Monday 8 December 2014

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் (அரசு உதவி பெறும் பள்ளி) நடுநிலைப் பள்ளி விழாவில் தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லுரி (அரசு உதவி பெறும் கல்லுரி) முதல்வரிடம், "என்னை போன்று அரசு பள்ளிகளில்  8வது படிக்கும் மாணவர்கள் பிற்காலத்தில் உங்களை போன்று கல்லுரி முதல்வர் ஆவது எப்படி?"  மாணவியின்  ருசிகர கேள்வியும் அதற்கு கல்லூரி முதல்வரின் பதிலும் .



      தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற ரோட்டரி முப்பெரும் விழாவில் தேவகோட்டை சேவுகன்  அண்ணாமலை கல்லுரி முதல்வர் சந்திர மோகன்,ரோட்டரி தலைவரும் பேராசிரியருமான முருகன்,மருத்துவர் செந்தில்குமார் ஆகியோர்  உடன் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவ,மாணவியர் நடத்திய கலந்துரையாடல்

   நந்தினி: கல்லூரி முதல்வர் ஆவதற்க்கு என்ன படிக்க வேண்டும்?
 முதல்வர்:முதலில் பி.ஜி.கோர்ஸ்  முடிக்க வேண்டும்.பிறகு முனைவர் பட்டம் பெற வேண்டும்.அதன் பிறகு கல்லூரி பேராசிரியராக பணிக்கு வந்து கல்லூரி முதல்வர் ஆகலாம்.

பரமேஸ்வரி :தாங்கள் சேவுகன் அண்ணமலை கல்லூரிக்கு முதன் முதலில் பணிக்கு வந்தபோது என்ன நினைதிர்கள் ?
 முதல்வர்:கல்லுரி பணிக்கு முதன் முதலில் வந்த உடன் உங்களை போன்ற கல்லுரி மாணவர்களை நன்றாக கல்வி கற்றுகொடுத்து அவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்து நானும் கல்லுரி  முதல்வர் போன்ற பெரிய பணிகளுக்கு செல்ல வேண்டும் என குறிக்கோள் நிர்ணயத்து கொண்டேன்.அதே போல் அந்த பணிக்கு வந்து உள்ளேன்.நீங்களும் வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோளை நிர்ணயம் செய்து அதனை அடைய வேண்டும்.என பதில் கூறினார்.

காயத்ரி :தாங்கள் அன்னை நன்றாக திருக்குறள் சொல்வாதாக சொன்னிர்கள் அதனை எங்களுக்கு சொல்லி காண்பியுங்கள் என கேட்டார்.
 முதல்வர்:என் என்ப ஏனை எழுத்தென்ப என்கிற குறளை அழாகாக ராகம் வர இசையோடு பாடி காட்டி அதற்கான பொருள் சொன்னார்.மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ரோட்டரி தலைவர் முருகனிடம் சமயபுரத்தாள் :தாங்கள் எவ்வாறு ரோட்டரி க்கு வரவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது என கேட்டார்.
தலைவர் முருகன்: உங்களை போன்று படிக்கும்  காலத்தில் இது போன்ற விழாக்களில் கலந்து கொண்டு அவர்கள் செய்யும் சேவையை பார்த்து நாமும் பிற்காலத்தில் இது போன்று செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் தற்போது ரோட்டரி என்கிற அமைப்பின் மூலாமாக சேவை செய்து வருகிறேன் என்றார்.நீங்களும் பிற்காலத்தில் இது போன்று சேவைகள் செய்ய முன்வரவேண்டும் என கேட்டு கொண்டார்.

மருத்துவர் செந்தில்குமார் அவர்களிடம் ராஜேஸ்வரி : மஞ்சள் காமாலை நோய் எவ்வாறு வருகிறது ?
மருத்துவர் செந்தில்குமார்:மஞ்சள் காமாலை நோய்  பல்வேறு காரணங்களால் வருகிறது .நாம் தான் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து நம் உடலை பாதுகாத்து கொள்ள வேண்டும்.

மாணவி ரூபா :கண்வலி எதனால் ஏற்படுகிறது?
மருத்துவர்  செந்தில்குமார்:கண்வலி தட்ப வெப்பநிலை மாறும்போது அதிக சூடு அல்லது குளிர் காரணமாக வருகிறது.கண்வலி வந்தவர்களின் துணிகளை பயன்படுத்துவதால் மட்டுமே அது பரவும். கண்வலி வந்தவர்களை பார்ப்பதனால் கண்வலி பரவாது.

மாணவன்  நடராஜன் :இரத்த சுழற்சி என்றால் என்ன?
மருத்துவர் செந்தில்குமார்:இரத்த சுழற்சி என்பது இருபதனால்தான் நாம் உயிர் வாழ முடிகிறது.இரத்த சுழற்சி பற்றிய தகவல்கள் மேல் வகுப்புகளில் உள்ள பாடங்களில் தெளிவாக இருக்கும்.
                              இவ்வாறு மாணவர்களின் கேள்விகளுக்கு சேவுகன்  அண்ணாமலை கல்லுரி முதல்வர் சந்திர மோகன்,ரோட்டரி தலைவரும் பேராசிரியருமான முருகன்,மருத்துவர் செந்தில்குமார் ஆகியோர் பதில் அளித்தனர்.

No comments:

Post a Comment