Tuesday 26 July 2016


 விகடன் இயர் புக் 2015 மற்றும்  விகடன் செய்தி ஆசிரியர் வாழ்த்து கடிதம் வழங்குதல்

கோடை விடுமுறையில் சுட்டி விகடன் சார்பாக சுட்டி ஸ்டார்  போட்டியில் பங்கேற்ற தேவகோட்டை  சேர்மன் மாணிக்க வாசகம்  அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி சார்பாக பங்கேற்ற அனைத்து மாணவ,மாணவியர்க்கும் விகடன் இயர் புக் 2015 மற்றும்  விகடன் செய்தி ஆசிரியர் வாழ்த்து கடிதமும்   வழங்குதல் 
 




கோடை விடுமுறையில்   சுட்டி விகடன் பேனா பிடிக்கலாம்,பின்னி எடுக்கலாம் போட்டிகளில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் கலந்து கொண்டனர்.கலந்து கொண்ட அனைவருக்கும் சுட்டி விகடன் சார்பாக விகடன் இயர் புக் 2015 மற்றும்  விகடன் செய்தி ஆசிரியர் வாழ்த்து கடிதமும்  பரிசாக வழங்கப்பட்டது.

                  சுட்டி விகடன் சார்பாக தமிழகம் முழுவதும் நடைபெற்ற பேனா பிடிக்கலாம் ,பின்னி எடுக்கலாம் என்கிற சுட்டி ஸ்டார் போட்டி காரைக்குடி மையத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சார்பாக 08 மாணவ,மாணவியர் கலந்து கொண்டனர்.

மாநில அளவில் நடைபெற்ற சுட்டி விகடன் பேனா பிடிக்கலாம்,பின்னி எடுக்கலாம் போட்டியில்   அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி அளவில் தேர்வு பெற்றுள்ள ஒரே மாணவி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி  ராஜேஸ்வரி  சுட்டி ஸ்டாராக தேர்வு செய்யப்பட்டார் . இதன் தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்ற மாணவ,மாணவிகளுக்கும் சுட்டி விகடன் பரிசாக விகடன் இயர் புக் 2015 என்ற புத்தகத்தையும்,பங்கேற்றதற்கு ஆசிரியரின் வாழ்த்து கடிதமும்  பரிசாக வழங்கி உள்ளது.இதனை 
பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வழங்கினார்.சுட்டி விகடன் குழுமத்துக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment