Monday 16 May 2016


சென்னைக்குள் ஒரு ராஜஸ்தான்.




சென்னை நகரத்தின் மிக அருகில் ராஜஸ்தான் கிராமம் ஒன்று அமைந்துள்ளது.தனியார் அமைத்துள்ள இந்த கிராமத்தின் பெயர் சோக்கி தானி .இங்கு ராஜஸ்தான் போன்றே முழுவதும் அமைத்துள்ளனர்.இங்கு உள்ள அனைவரும் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள்.உள்ளே செல்லும்போதே நம்மை ராஜஸ்தான் உடையுடன் ட்ரம் அடித்து,நம்மையும் அடிக்க செய்து வரவேற்கிறார்கள் .பிறகு ரொட்டி கொடுக்கிறார்கள் .திருகை மாவு அரைப்பதை காண்பிக்கிறார்கள்.தயிர் கடைவதை காண்பிக்கிறார்கள்.பிறகு ராஜஸ்தான் பாடல் பாடி ஒரு நடனம் ஆடுகிறார்கள். பிறகு வரவேற்பு பானம் ஒன்றும்,சூடான போண்டா ஒன்றும்,நல்ல  டீ ஒன்றும் கொடுக்கிறர்கள் . பிறகு மர்க்க என்கிற இனிப்பும்,மீண்டும் பானம் ஒன்றும் தருகிறார்கள்.அதன் பிறகு மந்திர வித்தைகள் ,மண்ணில் பல்வேறு பொருள்கள் செய்வது,அதனை மீண்டும் காய வைத்து நமக்கே மீண்டும் தருவது , ஒட்டக சவாரி ( இது வித்தியாசமான அனுபவம்.முதலில் பயமாக இருந்தது.பிறகு இரண்டு நிமிடத்தில் பழகி விட்டது ), குதிரை சவாரி,மாட்டுவண்டி சவாரி,குதிரை வண்டி சவாரி,ஒட்டக வண்டி சவாரி என அனைத்தையும் அனுபவிக்கலாம்.பிறகு பல்வேறு குழு நடனம், 5முதல் 6 பானைகளை தலையில் வைத்து கொண்டு வேகமாக ஆடுவது, உடைந்த கண்ணாடியில் காலை வைத்து ஆடுவது, தீ சட்டியை வைத்து கொண்டு ஆடுவது,பணத்தை வைத்து ஆடிக்கொண்டே அதனை கண்ணால் எடுப்பது,இரண்டு டம்ளரில் காலை வைத்து ஆடுவது,ஆணியில் நின்று கொண்டு ஆடுவது,ஆடிக்கொண்டே கண்ணால் இரண்டு ப்லடுகளை எடுப்பது என பல்வேறு நடனங்களை பார்க்கலாம்.அந்த காலத்தில் இரும்பு அடிப்பது போன்று நாமே அடித்து பார்க்கலாம்.ராஜா காலத்து மணியை நாமே அடித்து பார்க்கலாம்.சேட்டுகள் அமர்வது போன்று இருக்கைகள்,நல்ல தலை மசாஜ் ,செம்பு பாத்திரத்தில் ஏலக்காய் போட்டு குளிர்ந்த நீர்,பொம்மலாட்ட நிகழ்ச்சி,ஓடி பிடித்து விளையாடும் வகையில் ஒரு வித்தியாசமான அறைகள் கொண்ட அமைப்பு,பெரிய தாயக்கட்டை கொண்ட பரமபத விளையாட்டு,சாய்  பாபா குகை,பெரிய முரசு அடிக்கும் வகையில் நல்ல ட்ரம் ,நல்ல குளீருட்டப்பட்ட அறையில் ராஜஸ்தான் உணவு என அனைத்துமே அருமை.நல்ல மெகந்தி பெண்கள் கையில் வரையயபடுகியது .

                                மாலை சுமார் 5 மணி முதல் இரவு 10 மணி வரை நாம் முழுவதும் ராஜஸ்தான் நகரத்துக்குள் இருப்பது போன்று அணைத்து இடத்திலும் வெளிட்சதிருக்கு அரிக்கேன் விளக்கில் வெளிச்சம் வரும் வகையில் அமைப்பு.மாலை எழு மணி அளவில் பார்த்தல் நம்மை சுற்றி முழுவதும் அரிக்கேன் விளக்காக காட்சி தருவது அருமை.அனைவரும் அவசியம் ஒரு முறை சென்று வாருங்கள் நண்பர்களே.





No comments:

Post a Comment