Saturday 27 June 2015


தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அயர்லாந்து வாழ் ஆராயட்சியாளருடன் மாணவ,மாணவியர் கலந்துரையாடல் நிகழ்ச்சி!
அயர்லாந்து கல்வி முறை பற்றி விளக்கம் !!



   
          "அயர்லாந்து  மக்களிடம்  மனித நேயம் எப்படி இருக்கிறது?" அயர்லாந்து  வாழ் இந்தியரிடம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்  நடுநிலைப் பள்ளி மாணவி  ருசிகர கேள்வி

                        சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியருடன் அயர்லாந்து  வாழ் இந்தியரான ஆராயாட்சியாளர் குமாரிடம்   அயர்லாந்து கல்வி தொடர்பாக  கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது..
                               தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளிக்கு  அயர்லாந்தில் வசிக்கும் காரைக்குடியை சார்ந்த இயற்பியல் துறை ஆராய்ச்சியாளர் குமார்  வருகை தந்து   அயர்லாந்து கல்வி முறை தொடர்பாகவும்,பள்ளிகளின் வடிவமைப்பு தொடர்பாகவும்,அயர்லாந்து தொடர்பாகவும் மாணவ,மாணவியருடன் கேள்விகள் கேட்டு கலந்துரையாடும் நேரடி  நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். 
               பெர்னாட்சா படித்த கல்லூரி
                             இந்நிகழ்ச்சியில் அயர்லாந்த் டூயூப்லிங் மாகாண பல்கலைகழகத்தில் சோலார் மற்றும் கம்ப்யூட்டர் சிலிக்கான் பொருட்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் ஆராய்ச்சியாளர்  குமார் பேசுகையில், அயர்லாந்தில் ஒரே நாளில் 4 வகையான தட்பவெப்ப நிலை நிலவுகிறது. தொழிற்சாலைகளில் வெளிவரும் புகை நம்நாட்டை போல் வானத்தில் செல்லாமல் மண்ணுக்கு கீழே கார்பனாக செலுத்துகின்றனர். வாகன புகையை தவிர்க்க சைக்கிளை பயன்படுத்துகின்றனர். வீடு கட்டுதல் உட்பட எவ்வித கட்டுமான பணியாக இருந்தாலும் அரசு விதிப்படி தான் கட்டவேண்டும். இதுவே சுற்றுச்சூழல் சுத்தமாக இருக்க காரணம். குழந்தைகள் 16 வயது வரை தான் பெற்றோர் பாதுகாப்பில் இருப்பர். அதற்கு பின் வேலைக்கு சென்று தொடர்ந்து படிப்பார்கள். அங்கு யாரும் நகை அணியமாட்டார்கள். இதன் காரணமாகவே நகை கடையே இல்லை. மாணவர்கள் ஆளுக்கொரு மரக்கன்றுகளை வளர்க்கவேண்டும். இதை செய்தால் சுற்றுப்புறச்சூழலை தூய்மையாக வைப்பதோடு, புவி வெப்பமாதலை தவிர்க்கலாம், புகழ் பெற்ற மேதைகளில் ஒருவரான பெர்னாட்சா நான் ஆராய்ச்சி செய்யும் இந்த பல்கலை கழகத்தில் உள்ள டிர்னிட்டி கல்லூரியில் தான் படித்துள்ளார்.அரசு பள்ளிகளும் அதிகம் உள்ளது என்றார்.  அயர்லாந்து  கல்வி முறை தொடர்பாகவும் ,அயர்லாந்தில்   உள்ள பள்ளிகளின் நிலை தொடர்பாகவும்,கல்லூரி தொடர்பாகவும் முனைவர்  குமார் விளக்கமாக எடுத்துக் கூறினார்.மாணவர்கள் எவ்வாறு சுத்தமாக பள்ளியை வைத்து உள்ளனர்,பள்ளியில் என்ன,என்ன பாடம் நடத்துகின்றனர் ,அயர்லாந்தின்  கல்வி முறை எவ்வாறு உள்ளது போன்றவற்றை தெளிவாக எடுத்துக்கூறினார் . 

 மாணவ , மாணவியரின் கேள்விகளுக்கு  பதில்

 பரமேஸ்வரி :அயர்லாந்தில் மனித நேயம் எப்படி உள்ளது ?
  ஆராய்ச்சியாளர் குமார் : உலகத்தில் அமைதியை நிலை நாட்டுவதில் முன்னோடிகள்.போர் என்பதே கிடையாது.


சௌமியா : அயர்லாந்தில் தங்களுக்கு பிடித்த இடம் எது?
ஆராய்ச்சியாளர் குமார் : நான் வசிக்கும் டப்ளிங் மிகவும் பிடித்த இடம்.நகரமே கிராமம் போல் அமைதியாக இருக்கும்.நகரத்தை திட்டமிட்டு அரசாங்கமே முறைபடுத்தி வைத்துள்ளது.


பரத்குமார் :அதிகமாக கிடைக்கும் சாப்பாடு எது?
ஆராய்ச்சியாளர் குமார் :தட்பவெப்ப நிலை மாறிக் கொண்டே இருக்கும்.சூரிய ஒளி அதிகமாக இருக்காது.அதனால் அங்கு மண்ணுக்குள் விளையும் உருளை,காரட் போன்றவை அதிகம் கிடைக்கும்.அசைவ சாப்பாட்டை அதாவது பன்றிக்கறி,மாட்டுக்கறி போன்றவற்றை விரும்பி சாப்பிடுவார்கள்.

