Wednesday 9 March 2016

 வார வழிப்பாட்டில் முதல் மூன்று மற்றும் ஆறுதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா 

                            தேவகோட்டை-   தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர்க்கு தேவகோட்டை நகர சிவன்கோவிலில் நடைபெறும் வார வழிபாட்டுக் கூட்டதில் கலந்து கொண்டு பரிசு பெற்றதற்கு பாராட்டு விழா நடைபெற்றது.

 

                              விழாவில் ஆசிரியை சாந்தி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.    தேவகோட்டை நகர சிவன் கோவிலில் தொடர்ந்து பல வருடங்களாக வாரம் தோறும் வெள்ளிக்  கிழமையில் வாரவழிபாட்டுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.இதில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவிகள் சுமார்  16 பேர் கலந்து கொண்டனர்.வாரம் தோறும் நிகழ்ச்சியில் தவறாமல் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு வருடம்தோறும் சிவராத்திரி அன்று பரிசுகள் வழங்கி உற்சாகபடுத்தி வருகின்றனர்.இந்த வருடம் 9 மாணவர்கள் தொடர்ந்து அதிகமான வாரங்கள் சென்றதற்காக பரிசுகள் பெற்றனர்.முதல் மூன்று இடங்களை இப்பள்ளி மாணவர்களே பெற்று பரிசுகள் பெற்றனர்.இந்த வருடம் தொடர்ந்து அதிகமான  வாரங்கள் கலந்து கொண்ட இப்பள்ளி   6ம் வகுப்பு ராஜேஷ் ,8ம் வகுப்பு  தனம் ஆகியோர் முதல் பரிசும் ,7ம் வகுப்பு முத்தழகி இரண்டாம் பரிசையும்,2ம் வகுப்பு வெங்கட்ராமன் ,3ம் வகுப்பு முகேஷ் கண்ணா ஆகியோர் மூன்றாம் பரிசையும்,3ம் வகுப்பு ஜனஸ்ரீ நான்காம் பரிசையும் ,1ம் வகுப்பு ஜெயஸ்ரீ ஐந்தாம் பரிசையும்,6ம் வகுப்பு சஞ்சய்,4ம் வகுப்பு ஐயப்பன் ஆகியோர் ஆறுதல் பரிசையும் பெற்றனர். .பரிசுகள் பெற்ற மாணவிகளுக்கும்,கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும், பள்ளியின்  தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்,ஆசிரய ,ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.தொடர்ந்து அதிக மாணவ,மாணவியர் வார வழிபாட்டு கூட்டதில் கலந்து கொண்டு பரிசுகள் பெற முயற்சி எடுக்க வேண்டும் என்று விழாவில் மாணவரிகளிடம் கேட்டுகொள்ளப்பட்டது. நிறைவாக ஆசிரியை முத்து மீனாள் நன்றி கூறினார்.


பட விளக்கம் :  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர்க்கு தேவகோட்டை நகர சிவன்கோவிலில் நடைபெறும் வார வழிபாட்டுக் கூட்டதில் கலந்து கொண்டு பரிசு பெற்றதற்கு பாராட்டு விழா நடைபெற்றது.

No comments:

Post a Comment