Friday 27 February 2015

 
  சென்னை கற்றல் கற்பித்தல் புதுமை மற்றும் கல்விசார் கணினி வளங்கள் சேகரித்தல் பணிமனை தொடர்பான எனது அனுபவங்கள்




        சென்னையில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற கற்றல் கற்பித்தல் புதுமை மற்றும் கல்விசார் கணினி வளங்கள் சேகரித்தல் பணிமனையில் சில காட்சிகள்.இப்பணிமனையில் கலந்து கொண்டதன் மூலம் பல்வேறு தகவல்களை தெரிந்து கொண்டேன்.இதனை எனக்கு தெரிந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் தெரிவித்து இன்னும் சிறப்படைய செய்வேன்.
                 தமிழக பள்ளி மற்றும் ஆசிரியர்களின் கற்றல் மற்றும் பல்வேறு கல்வி சார்ந்த திறமைகளை,புதிய முயற்சிகளை உலகமெங்கும் அறிய செய்ய தமிழக அரசு எடுத்து வரும் இது போன்ற பணிமனைகள்  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு அருமையான ஓர் வரபிரசாதம் ஆகும்.

                     பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் DIET விரியுரையாளர் திரு.ஜூலியஸ் அவர்கள் பயற்சியில் கலந்து கொண்ட அனைவரும் நிறைய புதிய விசயங்களை அறிந்து கொள்ளும் வகையில் எடுத்து விளக்கினார்கள் .மேலும் திரு.ரெஜி அவர்களும் காணொளி வடிவமைத்தல் குறித்து தெளிவாக எடுத்து கூறினார்கள்.டைரக்டர் திரு.ஜெரோம் அவர்கள் அருமையான முறையில் அவரது கருத்துக்களை நகைச்சுவை (குறைகளை கூட  மனது புண்படாதவண்ணம் ) ததும்பும் வண்ணம் சிறப்பான முறையில் எடுத்து கூறினார்கள்.படங்களில் நடிப்பு எப்படிஎடுக்கபடிகிறது  என்பதை சூப்பராக நேரடியாக பார்க்க முடிந்தது.அதற்கு உறுதுணையாக இருந்த அவரது உதவியாளர்களுக்கும் நமது நன்றிகள்.
                        இதுவரை முகநூல் மூலம் மட்டுமே நான் அறிந்த பல நண்பர்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த சந்தோசத்தை அளித்தது.எங்களுக்கு என ஒதுக்கப்பட்ட டீமில் எங்களது ஒருங்கிணைப்பாளர் தலைமை ஆசிரியை சப்ரன் பானு அவர்களும் நன்றாக எங்களது கருத்துக்களை தெரிவிக்க ஊக்கப்படுத்தினார்கள்.எங்களது டீமில் இருந்த திருவள்ளூர் ,தேனி DIET விரியுரையாளர்கள் ,இடைநிலை ஆசிரியர்கள்,ஆங்கில பட்டதாரி ஆசிரியர்கள் என அனைவரும் ஆர்வமுடன் பணிமனையில் பங்கேற்று அனைவரது படைப்புகளையும் கேட்டறிந்தனர்.அது மிகவும் சந்தோசமாக இருந்தது.
                       பணிமனையில் அனைவரையும் ஊக்கபடுத்தி நிறைய புதிய தகவல்களை தெரிவித்த ஆசிரியை சித்ரா  அவர்களுக்கும்,  பணிமனையில் என்னை கலந்து கொள்ள ஊக்கபடுத்திய ஆசிரியை உமா அவர்களுக்கும்,பணிமனைக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் அன்பழகன்,கருணை தாஸ் ,ஜாக் நாத்,ராய் உட்பட இன்னும் அனைத்து ஒருங்கினைப்பாளர்களுக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
                                 இந்த பணிமனையில் பெற்ற பயிற்சி மற்றும் அனுபவத்தின் மூலம் கட்டாயம் நானும் சிறப்பான முயற்சிகள் எடுத்து கல்வி சார்ந்த விசயங்களில் புதுமைகள் செய்து அதனை கணினி உடன் தொடர்பு படுத்துவேன் என்றும் ,அதன் மூலம் அதற்குரிய விருதுகள் கிடைக்கும் என்கிற நம்பிக்கையை இந்த பணிமனை எனக்குள் ஓர் உந்துதலை ஏற்படுத்தி உள்ளது .இதனை பிற ஆசிரியர்களிடமும் கொண்டு சென்று அவர்களையையும் புதுமைகள் செய்யவைத்து அவர்களுக்கும் விருதுகள் கிடைக்க ஊக்கபடுத்துவேன் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன்.

லெ .சொக்கலிங்கம்.
தலைமை ஆசிரியர் ,
 சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி,
தேவகோட்டை
    

No comments:

Post a Comment