Saturday 18 June 2016

 சுட்டி விகடனின் மாணவ பத்திரிக்கையாளராக தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி தேர்வு ( தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இப்பள்ளி மாணவிகள் மாணவ பத்திரிக்கையாளராக தேர்ந்தெடுக்கபடுவது குறிப்பிடத்தக்கது )

           சுட்டி விகடன் சுட்டி ஸ்டார் போட்டியில் மாநில அளவில்  அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் தேர்வு பெற்றுள்ள ஒரே மாணவி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி மு.ராஜேஸ்வரி ஆவார்.



கோடை விடுமுறையில்   
மாநில அளவில் நடைபெற்ற சுட்டி விகடன் பேனா பிடிக்கலாம்,பின்னி எடுக்கலாம் போட்டியில்   அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி அளவில் தேர்வு பெற்றுள்ள ஒரே மாணவி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவி ராஜேஸ்வரி  சுட்டி ஸ்டாராக தேர்வு பெற்றதற்கு பள்ளி காலை வழிபாட்டு கூட்டதில் பாராட்டு.
 

                  சுட்டி விகடன் சார்பாக தமிழகம் முழுவதும் நடைபெற்ற பேனா பிடிக்கலாம் ,பின்னி எடுக்கலாம் என்கிற சுட்டி ஸ்டார் போட்டி புதுகோட்டை மையத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி சார்பாக 11 மாணவ,மாணவியர் கலந்து கொண்டனர்.கோடை விடுமுறையில் இப்போட்டி நடை பெற்றது.இப்போட்டியில்   மாணவர்களை ஆர்வமுடன் ஆசிரியை முத்து மீனாள் பங்கேற்க வைத்தார்.போட்டிக்கு கோடை விடுமுறையிலும் தயார் செய்த ஆசிரியைக்கும்,தேர்வான மாணவி ராஜேஸ்வரிக்கும்  பள்ளி காலை வழிபாட்டு கூட்டதில் தலைமை ஆசிரியர் லெ சொக்கலிங்கம்,ஆசிரிய,ஆசிரியை மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.இந்த ஆண்டும் முழுவதும் மாணவி நன்றாக சுட்டி விகடனுக்கு எழுதவும் ,தொடர்ந்து பல வெற்றி பெறவும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.சுட்டி விகடன் இதழுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

பின் குறிப்பு : கடந்த ஆண்டு இதே போட்டியில் பங்கு கொண்டு ராஜேஸ்வரிக்கு வெற்றி கிடைக்கவில்லை.மனம் தளராமல் இந்த ஆண்டு மீண்டும் விடா முயற்சி செய்து சுட்டி ஸ்டாராக தேர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment