Thursday 28 November 2013

"யோகா செய்தால் மனமும் உடலும் திடப்படும்" 

"தேர்வு காலங்களில், தினமும் காலை, யோகா செய்யுங்கள்; இதனால், மனமும், உடலும் திடப்படும்" என மாணவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்கள் கூறினர்.


நேற்று நடந்த, "ஜெயித்துக் காட்டுவோம்" நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்கள் வழங்கிய அறிவுரைகள்:

தேர்வு காலத்தில், தினமும் காலை, யோகா செய்யுங்கள்; இதனால், மனமும், உடலும் திடப்படும். தேர்வு நடக்கும் போது பள்ளிக்கு ஒரு மணி நேரத்துக்கு முன் செல்லுங்கள். ஆசிரியர்களுக்கு புரியும் படி, தெளிவான கையெழுத்தில், விடைகளை எழுதுங்கள்.

குறிப்பிட்ட கேள்விக்கான பதில் தெரியவில்லை எனில், அடுத்த கேள்விக்கு சென்று விடுங்கள். பதில் தெரியவில்லை என்ற வேதனையோடு இருந்தால், ஒட்டுமொத்த தேர்வும் பாதிக்கப்படும். தேர்வு முடிந்த பிறகு, அன்று நடந்த தேர்வு குறித்து, சக மாணவருடன் விவாதிக்காதீர்கள்; இது, அடுத்த நாள் தேர்வை பாதிக்கும்.

சக மாணவர் தண்ணீர் குடிக்கச் செல்லும் போதோ, பறக்கும் படை வரும்போதோ, கவனத்தை சிதற விடாதீர்கள்; இதனால், போதிய நேரம் இல்லாமல் தவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

"துண்டு சீட்டுகளை கொண்டு செல்ல வேண்டும்" என்ற எண்ணம் கூட, மனதில் துளிர்க்க கூடாது. இதனால், ஒட்டுமொத்த வாழ்வும், பாதிக்கப்படும் சூழல் ஏற்படும். சாப்பிட்ட பின்னரே, தேர்வுக்கு செல்ல வேண்டும். இல்லையெனில், விபரீதம் நிகழ வாய்ப்புண்டு.

No comments:

Post a Comment