Saturday 18 October 2014

பள்ளிகளுக்கு தீபாவளி விடுமுறை எத்தனை நாட்கள்? 
 
பள்ளிகளுக்கு தீபாவளி விடுமுறை தொடர்பாக விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறுகையில்
 
                    தீபாவளி பண்டிகை புதன்கிழமை வருவதால் மாணவர்களுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை விடுவது என்ற குழப்பம் பள்ளி தலைமையாசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பள்ளிகளுக்கு தீபாவளி விடுமுறை தொடர்பாக விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறுகையில், “அனைத்து பள்ளிகளுக்கும் தீபாவளி பண்டிகைக்கான விடுமுறையாக அக். 22ம் தேதி (புதன்கிழமை) மட்டும் விடப்படும். தீபாவளிக்கு முன் மற்றும் பின் (செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை) நாட்களை தலைமையாசிரியர்கள் விடுமுறையாக விட்டுக் கொள்ளலாம். அவ்வாறு விடப்படும் விடுமுறை நாட்களை உள்ளுர் விடுமுறையாக கருத்தில் கொண்டு வரும் அடுத்தடுத்த வாரங்களில் சனிக்கிழமை நாட்களில் பள்ளிகள் வைத்து ஈடு செய்யவேண்டும்,” என்றார்.

No comments:

Post a Comment