Saturday 1 October 2016

அகில இந்திய வானொலியான                  மதுரை வானொலியில் தேவகோட்டை பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் சிறுவர் பூங்கா நிகழ்ச்சி !
மதுரை வானொலி நிலையத்தில்  ஒலிப்பதிவானது 



                                    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் அகில இந்திய வானொலி நிலையமான  மதுரை வானொலியில் ஒலிபரப்பாகும் சிறுவர் பூங்கா  நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான    ஒலிபதிவு  நடைபெற்றது.
                                     
                                       மதுரை வானொலி நிலையத்திற்கு மாணவ,மாணவியர் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் சென்றனர்.மதுரை வானொலி நிலையத்தினர் மாணவர்களை வரவேற்று ஒலி பதிவு அறைக்கு அழைத்து சென்றனர். மாணவர்  சந்தோஷ்   பஞ்சபூதம் பாடலையும் மாணவர் சண்முகம் நமது உடல் பற்றிய செய்திகளை தகவலாகவும் , சந்தியா ,வள்ளியம்மை ஆகியோர் வினாடி வினா நிகழ்ச்சியை தொகுத்தும்,கீர்த்திகா ,ஜனஸ்ரீ ,வெங்கட்ராமன் ,அஜய் பிரகாஷ் ஆகியோர் முக்கனிகள் என்கிற தலைப்பில் பட்டிமன்றமும்,கார்த்திகா பழமொழியை புதுமொழியாக எடுத்து கூறியும் ,செந்தில் பருவத்தே பயிர் செய் கதையையும் ,தமிழ் பற்றிய கலந்துரையாடல்,மகாத்மா தொடர்பாக கவிதை ,அறிவியல் பாடல் போன்ற நிகழ்ச்சிகளை அனைத்து மாணவர்களும் இணைந்தும்  கொடுத்த தகவல்களை மதுரை வானொலி நிலையத்தினர்  மாணவ,மாணவியரிடம் அன்புடன் பேசி சிறுவர் பூங்கா நிகழ்ச்சிக்கு பேட்டி எடுத்து ஒலிபதிவு செய்தனர். மாணவ,மாணவியரும் வானொலியில் பேச போவதை  எண்ணி மகிழ்ச்சியாக பேசினார்கள். மாணவ,மாணவியர் பேசுவதற்கு ஆசிரியைகள்  முத்து லெட்சுமி    பயற்சி அளித்தார் .  வானொலி நிலையம்,அதன் ஒலி பதிவு  அறை , ஒலி பதிவு செய்யும் விதம் ஆகியவற்றை வாழ்கையில் முதன் முறையாக கண்டு மாணவ,மாணவியர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் அகில இந்திய வானொலியான மதுரை வானொலி நிலையத்தில் சிறுவர் பூங்கா நிகழ்ச்சிக்கு ஒலி பதிவுக்கு சென்ற போது எடுத்த படம்.


No comments:

Post a Comment