Tuesday 11 August 2015


 மத்திய அரசின் விஞ்ஞானிகளுடன் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல்


மாநில அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி அளவில் சிக்ரி துணை இயக்குனர் மற்றும் 3 மத்திய அரசின் விஞ்ஞானிகள் குழுவாக  வருகை தந்து செயல் முறை விளக்கம் கொடுத்ததுடன் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவிகளுடன் கலந்துரையாடியதும் இதுதான் முதல் முறை 





 நாட்டிலேயே முதன் முறையாக ஹைட்ரஜன் கண்டுபிடிப்பான் கருவி  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அறிமுகபடுத்தி விஞ்ஞானி பேச்சு

தேவகோட்டை: தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் விஞ்ஞான வளர்ச்சிப் பற்றி விழிப்புணர்வுபயிற்சி முகாம் சிக்ரி நிறுவன துணை இயக்குநர் ஜெயசந்திரன் தலைமையில் நடந்தது.தேவகோட்டை சேவுகன் கலை மற்றும் அறிவியல்     கல்லூரி முதல்வர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார்.
தலைமையாசிரியர் சொக்கலிங்கம் வரவேற்றார். சிக்ரி நிறுவன கண்டுபிடிப்பு பயன் பற்றி துணை இயக்குநர் ஜெயசந்திரன் பேசுகையில், "" அன்றாட வாழ்க்கை பயன்பெறும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளை செய்து வருகிறோம். 450 பொருட்கள் கண்டுபிடித்துள்ளோம். பாம்பன் பாலம், அதில் உள்ள ராடுகள் துருப்பிடிக்காமல் இருக்க பெயின்ட் கண்டுபிடித்து பயன்படுத்தப்படுகிறது. தற்போது துருப்பிடிக்காத ரயில் தண்டவாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டு திண்டுக்கல்லில் 5 கிமீ தூரம் பரிசார்த்த முறையில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பேட்டரிகளின் பல்வேறு நிலைகளிலும்,எடை குறைவாகவும் தயாரித்துள்ளோம். ஹைட்ரஜன் அளவை கண்டுபிடிக்கும் புதிய கருவி கண்டுபிடித்துள்ளோம். அயோடின் உப்பு,மின்முலாம் பூசுதல்,நிக்கல் குரோமியம்,காப்பர்,தங்க முலாம் பூசுதல் போன்றவை  காரைக்குடி சிக்ரி மூலம் தான் முதலில் கண்டுபிடிக்கபட்டது .எவர் சில்வர் நிக்கலில் குரோமியம் சேர்த்து,வாழ்க்கைக்கு இன்றியமையாத சிறிய தொழில் நுட்பங்களை எல்லாம் சிக்ரி கண்டுபிடித்து உள்ளது.தகுதிகேற்றாற்போல் ,அறிவிற்கு ஏற்றார் போல் மூளையில் ,மனதில் அறிவியல் தொடர்பாக சந்தேகங்கள் ஏற்படலாம்.அந்தந்த இடத்திற்கு ஏற்றவாறு சந்தேகங்களை தீர்த்து வைப்பதில் ஒரு கூட்டு முயற்சியாக செயல்படுவது பள்ளி மாணவர்கள் மத்தியில் உந்துதலை ஏற்படுத்துகிறது என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம். எதிர் காலத்தில் அறிவியல் துறையில் சிறந்து விளங்க, விஞ்ஞானிகளாக உருவாவதற்காகவே பள்ளி கல்லூரிகளில் விஞ்ஞானம் தொடர்பான விழிப்புணர்வு பயிற்சிகளை நடத்தி வருகிறோம், என்றார். விஞ்ஞானிகள் பரமசிவம்,முரளீதரன், முருகேசன் பேசினர். மாணவர்கள் ரஞ்சித்,ஜெகதிஸ்வரன் ,வசந்த குமார்,மாணவிகள் சக்தி,பரமேஸ்வரி,ராஜேஸ்வரி,காயத்திரி உட்பட பல மாணவ,மாணவிகள் கேள்விகள் கேட்டு பதில் பெற்றனர்.ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்.


பட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் விஞ்ஞானிகளுடன் மாணவர்கள் கலந்துரையாடி கேள்விகள் கேட்டு பதில் பெற்றனர்.


பட விளக்கம் :வாயு வெளி வந்தால் கண்டுபிடிக்க கூடிய ஹைட்ரஜன் கண்டுபிடிப்பான் என்கிற புதிய கருவியை மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி மையத்தின் துணை இயக்குனர் முதன்மை விஞ்ஞானி ஜெயச்சந்திரன் தலைமையிலான குழுவினரின் விஞ்ஞானிகள்  முதன் முறையாக தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களிடம் அறிமுகபடுத்தி அதனை விளக்கி பேசினார்.இக்கருவி தொடர்பான தகவல் வெளியிடபடுவது இங்குதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.












No comments:

Post a Comment