Saturday 25 June 2016

                                                                   இன்றைய நிகழ்ச்சி
                                                                               (27/06/2016)

                                         கவனகம் மற்றும் நினைவாற்றல் பயிலரங்கம்

ஒரு கோடி ஆண்டுக்கு முன்பு உள்ள தேதியை சொன்னால் கிழமையை சொல்வார்

இடம் : சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி வளாகம் , தேவகோட்டை.

நாள் : 27/06/2106

நேரம் : காலை 9: 30 மணி

பயிற்சி அளிப்பவர் : திருக்குறள் தீலீபன் , காரைக்குடி .



இவரது சிறப்புகள் : 1) நினைவாற்றல் கலை - திருக்குறளில் முதல் சீரை சொன்னால், குறளை சொல்லுதல்,குறளை சொன்னால்,குறளின் எண்னை சொல்லுதல்,குறளின் எண்னை சொன்னால் ,குறளை சொல்லுதல் போன்ற பல்வேறு வகைகளில் நினைவாற்றலை வெளிப்படுத்துதல்

2) உதடு ஒட்டாத திருக்குறளை வாயில் உதடுகளில் குண்டூசி வைத்து கொண்டு சொல்வது இவரது சிறப்புகளில் ஒன்று 

3) கி.பி.1 முதல் கி.பி.1,00,000 ( கி.பி.ஒன்று முதல் கி.பி.ஒரு லட்சம்) ஆண்டுகள் வரையிலான தேதியைச் சொன்னால்,கிழமையை சொல்லுவார் 

4) 1 முதல் 50 பெயர்களை வரிசை எண்ணுடன் மாற்றி மாற்றி சொல்ல,அதை நினைவில் நிறுத்தி, 1 முதல் 50 வரை,எண்ணையும் அதற்கான பெயரையும் வரிசையாக சொல்லுவார் 

5) பிறந்த தேதி முதல் முக்கியமான நிகழ்ச்சிகள் வரை எந்த தேதியை சொன்னாலும்,உடன் கிழமையை சொல்வார் 

6) உலக நாடுகளின் பெயரை சொன்னால் ,அந்த நாட்டு தலை நகரத்தின் பெயரை சொல்லுவார்.

7) புதினாறு வகையான கவனகம் நிகழ்ச்சிகள் செய்வார் 
1) குறள் கவனகம்
2) பறவை கவனகம் 
3) எண் கவனகம் 
4) விலங்கு கவனகம் 
5) எழுத்து கவனகம் 
6) நூல் கவனகம் 
7) கூட்டல் கவனகம் 
8) மலர்க் கவனகம் 
9) பெயர்க் கவனகம் 
10) பழக் கவனகம் 
11) ஆண்டுக் கவனகம் 
12) நாடுகள் கவனகம் 
13) மாயக்கட்ட கவனகம் 
14)வண்ணக் கவனகம் 
15) தொடு கவனகம் 
16) ஒலிக் கவனகம் 
                                   இவை அனைத்தும் நினைவாற்றல் தொடர்பான பயிற்சியாகும் .இவற்றை அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு கற்று கொடுத்து நிகழ்வை நடத்த உள்ளார்.

அனைவரும் வருக.அனுமதி இலவசம்.

தங்களின் நிருபரை அனுப்பி உதவவும்.நன்றி.

No comments:

Post a Comment