Tuesday 3 November 2015

கூட்டு முயற்சியே நிறுவனத்தின் வெற்றி
சர்வதேச பயற்சியாளர் பேச்சு




தேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில்  ஆசிரியர்களுக்கான கூட்டு முயற்சி மற்றும் நிதி நிலை மேம்பாடு தொடர்பான பயிற்சி நடைபெற்றது.
                                           பயற்சிக்கு வந்தவர்களை ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .சர்வதேச பயற்சியாளர் ராமநாதன் ஆசிரியர்களுக்கு கூட்டு முயற்சி ,வேலையை மனப்பூர்வமாக செய்தல் போன்றவற்றின் மூலம் நிறுவனத்தை வெற்றி பாதையில் கொண்டு செல்வது தொடர்பாகவும், நிதி நிலை மேம்பாடு தொடர்பாக (எஸ்.ஜி .ஆர்.சி ) பங்கு சந்தை,தங்கம்,இடம் வாங்குதல்,ரொக்கம் கையிருப்பு எனும் பகுதிகளில் விரிவான விளக்கங்களும் ,நிதியை பாதுகாப்பது,கடன் வாங்கமால் எவ்வாறு நமது வாழ்க்கையை திட்டமிட்டு மேம்படுத்துவது தொடர்பாகவும் விரிவாக பயிற்சி அளித்தார்.பயிற்சியில்  சமூக ஆர்வலர் அடைக்கலராஜ்,பெற்றோர்கள் ஏரளமானோர் கலந்து கொண்டனர்.ஆசிரியை முத்து மீனாள் நன்றி கூறினார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் சர்வதேச பயற்சியாளர் ராமநாதன்  ஆசிரியர்களுக்கான கூட்டு முயற்சி மற்றும் நிதி நிலை மேம்பாடு தொடர்பான பயிற்சியினை கொடுத்த போது எடுத்த படம்.

No comments:

Post a Comment