Friday 7 November 2014

தேவகோட்டை  புத்தக திருவிழாவில் சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்



சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியர் தேவகோட்டை பதிப்பாளர் சங்கம் சார்பில் நடந்து வரும் புத்தக திருவிழாவை
பார்வையிட்டு புத்தகங்களை வாங்கி சென்றனர்.
                              தேவகோட்டையில் பதிப்பாளர் சங்கம் சார்பில் நடந்து வரும் புத்தக திருவிழா பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.இதில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் மாணவ,மாணவியர் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் புத்தகத் திருவிழாவை காண சென்றனர்.ஆசிரியைகள் முத்து மீனாள் ,முத்து லெட்சுமி,செல்வ மீனாள் ,ஆசிரியர் ஸ்ரீதர் ஆகியோர் அழைத்து சென்றனர்.மாணவ,மாணவியர் மிகுந்த மகிழ்ச்சியுடன் புத்தக திருவிழா ஸ்டால்களை பார்வையிட்டு புத்தகங்களை வாங்கி சென்றனர்.
                                புத்தக திருவிழாவை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிசெல்கின்றனர்.நவம்பர் 9ம் தேதி வரை நடக்கும் புத்தகக் கண்காட்சியில் அறிவுப் பசியைப் போக்க அன்றாடம் மாலையில் தமிழ் சான்றோர்களின் சொற்பொழிவு மற்றும் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.ஐந்து ரூபாய் முதல்  5 ஆயிரம் வரையிலான புத்தகங்கள் விற்பனையாகி கொண்டிருக்கின்றன.
                               சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேலான தலைப்புகளில் தமிழ்,ஆங்கிலம் மற்றும் இதர மொழிகளில் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.கலை,அறிவியல்,கலாசாரம்,பண்பாடு,ஆன்மிகம்,ஓவியம்,அரசியல்,இலக்கியம்,கவிதைகள்,குழந்தைகள் விரும்பும் கதைப் புத்தகங்கள்,சமையல்,ஜோதிடம்,புராண இதிகாச வரலாற்றுக் கதைகள் என அணைத்து எழுத்தாளர்களின் அற்புதமான படிப்புகள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன.
.

பட விளக்கம்:IMJ - 2674,2676 தேவகோட்டையில் நடந்து வரும் பிருமாண்டமான புத்தக திருவிழாவில் ஸ்டால்களில் புத்தகங்களை தேர்வு செய்ய ஆர்வத்துடன் குவிந்துள்ள தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மணவ,மாணவியர்.





No comments:

Post a Comment