Thursday 22 October 2015

 நெல்மணிகளில் "அ" கரம் எழுத வைத்தல் 
விஜயதசமி விழாவினையொட்டி மாணவர் சேர்க்கை
தேவகோட்டை-சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விஜயதசமி விழாவினையொட்டி மாணவர் சேர்க்கை நடைப் பெற்றது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் விஜயதசமி தினத்தன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முதன் முதலாக பள்ளியில் சேர்ப்பது தொன்று தொட்டு நடைமுறையில் இருந்து வருகின்ற வழக்கமாகும்.தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களை விஜயதசமி அன்று பள்ளியில் சேர்க்க வந்திருந்த பெற்றோர்களையும்,மாணவர்களையும் ஆசிரியை வாசுகி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை உரை நிகழ்த்தினார்.தலைமை ஆசிரியர்,ஆசிரிய,ஆசிரியைகள் புதிதாய் சேர்ந்த மாணவர்களை நெல்மணிகளில் "அ"கரம் எழுத வைத்து அ ,ஆ சொல்ல வைத்தனர்.ஆசிரியை கலாவள்ளி,முத்து மீனாள் புதிய மாணவர்களுக்கு திருக்குறள் வாசித்து பயற்சி அளித்தார்.மாணவிகள் தனம் ,சுமித்ரா,தனலெட்சுமி ஆகியோர் அபிராமி அந்தாதி சொல்ல வைத்தனர்.குழந்தைகளின் பெற்றோர்கள்திருநாவுக்கரசு,வசந்தி,கார்த்திகா,பிரியா ,ராஜ ராஜேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஆசிரியை  செல்வ  மீனாள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.ஆசிரியை  முத்து லெட்சுமி நன்றி கூறினார்.பள்ளி விடுமுறை நாளாக இருந்த போதும் ஆசிரியர்கள் வந்திருந்து மாணவர் சேர்க்கை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
பட விளக்கம்: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புதிதாய் சேர்ந்த மாணவர்களை பள்ளி ஆசிரியைகளால் நெல்மணிகளில் "அ"கரம் எழுத வைத்து மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

No comments:

Post a Comment