Monday 26 May 2014

அரசு இசைப்பள்ளியில்மாணவர் சேர்க்கை: இன்று முதல் துவக்கம்



திருச்சி: அரசு இசைப்பள்ளியில் சேர விரும்புவோர் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ அறிக்கை: திருச்சி மூலத்தோப்பில் உள்ள அரசு இசைப்பள்ளியில் குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகியன பயிற்றுவிக்கப்படுகிறது. இதில், 12 முதல் 25 வயது வரை மாணவ, மாணவியர் அனுமதிக்கப்படுகின்றனர்.
குரலிசை, வயலின், மிருதங்கம், பரதநாட்டியத்துக்கு, ஏழாம் வகுப்பு கல்வித்தகுதி. தேவாரம், நாதசுரம் ஆகிய கலைகளுக்கு ஆரம்ப கல்வி தகுதியில் சலுகை உண்டு. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முழுநேர பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆண்டுக்கு, 150 ரூபாய் கட்டணம். மாதந்தோறும் ஊக்கத்தொகையாக 400 ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் வெளியூர் மாணவ, மாணவிகள் இலவசமாக தங்க அரசு விடுதிகள் உள்ளன. உள்ளூர்வாசிகளுக்கு பயணக்கட்டணமும், 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச சைக்கிளும் வழங்கப்படுகிறது.
நடப்பாண்டு சேர்க்கை இன்று துவங்குகிறது. மேலும், விவரங்களுக்கு 0431 2434542 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment