கள் கவியரசு,முத்துச்செல்வன் ஆகியோர் இயற்கை நிகழ்வுகள்,அறிவியில் அறிஞர்கள்,அரசியல் தலைவர்கள்,விளையாட்டு மற்றும் விழிப்புணர்வு ஆகிய 5 தலைப்புகளில் செய்தி தாளில் உள்ள படங்கள்,தகவல்களை வெட்டி எடுத்து குழுக்கள் வாரியாக சார்ட் போர்டுகளில் ஓட்டுமாறு பயிற்சி அளித்தனர்.மாணவர்கள் மிக ஆர்வமாக செய்தி தாள்களில் உள்ள தகவல்களை தலைப்பு  வாரியாக பிரித்து வெட்டி படங்களை அழகிய ஆல்பமாக தயார் செய்தனர்.பள்ளியில் எதனையும் படிக்க சொல்லாமல் தகவல்களை மட்டும் அவர்களிடத்தில் கொடுத்து விட்டு இந்த பயிற்சி வழங்கியதால் மிக அழகாக ஆல்பம் ஆர்வத்துடன் தயார் செய்து அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தினார்கள்.நிறைவாக ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.


பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் விடுமுறை கால இலவச பயிற்சி வகுப்பின் இரண்டாம் நாள் நிகழ்வாக செய்தி தாளில் ஆல்பம் தயாரித்தல் பயிற்சி அளிக்கப்பட்டது.தாங்களே தயாரித்த ஆல்பங்களுடன் மாணவர்கள் உள்ளனர்.

No comments:

Post a Comment