Thursday 21 April 2016



தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடு நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் ஒளி ஏற்றுதல் விழா 



தேவகோட்டை ​ ​ - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடு நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் பிரியா விடை பெறும் விழா பெற்றோர் ஆசிரியர் முன்னிலையில் ஒளி ஏற்றும் விழாவாக நடை பெற்றது.தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஒளியேற்று விழா அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி அளவில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
 
          ஒளி ஏற்றுதல் விழாவின் தொடக்கமாக எட்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தங்கள் பெற்றோர் ஆசிரியர் முன்னிலையில் வரிசைப்படி நின்றனர்.அவர்கள் முன்பாக 7ம் வகுப்பு மாணவர்கள் உட்கார்ந்து இருந்தனர்.7ம் வகுப்பு மாணவி  ராஜேஸ்வரி  ஆங்கிலத்தில் அனைவரையும் வரவேற்றார்.சுப நிகழ்ச்சியின் ஆரம்பமாக கடவுளை நினைத்தல் என்பது மரபு.அவ்வண்ணம் பள்ளியின் மாணவிகள் பார்கவி லலிதா,ராஜலெட்சுமி,பிரவீனா ஆகியோர் தனக்கே உரிய மெல்லிய குரலில் அபிராமி அந்தாதி பாடினார். மாணவிகளால் திருக்குறள் நடனம் மாணவிகள் சௌமியா ,சுமித்ரா,உமா மகேஸ்வரி ஆகியோரால் நடனம் ஆடப்பட்டது.நிகழ்ச்சி தொடங்கியது.வந்தோரை இன்முகத்துடன் வாழ்த்துவது தமிழர் பண்பாடு.அதனை செம்மைபடுத்தி ஏழாம் வகுப்பு மாணவன் ஜீவா  சர்வ சமய வாழ்த்துக்கள் பாடலை பாடினார்.திருவண்ணாமலை என்றாலே நம் நினைவிற்கு வருவது தீபம் தான்.அதனை நினைவு கூறும் விதத்திலும்,எட்டாம் வகுப்பு படித்து பிரியா விடை கொடுக்கும் மாணவியர் கல்விகடவுள் சரஸ்வதியை வணங்கி பள்ளி தலைமை ஆசிரியர்  லெ .சொக்கலிங்கம் தீப ஒளியை ஏற்ற அதனை 8ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆசிரியர்கள் உதவியுடன் கையில் மெழுகுவர்த்தி தீபம் ஏற்றினர்.8ம் வகுப்பு மாணவி தனம்  உறுதி மொழி வாசிக்க 8ம் வகுப்பு அணைத்து மாணவர்களும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.அதன் பிறகு ஒளியை அப்படியே அந்த பாரம்பரியம் மாறாமல் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்தி கொடுத்தனர்.7ம் வகுப்பு மாணவர்கள் தீபத்தை வாங்கி கொண்டனர்.7ம்வகுப்பு மாணவர்கள் சார்பில்  மாணவி பரமேஸ்வரி ஏற்புரை வழங்கினார்.சென்னை வேல்ஸ் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் முதன்மை முதல்வர் பூர்ண சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.பாரம்பரியம்  மிக்க இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. எட்டாம் வகுப்பு மாணவர்கள் வசந்த குமார்,யோகேஸ்வரன்,கண்ணதாசன் ஆகியோர் தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.விழாவினை மாணவி தனலெட்சுமி   தொகுத்து வழங்கினார்.விழாவிற்கான  ஏற்பாடுகளை ஆசிரியை சாந்தி செய்திருந்தார்.6ம் வகுப்பு மாணவன் ரஞ்சித்  ஆங்கிலத்தில் நன்றி கூறினார்.வந்திருந்த பெற்றோரும்,8ம் வகுப்பு மாணவ,மாணவியரும் பிரியா விடை நிகழ்ச்சியான ஒளி ஏற்று விழாவில்  ஆனந்த கண்ணீர் மல்க  விடை பெற்றனர்.


பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் ஒளி ஏற்றுதல் விழா நடைபெற்றது.
















 









No comments:

Post a Comment