Saturday 5 November 2016

 கந்தர் சஷ்டி விழாவில் அரசு உதவி பெறும் பள்ளியின் கலை நிகழ்ச்சிகள் 
தேவகோட்டை - தேவகோட்டை கந்தர் சஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் கலை நிகழ்ச்சிகள் கண்கவர் நிகழ்ச்சியாக மிக பெரிய மேடையில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நடைபெற்றது.

                       71 ஆம் ஆண்டாக நடைபெற்று வரும் தேவகோட்டை கந்தர் சஷ்டி விழாவில் மிகப்பெரிய மேடையில் சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் பள்ளியின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து இருந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில்  கலை நிகழ்ச்சிகள் 
 வரவேற்புரையுடன் துவங்கி பரதநாட்டியம் ,ஓம் சரவணபவ நடனம்,முருகன் அடிமை பேச்சு,செல்ல குழந்தைகள் நடனம்,லார்டு முருகா ஆங்கில பேச்சு ,மாரியம்மன் கரக நடனம்,நம்பிக்கை பேச்சு,அலை பேசியால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் வண்ணம் மௌன நடிப்பு,தி டிஸ் ஹானஸ்ட் ஜட்ஜ் ஆங்கில நாடகம் ,உழவர் நடனம்,யோகம் தரும் யோகா , நிலவுக்கே சென்று வந்தது போன்ற நிலவு நடனம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நன்றியுரையுடன் நிறைவுபெற்றது.ஒரு மணி நேரத்திற்கும் மேலான கலை நிகழ்ச்சிகளை பள்ளி மாணவிகள் 6ம் வகுப்பு ராஜி,7ம் வகுப்பு ஜெனிபர் ஆகியோர் தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.

பட விளக்கம் : தேவகோட்டை கந்தர் சஷ்டி விழாவில் சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியின் கலை நிகழ்ச்சிகள் கண்கவர் நிகழ்ச்சியாக மிக பெரிய மேடையில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நடைபெற்றது.

No comments:

Post a Comment