Wednesday 24 September 2014

TET ஆசிரியர் நியமனம் : இடைக்கால உத்தரவு ரத்து - மதுரை உயர்நீதிமன்றம்

ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையயை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தொடரப்பட்ட மனுவை விசாரித்ததனிநீதிபதி, ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைக்காலத்தடை விதித்தார். 
இதற்கிடையில் இவ்வழக்கு தொடர்பான 45க்கும் மேற்பட்ட மனுக்களை சென்னை உயர்நீதி மன்றம் கடந்த 22.9.2014 அன்று தள்ளுபடி செய்தது.இதனை தொடர்ந்து தனிநீதிபதியின் உத்தரவிற்கு எதிராக, சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில், தமிழக அரசு சார்பி்ல், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதி, இடைக்காலத்தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதனால் தேர்வான ஆசிரியர்கள் பணியில் சேர்வதற்கான தடை விலகியது.மேலும் ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களுக்கு பணிநியமனம ஆணை பற்றிய அறிவிப்பையும்,பணியில் எப்போது சேரவேண்டும் என்ற அறிவிப்பையும் அரசு விரைந்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment