Tuesday 7 June 2016

தினமலர்- பட்டம் -பட்டசபை -எனது அனுபவங்கள் 

தினமலர் சார்பாக நடைபெற்ற பட்டசபை  நிகழ்ச்சியில் எங்கள் பள்ளி மாணவி தேர்வாகி அதன் தொடர்ச்சியாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.


                                                   பயிற்சி தொடர்பான தகவல் வந்தது முதல் பட்டசபை குழுவினர் எங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததனர்.குறிப்பாக திருமதி.நர்மதா அவர்கள் பல நாட்கள் தொடர்பு கொண்டு எங்களை ஊக்கப்படுத்தினார்கள்.எக்மோரில் நாங்கள் இறங்கியவுடன் எங்களை தொடர்பு கொண்டு பேருந்து மூலம் அழைத்து வந்தனர்.வந்த உடன் எங்களுக்கு நல்ல உணவளித்து,அருமையான பள்ளிக்கு அழைத்து சென்றனர்.திரு.ஞானி அவர்கள் நல்ல தொடக்க உரை வழங்கினார்கள்.பெற்றோர்களுக்கு என்று தனியாக திருமதி.ம.பத்மாவதி அருமையான தகவல்களை,பயனுள்ள தகவல்களை பகிர்ந்து கொண்டார்.மிகுந்த உபயோகமாக இருந்தது.
                             மேலும் திரு.கு.சிவராமன் அவர்கள் அருமையான தகவல்களை நல்ல முறையில் அனைவருக்கும் புரியும் வண்ணம்  அழகாக எடுத்துரைத்தார்.அவரது தகவல் கேட்டதில் இருந்து அதனை பின்பற்ற ஆரம்பித்து உள்ளேன்.பல்வேறு தகவல்களை அனைவருக்கும் புரியும் வண்ணம் சூப்பராக சொன்னார்கள்.
                                  ஒரு நாள் முழுவதும் நல்ல முறையில் பயனுள்ள வகையில் நிகழ்வுகள் நடைபெற்றன.மாணவர்களுக்கும் ஒரு நாள் முழுவதும் பயிற்சி அளித்து அவர்களை குறுகிய நாட்களுக்குள் நல்ல முறையில் தயார்படுத்தி இருந்தனர்.
                            சாப்படும் நல்ல முறையில் போதுமான அளவு திருப்தியாக வழங்கினார்கள்.இது ஒரு பெரிய முயற்சி.இந்த பயிற்சியின் வழியாக எங்கள் பள்ளி மாணவிக்கும் நல்ல தொடர்பு திறன் வளர்ந்துள்ளது.பெரிய மேடையில் மாணவர்கள் பேசுவதற்கு வாய்ப்பு கிடைப்பது என்பது மிக பெரிய விஷயம் .அதனை ஏற்படுத்தி கொடுத்த தினமலர்க்கு வாழ்த்துக்கள்.நன்றிகள் பல.

                        பட்டசபை நடைபெற்ற அன்று திரு.நல்லகண்ணு அய்யா,திரு.ரவிகுமார் ஆகியோரின் உரையும் நன்றாக இருந்தது.இத்துணை மாணவர்களுக்கும் இப்படிதான் சட்டசபைநடைபெறும் , இப்படி எல்லாம் பேசலாம் என்பது நல்ல ஊக்கத்தை கொடுத்து உள்ளது.

                       எங்கள் பள்ளி மாணவி இப்போதுதான் முதல் முறையாக இந்த பயிற்சிக்காக சென்னை வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இது வரை அவர் சென்னை வந்தது கிடையாது.எனவே அரசு பள்ளி முதல் சர்வதேச பள்ளி வரை அனைவரையும் ஒன்றிணைத்து அழகாக நிகழ்ச்சி நடத்தியதற்கு பட்டம் குழுவினர் உள்ள தினமலர்க்கு நன்றிகள் பல.

லெ .சொக்கலிங்கம்,
தலைமை ஆசிரியர்,
சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை.
சிவகங்கை மாவட்டம்.
செல் : 9786113160
 

No comments:

Post a Comment