Saturday 18 October 2014

மொபைலுக்கு வரும் தேவையற்ற வர்த்தக
அழைப்பு, எஸ்எம்எஸ்களை தவிர்க்கலாம்
இந்திய தொலை தகவல் தொ டர்பு முறைப்படுத்தும் அதிகார அமைப்பு (டிராய்) மொபைல் நுகர்வோருக்காக பல்வேறு விதிமுறைகளையும், வசதி களையும் செய்து தந்துள்ளது.
இதன்படி தேவை இல்லாத வர்த்தக அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ்களை தவிர்க்க வசதி செய்யப் பட்டுள்ளது.
தேவை இல்லாத வர்த்தக அழைப்புகளை தவிர்க்க 1909 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அல்லது போன் செய்து கீழ்கண்ட இரண்டு பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் பதிவு செய்ய வேண்டும்.
முழுவதுமாக தடுக்கப்படும் பிரிவு:
எந்த ஒரு வர்த்தக அழைப்புகளும், எஸ்எம்எஸ்களும் வராமல் தடுக்க 1909 என்ற எண்ணிற்கு ஷிஜிகிஸிஜி என்று டைப் செய்து எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
பகுதியாக தடுக்கப்படும் பிரிவு:
இதன்மூலம் தேர்ந்தெடுக்கும் பிரிவை தவிர மற்ற எல்லா வர்த்தக அழைப்புகளும் வராமல் தடுக்கலாம். 1909 என்ற எண்ணிற்கு ஷிஜிகிஸிஜி என டைப் செய்து கீழே கொடுக்கப்பட்டிருக்கும் 7 பிரிவுகளில் இருந்து தேவைக்கேற்ப அதற்குரிய எண்ணை சேர்த்து எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
7 பிரிவுகள்:
1. பாங்கிங்/இன்ஷூரன்ஸ்&கிரெடிட்கார்டு, 2. ரியல் எஸ்டேட், 3. கல்வி, 4. உடல்நலம், 5. நுகர்பொருள் மற்றும் வாகனம், 6. தொலைத்தொடர்பு/பொழுதுபோக்கு/தகவல் தொழில் நுட்பம், 7. சுற்றுலா.
பதிவு செய்த பிறகு 24 மணிநேரத்திற்குள் பதிவு எண் கொடுக்கப்படும். பதிவு செய்த 7 தினங்களுக்குள் இது செயலாக்கத்திற்கு வரும். அதன்பிறகும் வர்த்தக அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் வந்தால் உங்கள் மொபைல் நிறுவனத்திடம் புகார் செய்யலாம்.

No comments:

Post a Comment