Sunday 5 July 2015

சுட்டி நிருபர்களுக்கு சென்னையில் பயிற்சி -- காக்கா  முட்டை பட இயக்குனர் திரு.மணிகண்டன் அவர்களுடன் ஜாலியான சந்திப்பு 





  சுட்டி விகடன் சுட்டி ஸ்டார் போட்டியில் மாநில அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் தேர்வு பெற்றுள்ள ஒரே மாணவி தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவி தனலெட்சுமிக்கு சுட்டி விகடன் சார்பில் சென்னையில் பயிற்சி -- காக்கா  முட்டை பட இயக்குனர் திரு.மணிகண்டன் அவர்களுடன் ஜாலியான சந்திப்பு


இது வரை தேவகோட்டையில் இருந்து மதுரை வரை செல்லாத மாணவி முதல் முறையாக இப்பள்ளியில் பயின்று வருவதால்  சுட்டி விகடன் போட்டியில் பங்கேற்று  வெற்றி பெற்று  சுட்டி விகடன் நிருபராக பயிற்சி எடுக்க சென்னை சென்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மாணவி மேலும் பல வெற்றிகள் பெற்று பல்வேறு நாடுகளுக்கு செல்ல வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
சுட்டி விகடன் நடத்திய பேனா பிடிக்காலம்... பின்னி எடுக்கலாம் !என்கிற தலைப்பில் தமிழகம் முழுவதும்  நடைபெற்ற சுட்டி ஸ்டார் 2015-2016 போட்டியில் காரைக்குடி மையத்தில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் 4 பேர் தேர்வாகி உள்ளனர்.அவர்களில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் (அரசு உதவி பெறும் பள்ளி )பள்ளி மாணவி மு.தனலெட்சுமி என்ற மாணவியும் தேர்வாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழக அளவில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியிலிருந்து இவர் ஒருவர் மட்டுமே தேர்வாகி உள்ளது பாராட்டுதலுக்கு உரியது.தமிழகம் முழுவதும் மொத்தம் 55 மாணவ,மாணவியர் தேர்வாகி உள்ளனர்.இவர்களுக்கு சுட்டி விகடன் சார்பாக பல கட்ட பயற்சி வழங்கப்பட உள்ளது. பரிசு பொருள்களும் வழங்கப்பட உள்ளன.ஆரம்ப நிகழ்ச்சி சென்னையில்காக்கா  முட்டை படத்தின் இயக்குனர் திரு.மணிகண்டன் மற்றும் அப்படத்தின் இளம் ஹீரோ நடிகர்கள் உடன்  28/06/2014 அன்று நடைபெற்றது.இவ்வாறு தேர்வு ஆனவர்கள் வருடம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் சார்பாக கட்டுரைகள் எழுதலாம்.படத்துடன் இவர்கள் பெயர் மற்றும் பள்ளியின் பெயர் வெளியவதுடன் குறிப்பிட்ட தொகையும்  பரிசாக  கிடைக்கும்.வெற்றி பெற்ற மாணவியையும் ,பயிற்சிக்கு  அழைத்து சென்ற  ஆசிரியை செல்வ மீனாள் அவர்களையும் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். பயிற்சியில் வழங்கப்பட்ட பரிசு பொருள்களுடன் காலை வழிபாட்டு கூட்டதில் மாணவிக்கு வழங்கப்பட்டது.தொடர்ந்து இப்பள்ளிக்கு ஊக்கம் தந்து கொண்டிருக்கும் சுட்டி விகடன் குழுமத்திற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.


No comments:

Post a Comment