தனலெட்சுமி :நீங்கள் எங்கு கல்லூரி ,பள்ளி படிப்பை முடித்தீர்கள்? ஏன் அயர்லாந்து நாட்டுக்கு  சென்றீர்கள் ?
 ஆராய்ச்சியாளர் குமார் :காரைக்குடியில் பள்ளி படிப்பையும்,தேவகோட்டையில் கல்லூரி படிப்பையும் முடித்து முனைவர் பட்டதை அயர்லாந்த் டூயூப்லிங் மாகாண பல்கலைகழகத்தில் இயற்பியல் துறையில் முடித்து,தற்போது அங்கேயே சோலார் மற்றும் கம்ப்யூட்டர் சிலிக்கான் பொருட்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன்.

காயத்ரி : எல்லாக் காய்களும் அங்கு கிடைக்குமா?
 ஆராய்ச்சியாளர் குமார் : தக்காளி ,வெங்காயம் அங்கு கிடைக்காது.மண்ணுக்கடியில் விளையும் காய்கறிகள்தான் அதிகம் கிடைக்கும்.

ஸ்ருதி : அங்கு அரசு பள்ளிகள் உண்டா ? பள்ளி வேலை நேரம் எப்படி?
ஆராய்ச்சியாளர் குமார் :எல்லாமே பெரும்பாலும் அரசு பள்ளிகள்தான்.இங்கே உள்ளது போன்றது தான் பள்ளி வேலை நேரம் ஆகும்.

ஆகாஷ் குமார் :தொழில் துறை எவ்வாறு உள்ளது?
 ஆராய்ச்சியாளர் குமார் :மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள் பெரும்பாலும் உள்ளது.

தனம் :  தங்க நகை கடை உள்ளதா ?
 ஆராய்ச்சியாளர் குமார் :அங்கு யாரும் தங்க நகை அணிய மாட்டார்கள்.எனவே நகை கடை எதுவும் கிடையாது.

பிரவினா : அய்ரலாந்தில் எந்த மொழி பேசுகிறார்கள்?
 ஆராய்ச்சியாளர் குமார் : ஆங்கிலம்தான் பேசுவார்கள்.

உமா மகேஸ்வரி :அங்கு இங்கு உள்ளது போல் கோயில்கள் உள்ளதா ?
ஆராய்ச்சியாளர் குமார் : இந்து  கோயில்கள் கிடையாது.தேவாலயங்கள் உண்டு.

 பிரவின் :வாகனங்கள் அதிகமாக உள்ளனவா?
ஆராய்ச்சியாளர் குமார் : சுற்றுச் சுழல் மாசுபடும் என அதிகமாக கார் ஓட்டுவது இல்லை.பெரும்பாலும் மிதி வண்டியிலேயே செல்வர்.

சண்முகம் : அயர்லாந்தில் புகை வண்டி உண்டா?
ஆராய்ச்சியாளர் குமார் : புகை வண்டி உண்டு.

சௌமியா : அங்கே புகழ் பெற்ற இடங்கள் எவை ?
ஆராய்ச்சியாளர் குமார் : டுப்ளிங் ,டைட்டானிக் கப்பல் உருவான இடம் ,மன்னால கட்டிய கோட்டை,பெர்னாட்சா படித்த கல்லூரியான டிரினிட்டி போன்றவை ஆகும்.

ஜெகதீஸ்வரன் : அங்கு முதன்மை தொழில் எது ?
ஆராய்ச்சியாளர் குமார் : விவசாயம்,குதிரைஎற்றம்  ஆகும்.

ஜீவா : தீவில் போக்குவரத்து எவ்வாறு நடைபெறும் ?
ஆராய்ச்சியாளர் குமார் : டிய்பு மூலமாக சுரங்கபாதை அமைத்து அதன் வழியாக தீவில் போக்குவரத்து நடைபெறும்.

                                 என்பன போன்ற பல்வேறு கேள்விகளை   கேட்டு  தகவல்களாக பதில்கள் பெற்றனர். கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஆசிரியை முத்துலெட்சுமி ஏற்பாடு செய்திருந்தார். அயர்லாந்து  வாழ் இந்தியருடன் உரையாடிய உடன் மாணவர்கள் மிகுந்த சந்தோசம் அடைந்தனர்.
                                            7ம் வகுப்பு மாணவி முத்தழகி நிகழ்ச்சி குறித்து பேசுகையில், அயர்லாந்து  பற்றியும் ,அங்குள்ள மக்கள் பற்றியும்,பள்ளி கல்வி பற்றியும் நிறைய தகவல்கள் கிடைக்க பெற்றோம்.நாங்களும் கண்டிப்பாக பிற்காலத்தில் நன்றாக படித்து அயர்லாந்து போன்ற பல்வேறு நாடுகளுக்கு  சென்று வருவோம் என்ற உறுதிமொழியை எங்கள் பள்ளியின் சார்பாக இப்போது தெரிவித்துகொள்கிறேன் என்றார்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியருடன் அயர்லாந்து வாழ் இந்தியரானஆராய்ச்சியாளர் குமார் அயர்லாந்து கல்வி முறை தொடர்பாக மாணவ,மாணவியருடன் கலந்துரையாடினார்.

No comments:

Post a Comment