Friday 15 August 2014

                                                      சுதந்திர தின விழா 

         தேவகோட்டை -ஆக -சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது.


  
                                            விழாவில் வந்திருந்த   அனைவரையும் மாணவி சொர்ணம்பிகா  வரேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் விழாவிற்கு தலைமை தாங்கினார் .தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லுரி முன்னாள் முதல்வர் ஆர் .எம்.சொக்கலிங்கம் கொடி ஏற்றி பேசுகையில்,தேசியக்கொடியின் சிறப்புகளை சொன்னதுடன்,சுதந்திர நாளில் அனைவரும் மனித நேயத்துடன் வாழ்வதற்கு சிறு வயதிலிருந்தே பழகி கொள்ள வேண்டும் என்பதை சிறு கதை சொல்லி புரியவைத்தார். சுதந்திர தினம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை மாணவர்களிடம் கேட்டு அதற்கு விளக்கம் கொடுத்தார்.இரண்டாம் வகுப்பு மாணவி கீர்த்தியா ஆங்கிலத்தில் உரை ஆற்றினார்.எட்டாம் வகுப்பு மாணவி பூஜா,ஏழாம் வகுப்பு மாணவி சுமித்ரா ஆகியோர் நடனம் ஆடினார்கள்.எட்டாம் வகுப்பு மாணவர் நடராஜன் சுதந்திர தின கவிதை வாசித்தார்.விழாவில் மாணவ,மாணவியர்க்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
                                         மாணவன் நவீன்குமார் நன்றி சொல்ல விழா இனிதே நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியை செல்வ மீனாள் செய்திருந்தார்.
 
    பட விளக்கம் :தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் சுதந்திர தின விழாவின்போது மாணவிகள் நடனம் ஆடினார்கள்.உடன் ஓய்வு பெற்ற கல்லுரி முதல்வர் சொக்கலிங்கம்,பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம்

 பட விளக்கம்:         தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் சுதந்திர தின விழாவின்போது ஆங்கிலத்தில் உரைஆற்றிய   கீர்த்தியா என்ற மாணவிக்கு  ஓய்வு பெற்ற கல்லுரி முதல்வர் சொக்கலிங்கம் பரிசு வழங்கினார் .  உடன் பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம்

 பட விளக்கம் :     தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் சுதந்திர தின விழாவின்போது  கவிதை வாசித்த மாணவன் நடராஜனுக்கு  ஓய்வு பெற்ற கல்லுரி முதல்வர் சொக்கலிங்கம் பரிசு வழங்கினார் .  உடன் பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் 

                               

No comments:

Post a Comment